அனகாபுத்தூர்

	


		
 
	
 
11:52:16 PM         Saturday, June 12, 2021

அனகாபுத்தூர்

அனகாபுத்தூர்
அனகாபுத்தூர் அனகாபுத்தூர் அனகாபுத்தூர் அனகாபுத்தூர் அனகாபுத்தூர் அனகாபுத்தூர் அனகாபுத்தூர் அனகாபுத்தூர் அனகாபுத்தூர் அனகாபுத்தூர்
Product Code: அனகாபுத்தூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                அனகாபுத்தூர், அகத்தீசுவரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில்கீழ் திசையில் அமைந்துள்ள குன்றத்தூரை அடுத்து அமைத்துள்ளது ஆனைகளைப் பாதுகாத்து வந்ததால் இவ்வூர் ஆனைகாபுத்தூர் என்று முன்னர் அழைக்கப்பட்டது.

இறைவன் : அகத்தீசுவரர்

இறைவி : ஆனந்தவல்லி

தலச் சிறப்புகள் : இத்தல ஆவுடையார் வட்டவடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்குள்ள சிவன் சன்னதி கிழக்குப் பார்த்த நிலையில் அமைந்துள்ளது. மூலவர் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். இறைவடன் ஆனந்தத்தை அள்ளி வழங்கும் தாயார் ஆனந்தவள்ளி அம்பாள் தெற்கு நோக்கி அருளுகின்றாள். அம்பாள் கருவறையில் பாச அங்குசம், மேற் கைகளில் ஏந்தி மற்ற திருக்கரங்களால் அபய வரதம் காட்டிய தாய் அழைப்பது போன்று பக்தர்களை அழைக்கும் வடிவழகோடு நின்ற திருகோலத்தில் அருள் பாலிக்கிறாள்.

கோயில் அமைப்பு : ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. ராஜ கோபுரத்தின் உட்புறம் தென்புறத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகிய அமைப்புகளைக் கொண்டு கோயில் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளனர். அருகே பைரவர் உள்ளார். சனீசுவர சன்னதி காணப்படுகிறது. கோஷ்டத்தில் தென்புறம் விநாயகரும் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும் துர்க்கையும் உள்ளனர். இக்கோயிலைச் சுற்றி சப்த கன்னியர்களுக்கு கோயில்கள் உள்ளன. இக்கோயிலுடன் இணைந்து ஆலவட்டம்மன் என்றும் அடஞ்சியம்மன் என்றும் அழைக்கப்படும் கெங்கையம்மன் மற்றும் பச்சையம்மன் கோயில்கள் உள்ளன.

ஆலய திருச்சுற்றில் விநாயகர், வள்ளி, தெய்வானை உடனாகிய முருக பெருமாள் மேற்பால் அருளாட்சி செய்கின்றனர். ஈசான பாகத்தில் நவ கோலங்களும். பைரவரும் அமைந்திருக்கின்றனர். தனியாக சனீஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக கருவறை சுற்றில் தென்பால் விநாயகரும், தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அமைந்திருக்கின்றனர். இங்கு தண்டேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. காமிக, காரண ஆகமங்களின்படி இக்கோவில் அமையப் பெற்றுள்ளது. கருவறை அந்தராளம், அர்த்த மண்டபம், முக மண்டபம் போன்ற மண்டப அமைப்புக்கள் அமைந்துள்ளன. 

தல வரலாறு : பல்லவன் காலத்தில் இவ்விடம் யானைகள் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், இவ்வூர் அருகே அடையாறும், அதனை சார்ந்த மடுவும் யானைகளை பாதுகாக்கப்பட்டு உகந்ததாய் இருந்துள்ளது. இறைவன், பார்வதியை திருமணம் செய்த காலத்தில் தென் கோடியாகிய தென்னாடு உயர்ந்தது. வடகோடியாகிய இமயம் தாழ்ந்ததாம். அதனை சமன் செய்ய இறைவன், அகத்திய மாமுனியை தென்னாடு அனுப்பினார். சிவனை ஆராதிக்கும் வழக்கமுடைய அகத்தியர் தொன்னாடு அடைந்த போது, பல இடங்களிலும் தங்கி சிவ பூஜை செய்துள்ளார்.அதன்படி இவ்வூரிலும் அகத்தியர் பூஜை செய்துள்ளார். அதனாலேயே இவ்வூர் இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. எனவே இது அகத்திய முனிவர் பூஜித்த தலமாகும். மேலும், பாண்டவர்கள் வனவாசத்தின் போதும், தீர்த்த யாத்திரை செய்த போதும், தென்னாட்டில் பல இடங்களில் தங்கி இறைவனை பூஜித்துள்ளனர். அவ்வாறு அவர்கள் பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இவ்வூரில் பாதுகாக்கப்பட்டு வந்த சில யானைகள் அருகிலுள்ள மடுவின் நீரை முகந்து அபிஷேவித்தும், மடுவின் கரையில் அமைந்த நந்தவனமான மலர்களை தூவியும் அர்ச்சித்து பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

தீராத நோய்கள் தீர, தொழில் அபிவிருத்தி, சந்தன பாக்கியம் பெற இங்கு ஒரு மண்டலம் வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பது இத்தலத்தின் பெரும் சிறப்பாகும். சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×