ஸ்ரீபட்டினத்தார்




	


	



























	




 




	








 




7:06:10 PM         Saturday, February 29, 2020

ஸ்ரீபட்டினத்தார்

ஸ்ரீபட்டினத்தார்
ஸ்ரீபட்டினத்தார் ஸ்ரீபட்டினத்தார் ஸ்ரீபட்டினத்தார் ஸ்ரீபட்டினத்தார் ஸ்ரீபட்டினத்தார் ஸ்ரீபட்டினத்தார் ஸ்ரீபட்டினத்தார் ஸ்ரீபட்டினத்தார் ஸ்ரீபட்டினத்தார் ஸ்ரீபட்டினத்தார்
Product Code: ஸ்ரீபட்டினத்தார்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

பட்டினத்தார்

இருப்பிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலத்தில் இருந்து சுமார் 12 கி.மீ, திருவொற்றியூரில் பட்டினத்தார் கோயில் அமைந்துள்ள சிவத்தலமாகும். 

மூலவர் : பட்டினத்தார் 

தல விருட்சம்: வில்வம் 

சிறப்புக்கள் : இத்தலத்தின் மூலவரான பட்டினத்தார் லிங்க வடிவில் உள்ளார். சித்தரான பட்டினத்தார் முக்தி பெற்ற இத்தலத்தில் சிவனாகவே வணங்கப்பெறுகிறார். இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள்.  மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப்பட்டது. கோபுரத்தில் விமானம் கிடையாது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம்  காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். நாகா பரணம் சாத்தப்பட்டு உள்ளது .சன்னதி மிகவும் தாழ்வாக இருக்கும். முகப்பில் 27 நட்சத்திர தீபம் விளக்கு காணப்படுகிறது. பட்டினத்தார் பிறந்த உத்திராட நட்சரத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பட்டினத்தாரும், அவருடைய சீடரான பத்ரகிரியாரும் திருவிடைமருதூர் தங்கியிருந்த பொழுது, சிவபெருமான் பத்ரகிரியாருக்கு முக்தி தந்தார். பட்டினத்தார் தனக்கு முக்தி தர வேண்டிய பொழுது, சிவபெருமான் பட்டினத்தாரிடம் ஒரு கரும்பினை தந்து, இக்கரும்பின் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதனையேற்ற பட்டினத்தார் பல்வேறு தலங்களுக்கு சென்றுவிட்டு திருவொற்றியூர் வரும் பொழுது நுனிக்கரும்பு இனித்தது. இத்தலத்திலேயே பட்டினத்தார் முக்தி பெற்றார்.

வாழ்க்கை வரலாறு : கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகனை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்.

அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள். அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.

பதினோராம் திருமுறையில் இவரது பெயர் பட்டினத்தடிகள் எனக் காட்டப்பட்டுள்ளது. எனினும், பட்டினத்தார், பட்டினத்துப் பிள்ளை, பட்டினத்துப் பிள்ளையார், திருவெண்காட்டு அடிகள்  என்னும் பெயராலும் இவர் குறிப்பிடப்படுகிறார். கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி,திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் 5 நூல்கள் இவரால் பாடப்பட்டவை.

திறக்கும் நேரம் : காலை  7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை  4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்து  இருக்கும். 

அருகில் உள்ள ரயில் நிலையம் :  சென்னை- சென்ட்ரல் 

அருகில் உள்ள விமான நிலையம் :   சென்னை 

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×