2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்)

	


		
 
	
 
1:36:29 PM         Friday, May 14, 2021

2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்)

2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்)
2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்) 2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்) 2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்) 2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்) 2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்) 2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்) 2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்) 2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்) 2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்)
Product Code: 2. திருப்பாதிரிப் புலியூர் - (வடபுலியூர்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        திருப்பாதிரிபுலியூர்- பாடலீஸ்வரர் கோவில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூரின் ஒரு பகுதியாக இத்தலம் அமைந்துள்ளது. திருப்பாதிரிப் புலியூர் ரயில் நிலையம் அருகே இத்தலம் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

சுவாமி : பாடலேசுவரர்,  தோன்றாத்துணை நாதர், கன்னி வனநாதர், சிவக்கொழுந்தீசர், உத்தார நாதர்.

அம்பிகை : பெரிய நாயகி, தோகைநாயகி, அருந்தவ நாயகி 

தலமரம் : பாதிரிமரம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், சிவகர தீர்த்தம், கெடிலம்

ஆதிசேடனும் வியாக்ரபாதர்பதஞ்சலி முனிவர்கள் சிவபெருமானின் கூத்தினைக் காண மிக ஆவல் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் தைப்பூச நாளன்று வந்து தரிசிக்கும்படியாக சிவபெருமான் கூறினார். மேலும்  அவர்கள் முன்பாக நடன தரிசனமும் தந்து அவர்களுக்கு அருளினார். அப்போது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மோட்சத்தை வேண்டி சிவனைத் தொழுது நின்றார்கள். அப்போது சிவபெருமான் ஒன்பது புலியூரைத் தரிசித்து, கடைசியாக திருவரங்கத்தில் யாத்திரையை நிறைவு செய்துகொள்ளுமாறுக் கூறினார். திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாளும், சிதம்பரத்தில் உள்ள நடராஜரும் ஒரே பரம்பொருளின் இரு வடிவங்களாகும்

வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் புலியூர்களையும் தரிசித்த பின்னர் இருவரும் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதரைத் தரிசித்துவிட்டு, பின்னர், திருப்பட்டூர் சென்று அங்குள்ள பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மாவையும் வணங்கி ஜீவ சமாதி அடைந்தார்கள்.

திருத்தலச் சிறப்புகள் : புலிக்கால் முனிவர் வழிபட்ட பஞ்ச புலியூர் தலங்கள் திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர் ஆகியன. பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று. பாதிரி மரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளதாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் திருப்பாதிரிப்புலியூர் என அழைக்கப்படுகிறது. 

அக்கினி, கங்கை முதலியோர் வழிபட்ட இத்தலத்தில் மங்கண முனிவர் முயல்வடிவம் நீங்கும் பொருட்டு வழிபட்டுப் பேறுபெற்றார். மேலும் கல்லோடு பிணித்துக் கடலில் எறியப்பட்ட திருநாவுக்கரசர் கரையேறி வருவதற்கு அக்கல்லே தெப்பமாக விளங்க அருள் புரிந்த தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். பாதிரி மரத்தை தலவிருட்சமாக கொண்டதாலும் 'புலிக்கால் முனிவர்' (வியாக்கிரபாதர்) வழிபட்டதாலும் இப்பெயர் வழங்கப்படுகிறது. அப்பர் பெருமானை சமணர் சொற்படி பல்லவன் கல்லைக்கட்டி கப்பலேற்றி நடுக்கடலில் ஆழ்த்திவிடக் கூறினான். பணியாளர் அங்கணமே செய்தனர். அப்பர் "சொற்றுணைவேதியன்" எனத்துவங்கும் பாடலை பாடினார். இறைவன் திருவருளால் இத்திருவூரில் அக்கல்லே மிதப்பதாக வந்து கரையேறினார். இதனால் இறைவனுக்கு 'கரையேறவிட்ட முதல்வர்' எனவும் பெயர் உண்டு. 'கரையேறவிட்ட குப்பம்' என இன்று வழங்கப்படுகிறது.

தல வரலாறு: ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள். ஆலயத்தில் இறைவன் கருவறை சுற்றி வரும்போது கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது.
கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரதீர்த்தம் நல்ல படித்துறைகளுடன் உள்ளது. முன மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி முதலியவைகளைத் தரிசிக்கலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. வெளிப்பிராகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தொழுது 2வது வாயிலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும், அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவிசெய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன. தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. துவாரபாலகரைத் தொழுது உட்சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்திருத்தலத்தில் உமாதேவியார் பாதிரி மரத்தின் அடியில் இருந்து தவம் புரிந்து இறைவனை மணம் புரிந்தார். சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதி. அம்பாள் தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றாள். இங்கு ஞானியார் சுவாமிகள் மடாலயம் உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு நேராக பிடாரி கோயில் உள்ளது. இத்தலத்தில் விநாயகர், முருகர், திருநாவுக்கரசர், கன்னி விநாயகர், வியாக்கிரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள் மீனாட்சி சுந்தரேசர், கஜலட்சுமி, துர்க்கை, நடராஜர், நவக்கிரகம், பைரவர், சூரியன்  முதலிய சந்நிதிகள் உள்ளன.

அருகிலுள்ள விமான நிலையம்  : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பாதிரிப்புலியூர்

பேருந்து வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×