மத்மஹேஷ்வர்

	


		
 
	
 
5:51:09 AM         Monday, March 08, 2021

மத்மஹேஷ்வர்

மத்மஹேஷ்வர்
மத்மஹேஷ்வர் மத்மஹேஷ்வர் மத்மஹேஷ்வர் மத்மஹேஷ்வர் மத்மஹேஷ்வர்
Product Code: மத்மஹேஷ்வர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                             மத்மஹேஷ்வர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் உயரமான இடத்தில்  சௌகம்பா சிகரங்களின் அடிவாரத்தில்  சுமார் 3497 மீ உயரத்தில் அடர்ந்த காட்டில் இவ்வாலயம் அமைந்துள்ளது.  மத்மஹேஷ்வர் ஆறு உதயமாகும் இடத்திற்கு வெகு அருகிலேயே கடல் மட்டத்திலிருந்து 3289 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர் மற்றும் கல்பேஷ்வரர் ஆகிய ஐந்து இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள், கேதார்நாத்தில் இறைவனின் உடல் பகுதி, துங்கநாத்தில் கைகள், ருத்ரநாத்தில் முகம், மத்தியமகேஷ்வரில் தொப்புள் மற்றும் கல்பேஷ்வரில் தலைமுடியும் தோன்றியதாக நம்பிக்கை உள்ளது.  ஐந்து கேதாரங்களும் இமயமலையின் கொடுமுடியான  பனி மூடிய சிகரங்களான நந்தா தேவி, சௌகம்பா, கேதர்நாத், நீலகண்ட்  ஆகியவற்றில் அடிவாரத்தில் அமைந்துள்ளன. திருக்கேதாரம் மந்தாங்கினி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்ற கேதாரங்கள்  அலக்நந்தா மற்றும் மந்தாங்கினி பள்ளத்தாக்கிதிற்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளன.

தல சிறப்புகள் : இமாலயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மணிபூரக லிங்கம் இருக்கின்ற மத்தியமஹேஸ்வரில் ஐயனின் தொப்புள் வெளிப்பட்டது. பாண்டவர்களில் பீமன் இவ்வாலயத்தை கட்டி சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம். பார்வதி தேவி, அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சரஸ்வதிக்கு தனி சன்னதிகள் உள்ளன. இவ்வாலயத்தின் தண்ணீர் மிகவும் புனிதமானது ஒரு துளியை தலையில் தெளித்துக்கொண்டாலும் அது கங்கையில் நீராடியதற்கு சமம். இங்கு கர்நாடகாவை சார்ந்த லிங்காயத் பூசாரிகள் பூசை செய்கின்றனர். குளிர் காலத்தில் கோவில் மூடப்பட்டு உற்சவ மூர்த்தி ஊக்கிமத்திற்கு கொண்டு வரப்பட்டு பூசிக்கப்படுகின்றார். 

குளிர்காலத்தில் கேதார்நாத் மற்றும் மத்திய மகேஸ்வர் கோயில்களை 6 மாதங்கள் இங்கே வைத்து பூஜை செய்வர். மத்திய மகேஸ்வர், துங்கநாத், இன்திரியோ ஏரி ஆகிய இடங்களுக்குச் செல்ல உகிமத் மத்திய இடம். இந்த இடத்தில்தான் கிருஷ்ணனின் பேரன் அனிருத்துக்கும், அவர் மனைவி உஷாவுக்கும் திருமணம் நடந்தது. வனதர் என்பவரின் மகள்தான் உஷா. மன்னர் மாந்தாதா, ராமனின் பரம்பரையில் வந்தவர். இங்குள்ள சிவனின் பெயர் ஓம்காரேஷ்வரர். இந்த இடத்தை உஷாமத் எனவும் அழைப்பது உண்டு. இது சிவனின் தொப்புள் மற்றும் வயிற்றைக் குறிக்கும் தலமாகும்.

புராணக்கதைகளின்படி, சிவபெருமான் பாண்டவர்களை சந்திக்காமல் பூமியில் ஒளிந்து கொண்டபோது அவரது உடற்பகுதி பின்னர் இந்த மத்மஹேஷ்வர் ஸ்தலத்தில் வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயில் குளிர்காலத்தில் 6 மாதங்களுக்கு மூடப்படுகிறது. அச்சமயம் இக்கோயிலின் வெள்ளி தெய்வச்சிலைகள் உக்கிநாத் எனும் ஸ்தலத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த இடத்திலிருந்து காளி கோயில், கேதார்நாத், சரஸ்வதி குண்ட் மற்றும் சௌகம்பா சிகரம், நீலகண்ட சிகரம் போன்றவற்றும் யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.

ஊகிமத்திலிருந்து உனியான் ரான்சி, கௌண்தார் மத்யமஹேஸ்வர் கங்கா மற்றும் மர்ய்த்யேந் கங்கா நதிகள்  சங்கமம் ஆகும் பண்டோலி வழியாக மத்திய மஹேஸ்வர் நடைப்பயணம் சுமார் 19 கி.மீ ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ர பிரயாகை ஜில்லாவில், ருத்ர பிரயாகையிலிருந்து 41 வது கிலோ மீட்டரில் 1311 மீட்டர் உயரத்தில் உகிமத் கோயில் அமைந்துள்ளது. 

ஐந்து கேதாரங்களையும் ஒரே தடவையில் தரிசனம் செய்வது என்பது மிகவும் கடினம். சுமார் 170 கி.மீ நடைப்பயணம் அவசியம் மேலும் சுமார் 16 நாட்கள் கடினமாக நடைப்பயணம் செய்ய வேண்டி வரும். மேலும் தங்குமிடங்களும் உணவும் நாம் நினைப்பது போல் கிடைக்காது. இந்த யாத்திரைகளை கோடைக்காலமான  மே-ஜூன் மாதங்கள் அல்லது பருவ மழை முடிந்த செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் மேற்கொள்ளலாம் ஆனால் அப்போது  குளிருக்கு தகுந்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும். பஞ்ச கேதாரங்களையும் தரிசனம்   செய்தபின் பத்ரிநாதரை சாட்சிக்காக தரிசனம் செய்யவேண்டும்.

அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்

அருகிலுள்ள ரயில் நிலையம்   : ரிஷிகேஷ்

பேருந்து வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×