உறையூர்

	


		
 
	
 
1:19:07 AM         Sunday, April 11, 2021

உறையூர்

உறையூர்
உறையூர் உறையூர் உறையூர் உறையூர்
Product Code: உறையூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                         உறையூர் , தான்தோன்றீஸ்வரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  உறையூர் என்ற ஊரில் அமைந்துள்ள கோவிலாகும். 

இறைவன் : தான்தோன்றீஸ்வரர்

இறைவி  : குங்குமவல்லி  

தல வரலாறு : தானே தோன்றியவர் என்பது பொருள்கொண்ட ”தான்தோன்றீ” என்ற சொல்லில் இருந்து, இக்கோயிலின் முக்கியக் கடவுளான சிவன் ”தான்தோன்றீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். . இந்து புராணத்தின்படி, சோழ ராணி காந்திமதி சிவனின் தீவிர பக்தர் ஆவார். தாயுமானவர் சுவாமி கோவிலில் உள்ள சிவனை வழிபட்டாா். அவர் கர்ப்பமாக இருந்தபோது,  அவரால்  மலையில் அமைந்துள்ள கோயிலுக்கு ஏற முடியவில்லை. சிவபெருமான் ராணியின் பக்தியினால் மகிழ்ச்சி அடைந்து, லிங்க வடிவத்தில் இவ்விடத்தில் அவளுக்கு காட்சியளித்து சுகப்பிரசவத்திற்கு  ஆசிா்வதித்ததாக நம்பப்படுகிறது.

உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் எனும் மன்னன், இந்திரனின் அனுமதியோடு நாக கன்னையான காந்திமதியை மணம்புரிந்தார். காந்திமதி சிறந்த சிவபக்தை. அவர் கற்பவதியாக இருக்கும் போது மலைக்கோட்டை தாயுமானவரை தரிசிக்க எண்ணம் கொண்டார். அதற்காக புறப்பட்டு செல்கையில் அவர் உடல் சோர்வுற்றது. இறைவனை காண முடியாமல் தன்னுடைய உடல் வாட்டுகிறதே என்றெண்ணி கண்ணீர் விட்டு வேண்டினார். அவருடைய பக்தியில் மனமிறங்கி சிவபெருமான் தாயுமானவராக அவருக்கு காட்சியளித்தார்.

கோவில் அமைப்பு : இக்கோவில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்தமையாகும். இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது. கி.மு 885 ஆம் ஆண்டு சோழா் கால கல்வெட்டுகள் இருந்தன.  தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் ஒரு வெளிப்பிரகாரமும் இரண்டு அடுக்கு விமானமும் உள்ளது. கோயிலின் மையத்தில் அமைந்துள்ள  தான்தோன்றீஸ்வரர் கருங்கல்லால் ஆன லிங்க வடிவத்தில் கிழக்கு முகமாக காட்சியளிக்கிறாா். முருகன், நந்தி மற்றும் நவக்கிரகம் ஆகியவை மண்டபத்தில் அமைந்துள்ளன. சன்னதிக்கு அருகில் தட்சிணாமூர்த்தி, துர்கா மற்றும் சண்டிகேஸ்வரர்  ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. தான்தோன்றீஸ்வரர் துணைவியான குங்குமவள்ளி அவரது இரண்டு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஆகியவற்றால் சித்தரிக்கப்பட்டு வடக்கு முகமாக காட்சியளிக்கிறாா். கோயில் கருங்கல்  சுவர்களால் சூழப்பட்டுள்ளது.

சோமவாரம் மற்றும் சுக்ரவாரம்  போன்ற வாராந்திர சடங்குகளும்,  பிரதோசம், அமாவாசை, கிருத்திகை, பெளர்ணமி, சதுர்த்தி போன்ற மாத சடங்குகளும் நடைபெறுகின்றன. இத்தளத்தின் அம்மனான குங்குமவல்லி தாயாருக்கு ஆண்டுக்கு இரு முறை வளைகாப்பு நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் தை 3வது வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மூன்று நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. முதல் நாள்  கர்ப்பிணிகள் அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களை காணிக்கையாக தருவர். இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க வளையல்களை காணிக்கையாக தருவர். மூன்றாம் நாள் திருமண தடை, ஜாதக தோசம் உள்ளவர்கள் வளையல்களை காணிக்கையாக தருவர். இந்த மூன்று நாட்களிலும் பூசைக்குப் பின்னர் காணிக்கையாக கொடுத்த பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக தரப்படும். களத்ரதோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானபாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்காக வளைகாப்பில் பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

காலை 5.30 மணி முதல்  இரவு 8.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள ரயில் நிலையம்   :  திருவாலங்காடு , திருச்சிராப்பள்ளி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×