48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)




	


	



























	




 




	








 




3:13:00 AM         Tuesday, February 18, 2020

48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)

48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)
48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்) 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)
Product Code: 48. திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                  திருப்பாடகம் (பாண்டவ தூதர் கோயில்)

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபத்தின் அருகில் இருக்கிறது. பாடு - மிகப் பெரிய, அகம்-கோயில் என்ற பொருளில் பாடகம் ஆயிற்று. கங்கைக் கொண்டான் மண்டபத்தின் அருகில் இந்த சந்நிதி உள்ளது.

மூலவர்    :    பாண்டவதூதர் (விசுவரூபம்) 

தாயார்    :    ருக்மிணி, சத்யபாமா

தீர்த்தம்    :    மத்ஸ்ய தீர்த்தம் 

விமானம்    :    சக்கரவிமானம், வேத கோடி விமானம்.

மங்களாசாசனம்:    திருமழிசையாழ்வார் - 2 பாசுரங்கள்
            திருமங்கையாழ்வார் - 2 பாசுரங்கள்
            பூத்தாழ்வார்    - 1 பாசுரம்
            பேயாழ்வார்    - 1 பாசுரம்
மொத்தம்    :    6 பாசுரங்கள்

தனிச்சந்நதிகள்:    அருளாளப்பெருமாள்
            எம்பெருமானார்
            சக்கரத்தாழ்வார்
            நரசிம்மர்

திருத்தலச் சிறப்புகள்: ஜனமேஸயமஹாராஜன் வைசம்பாயனரிடம் பாரத கதையைக் கேட்டு, ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களுக்காக ஹஸ்தினாபுரம் தூது சென்று விச்வரூபம் எடுத்ததைக் கேள்விப்பட்டு, அதை நேரில் சேவிக்க விரும்பிக் காஞ்சி வந்து, அச்வமேதயாகம் செய்து பூர்ணாஹ{தி ஆனதும் பகவான் பாண்டவதூத வேஷத்துடன் ஆவிர்பவித்ததாக புராண வரலாறு. முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்டதாக இங்கே உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.
        இத்தலத்தில் திருமழிசையாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் பாசுரங்கள் பாடியுள்ளனர். மணவாள மாமுனிகள் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளார். அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களின் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் அழகுத் திருமேனியுடன் காட்சியளிக்கும் தலம் 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே உள்ளது. 108 தலங்களில் நின்ற, அமர்ந்த, கிடந்த திருக்கோலங்களுக்கு தொண்டை நாட்டில் உள்ள திருஊரகம், திருப்பாடகம், திருவெஃகா ஆகிய தலங்களையே சிறப்பித்து ஆழ்வார்கள் கூறுகிறார்கள். மூலவரின் திருமுகத்தின் புன்சிரிப்பு விசேஷம்.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 935 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0