18. திருக்கண்ணங்குடி
	


		
 
	
 
4:35:14 PM         Sunday, March 29, 2020

18. திருக்கண்ணங்குடி

18. திருக்கண்ணங்குடி
18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி
Product Code: 18. திருக்கண்ணங்குடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                   திருக்கண்ணங்குடி                                                                                                                                                                                        

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கலுக்கு அடுத்துள்ள ஆழியூரின் தெற்கே சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. 

மூலவர் : லோகநாதன்  சியாமள மேனிப்பெருமாள்

உத்ஸவர் : தாமோதர நாராயணன் (இடது கரம் இடுப்பில் வைத்து)

தாயார் : லோகநாயகி. உத்ஸவர்: அரவிந்தவல்லி

தீர்த்தம் : சச்ரவண புஷ்கரிணி, நித்ய புஷ்கரிணி, எட்டு தீர்த்தக்கிணறுகள்

விமானம் : உத்பல விமானம்.

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : இங்கே மூலவர் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் திருக்கண்ணமங்கை திருக்கண்ணபுரம் கபிஸ்தலம் திருக்கோவிலூர் திருக்கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண சேத்திரங்களை கிருஷ்ணாரண்யம் என்று அழைப்பர். ஆறு காடு நகரம் ஆலயம் தீர்த்தம் இந்த ஜந்தினாலும் புகழ்பெற்ற இடமாவதால் பஞ்சபத்ரா என்றும் புராணங்கள் கூறுகிறது. 
  
திருத்தல புராணம் : வசிட்டர் கிருஷ்ண பக்தியின் வெண்ணையில் கிருஷ்ணனைப் போல் விக்ரகம் செய்து தமது பக்தி மேலீட்டால் வெண்ணெய் இளகி திரவமாகாமல் கட்டி வைத்து திவ்ய மங்கள விக்கிரமாகச் செய்து தியானத்தில் ஈடுபட்டு வழிபடுவாராம். இவரது பக்தியை வெகு நாளாகக் கண்ட கண்ணன் ஒருநாள் சிறுக்குழந்தை கோபாலனாக வடிவங்கொண்டு வசிட்டர் ஆரதனைக்குச் செய்து கொண்டிருந்த வெண்ணையை எடுத்து விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்க இதைக் கண்ட வசிட்டர் விரட்டிக் கொண்டே பின்னால் சென்றார். இந்தக் கிருஷ்ணாரண்யத்தில மகிழ மரத்தின் அடியில் மகாவிஷ்ணுவைக் குறித்து எண்ணற்ற ரிஷிகள் தவஞ்செய்து கொண்டிருந்தனர். இப்பகுதியில் கண்ணன் ஓடிவருவதை ஞானதிருஷ்டியினால் பார்த்த ரிஷிகள் கண்ணனைப் பக்தி எனும் பாசக் கயிற்றார் கட்டுண்டச் செய்து நிறுத்தினர். அவர்கள் பக்திக்குக் கட்டுண்டக் கண்ணன் வசிட்டர் என்னை விரட்டி வருகிறார் விரைவில் என்ன வரம் வேண்டும் எனக் கேளுங்கள் என்று ரிஷிகளிடம் கேட்டான் அவர்களோ நீ இங்கேயே எழுந்தருள வேண்டும் என்றனர். வேண்டுதலுக்கு இணங்கி நின்ற வேணுகானனை ஒரு நிமிட நேரத்தில் ஓடிவந்த வசிட்டர் அவன் பாதாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டார். இப்படிக் கட்டுண்ட கண்ணன் இருந்து அருள் கொடுக்கும் சேத்திரமே திருக்கண்ணங்குடி ஆகும்

 இங்கு ஊறாக்கிணறும் உறங்காப்புளியும் இப்போது இல்லை காயாமகிழ் (காய்ந்து பட்டுப்போகாத வரம் பெற்ற ஸ்தலவ்ருசம்) ஸந்நிதியின் பின்புறம் உள்ளது. இங்கு வசதிகள் எதுவும் இல்லை

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : சிக்கல்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×