03. திருக்கரம்பனூர்




	


	



























	




 




	








 




3:13:22 AM         Tuesday, February 18, 2020

03. திருக்கரம்பனூர்

03. திருக்கரம்பனூர்
03. திருக்கரம்பனூர் 03. திருக்கரம்பனூர் 03. திருக்கரம்பனூர் 03. திருக்கரம்பனூர் 03. திருக்கரம்பனூர் 03. திருக்கரம்பனூர் 03. திருக்கரம்பனூர்
Product Code: 03. திருக்கரம்பனூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                   03 திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)                                                                                                      

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சியிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் திருவரங்கத்திலிருந்து கொள்ளிட நதியைக் கடந்து வடக்கே சென்றால் 3 கி.மீ தொலைவிலும் இயற்கை எழிலுடன் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

மூலவர் : புருஷோத்தமன்  புஜங்கசயனம்,   கிழக்கே திருமுக மண்டலம்

தாயார் : பூர்ணவல்லி,  பூர்வாதேவி

தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்

விமானம் : உத்தியோக விமானம்

மங்களாசாசனம் : திருமங்கை ஆழ்வார் - 1பாசுரம்

திருத்தலச் சிறப்புகள் : திருமாலின் திருமார்பில் லட்சுமியும் நாபியில்  பிரம்மாவும் அமைந்துள்ளார்கள். இக்கோவிலில் விமானம் செவ்வடிவில் அமைந்து பல சிற்பங்களைத் தாங்கி இருப்பது விசேஷம்.


திருத்தல வரலாறு : பிரம்ம தேவனுக்கும் சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு சமயம் நிஷ்டையில் அமர்ந்திருந்த பார்வதிதேவி சற்றே விழித்து நோக்கும் போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பிரம்மனைத் தனது பெருமான் என்று எண்ணிப் பாதபூசை செய்தாள். தற்செயலாக அதைப் பார்த்த சிவபெருமான் சினந்து பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளியெறிந்து விட்டார். இதனால் "பிரம்மஹத்தி" தோஷம் ஏற்பட்டு சிவபெருமான் கபாலம் ஏந்தி பிச்சை எடுத்து பல ஸ்தலங்களைத் தரிசித்தார்  இதனால் இங்கு சிவபெருமான் 'பிச்சை ஆண்டவர்' என்று அழைக்கப்படுகிறார். 
 
சிவபெருமான்  இந்த சாபத்திலிருந்து விடுபடவேண்டுமென்றால் கபாலத்தில் உணவு முழுவதுமாக நிரம்பவேண்டும். அதனால் சிவபெருமான் தான் செய்த பாவத்தை போக்குவதற்காக அனைத்து  திவ்ய தேசங்களுக்கும் சென்றார். அப்பொழுது  ஸ்ரீ மகாலெட்சுமி அவரது கபாலத்தில் உணவினை நிரம்பச் செய்து அவருக்கு சாபவிமோச்சனம் அளித்தார் என்று தலப்புராணத்தில் கூறப்படுகிறது.

பிரம்மன் ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டுச் சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார். பிரம்மனுக்குக் காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து இவ்விடத்தே வழிபடக் கூறினார். ஆதலால் இங்குப் பிரம்மனுக்குத் தனிக் கோயில் உள்ளது. மூம்மூர்த்திகளும் மூத்தேவியர்களுடன் ஒரே கோவிலுக்குள் எழுந்தருளியுள்ள இந்த திருக்காட்சி வேறெங்கும் காண்பதற்கு அரிதாகும். எனவே திருமூர்த்தி சேத்திரம் எனவும் வழங்கப்பெறுகின்றது. பெருமாள் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்று இத்தலம் அழைக்கப்பட்டுப் பிறகு கரம்பனூர் ஆயிற்று. திருமங்கையாழ்வாரால் உத்தமன் என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோயில் என்று பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் மூம்மூர்த்திகளும் தம்பதி சமேதராக உள்ள ஓரே ஸ்தலம்.

தனிச்சிறப்பு : சிவன்  பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே கோவிலில் எழுந்தருளியுள்ளனர்.
 நாகலிங்க பூ என்று புகழ்பெற்ற கிடைப்பதற்கு அரிதான பூ இங்கு கிடைக்கும். கோயிலில் இந்த விஷேச பூக்களை கொண்டு பூஜை செய்வது வழக்கம்.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : திருச்சி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 935 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0