5. பெரும்புலியூர்

	


		
 
	
 
10:39:50 PM         Tuesday, January 19, 2021

5. பெரும்புலியூர்

5. பெரும்புலியூர்
5. பெரும்புலியூர் 5. பெரும்புலியூர் 5. பெரும்புலியூர் 5. பெரும்புலியூர் 5. பெரும்புலியூர் 5. பெரும்புலியூர் 5. பெரும்புலியூர் 5. பெரும்புலியூர் 5. பெரும்புலியூர்
Product Code: 5. பெரும்புலியூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                   திருப்பெரும்புலியூர்-  வியாக்ரபுரீஸ்வரர் கோவில் 

திருத்தல இருப்பிடம்  : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள திருநெய்த்தானம் தலத்திலிருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

சுவாமி  : வியாக்ரபுரீஸ்வரர்

அம்பாள்  : சௌந்தர நாயகி

தீர்த்தம்  : காவிரி

பதிகம் : திருஞானசம்பந்தர் 

ஆதிசேடனும் வியாக்ரபாத, பதஞ்சலி முனிவர்கள்  சிவபெருமானின் கூத்தினைக் காண மிக ஆவல் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் தைப்பூச நாளன்று வந்து தரிசிக்கும்படியாக சிவபெருமான் கூறினார். மேலும்  அவர்கள் முன்பாக நடன தரிசனமும் தந்து அவர்களுக்கு அருளினார். அப்போது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மோட்சத்தை வேண்டி சிவனைத் தொழுது நின்றார்கள். அப்போது சிவபெருமான் ஒன்பது புலியூரைத் தரிசித்து, கடைசியாக திருவரங்கத்தில் யாத்திரையை நிறைவு செய்துகொள்ளுமாறுக் கூறினார். திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாளும், சிதம்பரத்தில் உள்ள நடராஜரும் ஒரே பரம்பொருளின் இரு வடிவங்களாகும். 
 
வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் புலியூர்களையும் தரிசித்த பின்னர் இருவரும் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதரைத் தரிசித்துவிட்டு, பின்னர், திருப்பட்டூர் சென்று அங்குள்ள பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மாவையும் வணங்கி ஜீவ சமாதி அடைந்தார்கள்.

 

சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 53வது சிவத்தலமாகும். கோபுரத்தின் மீதுள்ள சிற்பங்கள் பழமையானவை. கீழ்ப்பகுதி கருங்கற்கலாலும், மேற்புறம் சுதையாலும் ஆனது. மேலும் கோயிலை நாடறியச் செய்த மகான் சுந்தரசுவாமிகளின் திருவுருவச் சிலை உள்ளது. நவகிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறு அமைந்திருக்கிறது.

மூலவர் கிழக்கு நோக்கி  சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி சுதையாலும் ஆனது.அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நின்றநிலையில் அம்பாள் அருட்காட்சி தருகிறாள். கோஷ்ட மூர்த்தங்களாக தென் சுற்றில் தட்சிணாமூர்த்தியும், மேற்குச் சுற்றில் வழாக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். வடக்குச் சுற்றில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. நடராஜர் சந்நிதியில் ஒருபுறம் வியாக்ரபாதரும், மற்றொரு புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர். முருகப்பெருமான் இத்தலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

பஞ்ச புலியூர்த்தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும். மற்ற தலங்கள் திருப்பாதிரிப்புலியூர்,பெரும்பற்றப்புலியூர் எருக்கத்தம்புலியூர்,ஓமாம்புலியூர். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்த வீயாகரபாதர் வழிபட்ட தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும்.

கோவில் அமைப்பு : இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிகப் பழைமையானவை. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது.  பிரகாரத்தில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, நால்வர், அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவகிரகம், சோமாஸ்கந்தர், வாராகி, பைரவர், சூரியன், சந்திரன், நந்தி, நடராஜர் சன்னதிகள் உள்ளன. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும். அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார். இலிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 

புது வாகனம் வாங்குபவர்கள் பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து, மாலை சாற்றி வழிபாடு செய்தால், எந்த விபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தினந்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம்   : திருவையாறு, தஞ்சாவூர்

பேருந்து வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×