பல்குனி 
	


		
 
	
 
5:31:29 PM         Saturday, September 26, 2020

பல்குனி

பல்குனி
பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி பல்குனி
Product Code: பல்குனி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அமைவிடம் : கயா பீகார் மாநிலத்தில் பாட்னாவில்ருந்து 91 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. காசியிலிருந்து கயா 230 கி.மீ  தொலைவில் உள்ளது.  பல்குனி நதிக் கரையில் அமைந்துள்ள விஷ்ணு கோயில் அழகான சிறிய நகர்.  விந்திய மலைச் சாரலுக்கு வடக்கே மகத நாட்டிலே சம்பகம் என்னும் பெயர் கொண்ட இன்பத் தேன் பாயும் மது வனத்திலே ஆனந்த மலையெனத் திகழும் கோலாகல பர்வதத்திலே இந்தத் திருத்தலம் இருக்கிறது. இங்கே இறைவன் கதாதரராகத் கொலு வீற்றிருக்கிறார்.

சிறப்புகள் : தாய், தந்தை மறைந்த பிறகு, வாழ்க்கையில் ஒரு தடவையாவது, கயா சென்று ச்ராத்தாதிகளை செய்வது புத்ரனின் கடமை. கயா ச்ராத்தம் பித்ருகளுக்கு பேரானந்தத்தையும், திருப்தியும் அளிப்பது மட்டுமல்லாமல் ஈடுபடும் கர்த்தாவின் குடும்பத்திற்கும்ச்ரேயஸ்உண்டாகிறது.வைஷ்ணவத் ஸ்தலங்களில் விஷ்னுபாத கோவில் மிகவும் புனிதமானது முன்னோர்களுக்கு பிண்டதானம் அளிக்க முக்கியமான ஸ்தலம். பல்குனி நதிக்கரையில் விஷ்ணு பகவான் ஆலயம் அமைந்துள்ளது.

கயா ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின் சாந்நித்தியம் உள்ளது.இங்கு தங்கி நீத்தார் கடன் இயற்ற பல வசதியான தங்குமிடங்கள் விஷ்ணு பாத கோவில் அருகிலேயே உள்ளன. கயாவில் நீத்தார் கடன் செய்தால் முன்னோர்கள் முக்தியடைகிறார்கள் என்பது ஐதீகம். கயாவில் வருடம் முழுவதும் 365 நாட்களும் பித்ரு சிரார்த்தம் செய்விக்கப்படுகிறது. கயா நதிக்கரையில் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்துப் படைப்பது மிகவும் புனிதமான சடங்கு. கயா சென்று பிண்டம் படைப்பது சிறப்பு-நீத்தார் கடன்” என்று போற்றுகிறது.

கயாவைத் தவிர வேறெங்கு ஸ்ரார்த்தம் செய்ப்பட்டாலும், அதன் நிறைவில், ‘கயாவில் செய்த பலன் கிடைக்கட்டும்’ என்று பிரார்த்தித்து, அக்ஷய வடம் இருக்கும் திசை நோக்கி சில அடிகள் நடப்பது சம்பிரதாயமாக இருக்கிறது.

கயாசுரன் (கயா) : கயாவில் பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் வழிபாடு செய்து, பிண்டம் வைக்க முன்னோர்கள் முக்தி அடைவார்கள் என்பது நம்பிக்கை. இப்படியொரு வரத்தைக் கேட்டுப் பெற்றவன் கயாசுரன்.

 கயாசுரன் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். விஷ்ணு அவன் முன் தோன்ற, கயாசுரன், “என்னுடைய உடல் எல்லா தீர்த்தங்கள், மானிடர்கள், முனிவர்கள் தேவர்கள்,ஆகிய அனைவரைக் காட்டிலும் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும் ” என்று வரம் கேட்க, விஷ்ணுவும் அவ்வாறே அருள் புரிந்தார்.அதுமுதல் மக்கள் பலரும் கயாசுரனின் உடலைத் தொட்டு தங்கள் பாவங்களைக் போக்கிக் கொண்டனர். இதனால் எமதர்மராஜனின் பணி பாதிக்கப்பட்டது. பூமியில் சுமை அதிகரித்தது. எமன் பிரம்மாவிடம் முறையிட, விஷ்ணு, பிரம்மாவிடம் “ நீ கயாசுரனின் சென்று உன் உடல் பவித்ரமானது. அதில் யக்ஞம் செய்ய வேண்டும் எனக் கேள்” என்றார். பிரம்மாவும் அதன்படி சென்று கயாசுரனிடம் கேட்க, அவன், ”ஒரு நல்ல காரியத்துக்கு என் உடல் பயன்படுமானால் அது எனக்கு மகிழ்ச்சியே” என்று கூறி வடக்கே தலை வைத்து, தெற்கே கால் நீட்டி தன் உடலை கீழே கிடத்தினான். அவனது உடல் மீது பிரம்மா வேள்வியைத் துவக்கினார்.

 வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அசுரனின் தலை அசையத் துவங்கியது.பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் எமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. விஷ்ணு தன் கதாயுதத்தால் அவன் மார்பை அழுத்தி, தனது பாதத்தை அவன் மீது வைத்து அவன் தலை ஆட்டத்தை நிறுத்தி அவனை பாதாள லோகம் அனுப்பினார். கயாசுரன், ”இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்பவர் அனைவருக்கும் எந்தப் பாவமும் அண்டாமல் முக்தி கிடைக்க வேண்டும்”

இந்தப் புனிதமான க்ஷேத்திரம், தம் பெயராலேயே வழங்கப்பட வேண்டும்

பித்ருகர்மாக்கள் நிறைவேறும் புனிதத் தலமாக இது திகழ வேண்டும். இங்கு வரும் அனைவரும், தம் தாய், தந்தையருக்கு மட்டும் அல்லாது, தமக்குத் தெரிந்தவர், அறிந்தவர், தூரத்து உறவினர், நண்பர்கள், வளர்ப்புப் பிராணிகள் முதலிய யாவருக்கும் பிண்டம் அளித்து அவர்களை நற்கதி அடையச் செய்ய வேண்டும். எந்த நாளில் பிண்டங்கள் ஸ்ரீவிஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையோ அன்று தனக்கு மீண்டும் உயிர் பிச்சை அளிக்க வேண்டும் என்றும் வேண்டினான். அவன் வேண்டுகோள்கள் நிறைவேறும் என்று ஸ்ரீவிஷ்ணு உறுதியளித்தார். அது முதல் இங்கு பிண்டம் வைத்து முன்னோர்களை வழிபாடு செய்வது தொடர்கிறது.

இங்கு ஒவ்வொருவரும் தம்தம் தாய், தந்தையருக்கு மட்டுமல்லாது, தெரிந்தவர் அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் ஸ்ரார்த்தத்தில், தாய், தந்தை வழிகளில் மூன்று தலைமுறையினருக்காக,  மூன்று பிண்டங்கள் மட்டுமே அளிக்கப்படும். பிரயாகையிலும், காசியிலும் தீர்த்த ஸ்ரார்த்தத்தின் போது 16 பிண்டங்கள் அளிக்கப்படும். ஆனால் கயாவில் மட்டும் 64 பிண்டங்கள் அளிக்கப்படும். இதில் 32 பிண்டங்கள் தாய்க்கும், 16 பிண்டங்கள் மூதாதையருக்காகவும், மீதி 16, மற்ற உறவினருக்காகவும் அளிக்கப்படுகிறது.

முதலில் பல்குணி நதி, பின் விஷ்ணு பாதம், அதன் பின் அக்ஷயவடம் ஆகிய இடங்களில் பிண்டம் அளிக்க வேண்டும். கயையில் தங்கள் முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்கள், ஆசையுடன் வளர்த்த மிருகங்கள், செல்லப் பிராணிகள், மரம், செடி, கொடிகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் பிண்டத்தால் அவர்கள் நற்கதி பெறுவார்கள்.

புராண வரலாறு: பல்குணி நதி நதி பெயரே தவிர, வறண்ட பூமி தான். ஆங்காங்கே ஊற்றுகள் இருக்கிறது. ஒரு படித்துறையில், தேயிலைத் தோட்டத்தில் வைக்கும் ஸ்ப்ரிங்ளர் போல் அமைத்து நீர் தெளிக்கிறார்கள்.     ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், சீதா தேவியும் கயாவில் சிரார்த்தம் செய்ய வந்த போது, ஸ்ரீ ராமர், அனுஷ்டானங்களை முடித்து விட்டு வருகிறேன்’ என்று சென்று விட்டார். பல்குணி நதியின் கரையில், ஸ்ரீராமருக்காக, சீதா தேவி காத்திருந்த வேளையில்,  திதி கொடுக்கும் நேரம் நெருங்கி விட்டது.

ஸ்ரார்த்த சமயம் நெருங்கியதும், தசரதர் சீதை முன் தோன்றினார். தமக்குப் பசி எடுப்பதாகவும், தம்மால் காத்திருக்க முடியாதென்றும் கூறினார். சீதை, உருண்டைகள் பிடித்து, தன் மாமனாருக்கு அளித்து, தன்னை ஆசீர்வதிக்க வேண்டினாள். தசரதரும் மகிழ்வோடு அதனை ஏற்றார்.

அச்சமயம், அங்கிருந்த பல்குணி நதி, அக்ஷய வடம் (ஆலமரம்), துளசிச் செடி, ஒரு பசு, மற்றும் அந்தணர் ஒருவர் ஆகியோர் அந்த நிகழ்வுக்கு சாட்சிகளாக நின்றனர். ஸ்ரீராமர் முறைப்படி ஸ்ரார்த்த கர்மாவை நிறைவேற்றினார். ஆனால் தசரதர் வந்து பிண்டம் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘தாம் செய்த கர்மாவில் ஏதேனும் தவறு நிகழ்ந்ததோ’ எனும் பதற்றம் ஸ்ரீராமருக்கு. சீதை, தான் செய்த செயலைக் கூறினாள். ‘நீ செய்த செயலுக்கு யார் சாட்சி?’ என்று  கேட்டார்.

பல்குணி நதி, துளசிச் , பசு, அந்தணர் முதலியோர், சீதையின் செயலை தாம் பார்க்கவில்லை என பொய்யுரைத்தனர். அக்ஷய வடம்எனும் ஆலவிருக்ஷம் மட்டும், சீதையின் சொல்  உண்மையென்றுசொன்னது . சீதைக பொய்யுரைத்த பல்குணி நதி, துளசி, பசு, அந்தணர் முதலானோருக்கு சாபமிட்டாள். கயாவில் பல்குணி நதி எப்போதும் வற‌ண்டு ஊற்றுகள் மட்டுமே இருக்கும் , கயாவில் துளசி முளைக்காது, பசுவின் பின்பாகம் மட்டுமே பூஜிக்கப்படும் என்றும், கயையில் வாழும் அந்தணர்கள், தாம் கற்ற வித்தையை விற்று வாழவேண்டிய நிலை உருவாகும், எவ்வளவு கொடுத்தாலும் அதனால் அவர்கள் திருப்தியில்லாமல் வாழ்வார்கள் என்றும் சாபம் தந்தாள். பல்குணி நதி எதிரே சீதா மாதா ஆலயம் உள்ளது.

 பல்குணி நதிக்கரையில் விஷ்ணுதலம்; விஷ்ணுவின் முன்பு விஷ்ணு பாதம், விஷ்ணு கோவில் வளாகத்தில் அக்ஷய வடம் என ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.

விஷ்ணுபாதம்: விஷ்ணு பாதக் கோவிலில் திதி முடிந்ததும், அங்கு அர்ப்பிக்கப்பட்ட பிண்டங்களை, ஒரு தாமரை இலையில் எடுத்துக் கொண்டு, ஸ்ரீவிஷ்ணு பாதம் பதிக்கப்பட்ட சந்நிதியை நோக்கிச் சென்று, அங்கு விஷ்ணு பாதத்தில் அர்ப்பணம் செய்வர்.  வெள்ளிக் கவசம் சாற்றப்பட்ட தொட்டி போன்ற எண்கோண அமைப்பினுள் விஷ்ணுபாதம் இருக்கிறது. விஷ்ணு பாதத்திற்கு நேராக ஸ்ரீ விஷ்ணுவின் சந்நிதானம் இருக்கிறது. ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு சந்நிதகள் இருக்கின்றன.

ஒரு பெரிய கூடத்தில் ஹோமத்துடன் கூடிய சிரார்த்தம் ஆரம்பமாகியது.  இங்கும் பிண்டங்கள் அர்ப்பணம் செய்வார்கள்.  அதன் பின், புது வேட்டிகளை அணிந்து, பெரிய வரிசையில் அமர்ந்திருக்கும் வைதீகர்களுக்கு உணவிட வேண்டும். ஒவ்வொரு தம்பதிக்கும் இரண்டு வைதீகர்கள் என்ற கணக்கு. முதலில் பெண்கள் அனைவரும் சேர்ந்தே, அனைத்து வைதீகர்களுக்கும் பரிமாறி விட்டு, அதன் பின் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வைதீகர்களைக் கவனித்துப் பரிமாற வேண்டும்.

அக்ஷய வடம்:அக்ஷய வடத்தை, யுக யுகாந்தரங்களுக்கு நீடுழி வாழவாழ்த்தி, யுகங்களின் முடிவில் பிரளயம் தோன்றும் போது,அக்ஷயவடத்தில் இலையிலேயே, பரமாத்மா குழந்தை வடிவில்தோன்றுவார், அவரது திருவடிகளில் உலகங்களனைத்தும் லயமாகும்என்றும் அருளினாள்.கயாவிற்கு வருவோர் அக்ஷய வடத்திலும்பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள். அப்போது தான் கயாவில்செய்யும் ஸ்ரார்த்தத்தின் பலன் கிடைக்கும் என்றும் ஆசீர்வதித்தாள். புத்த கயா சென்று புத்தரையும் போதி-மரத்தையும் தரிசனம் செய்யலாம்.

 வழிபடும் முறை: முதல் முப்பத்திரண்டு உருண்டைகளை பல்குனி ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், மீன்களுக்கு உணவாகும். இரண்டாவது முப்பத்திரண்டு உருண்டைகளை கயாசுரன் மார்பில்மகாவிஷ்ணுவின் ஒரு பாதம் மீது ஒவ்வொரு உருண்டையாக நமது உறவினர்களின் பெயரைச் சொல்லி சொல்லி விட வேண்டும் மூன்றாவது முப்பத்திரண்டு உருண்டைகள் கோயிலுள்ளே இருக்கும்ஆலமரத்தின் வேர்களில் இடவேண்டும்.இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி காசியிலும் ,கடைசிப்பகுதி இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.

நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.

பயண விபரம்கயா

விமான நிலையம் :   கயா 7 கி.மீ

ரயில் நிலையம் :  கயா 5  கி.மீ

பேருந்து வசதி  : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

     

      


 


 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×