51. திருவெஃகா 
	


		
 
	
 
3:04:50 AM         Tuesday, February 18, 2020

51. திருவெஃகா

51. திருவெஃகா
51. திருவெஃகா 51. திருவெஃகா 51. திருவெஃகா 51. திருவெஃகா 51. திருவெஃகா 51. திருவெஃகா 51. திருவெஃகா
Product Code: 51. திருவெஃகா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                               திருவெஃகா (யதோக்தகாரி கோயில்)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மவாட்டத்தில் உள்ள சின்னக் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் சந்நிதிக்கு மேற்கேயும் அஷ்டபுயகரப் பெருமாளின் சந்நிதிக்கு எதிரிலுமாக உள்ளது

மூலவர்    :    யதோக்தகாரி, வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்
        
தாயார்    :    கோமளவல்லி நாச்சியார்
 
தீர்த்தம்    :    பொய்கைப் புஷ்கரிணி

விமானம்    :    வேதார விமானம்

மங்களாசாசனம்:    திருமழிசையாழ்வார் - 3 பாசுரங்கள்
            திருமங்கையாழ்வார் - 6 பாசுரங்கள்
            பொய்கையாழ்வார் - 1 பாசுரம்
            பேயாழ்வார் - 4 பாசுரங்கள்
            நம்மாழ்வார் - 1 பாசுரம்
மொத்தம்    :        15 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: இங்கு மூலவர் கணிகண்ணன் என்ற சீடனுக்காக ஊரை விட்டே புறப்பட்ட திருமழிசையாழ்வார் பகவானை அழைக்க பாம்பணையைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டு, பிறகு அவர் கிடக்கச் சொல்லி வேண்டிய போது, பாம்பணையை விரித்துப் படுத்ததால், இவருக்கு சொன்னவண்ணம் செய்த பெருமாள் (வடமொழியில் யதோக்தகாரி) என்று பெயர். மற்ற திவ்ய தேசங்களைப்போல் அல்லாமல் இங்கு பகவான் வலமிருந்து இடமாக சயனித்துள்ளார்.

சத்யவரதசேத்திரத்தில் பிரம்மா எம்பெருமான் தரிசனத்திற்காக சரஸ்வதியில்லாமல் தனியயே வேள்வி செய்ய ஆரம்பித்ததாகவும் அப்போது சரஸ்வதி, வேகவதிநதியாக வந்து வேள்வியை அழிக்க ஓடி வந்ததாகவும், இவ்வெள்ளத்தைத் தடுக்க பெருமாள் அணையென குறுக்கே சயனித்தாராம். அதனாலேயே பெருமாளுக்கு 'வேகாஸேது" என்ற பெயர் ஏற்பட்டது. வேகவதியணை--வெஃகணை--வெஃகா என்று மருவியது. முதலாழ்வார்கள் மூவரால் முதல்வரான பொய்கையாழ்வார் இங்கேயுள்ள பொய்கை புஷ்கரிணியில் ஒரு பொற்றாமரையில் அவதரித்ததாகவும் அதனாலேயே ஆழ்வாருக்கு அப்பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு. இங்கு எழுந்தருளி இருக்கும் பிள்ளைலோகாசாரியார் பெரும் புகழ் பெற்றவர். இந்த சந்நிதியில் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் சாதித்தார்.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 935 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0