2. வைத்தியநாதம்

	


		
 
	
 
4:33:24 AM         Sunday, October 25, 2020

2. வைத்தியநாதம்

2. வைத்தியநாதம்
2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம் 2. வைத்தியநாதம்
Product Code: 2. வைத்தியநாதம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                வைத்தியநாதம்- வைத்தியநாதர் கோயில், பரளி 

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின், பீடு மாவட்டத்தில் உள்ள பரளி என்னும் நகரத்தில் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று என்று கருதப்படுகிறது. இதனை சித்த பூமி என்றும் அழைப்பார்கள். திருமாலின் லீலையால், ராவணன் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கம், தங்கி விட்ட திருத்தலம். பல மாநிலங்களில் இந்த தலத்தை வைத்தியநாதம் என்று அழைக்கிறார்கள்.

இறைவன் :  வைத்தியநாதர்

இறைவி : தையல்  நாயகி

தீர்த்தம் :   பரளி  தீர்த்தம், கங்கா  தீர்த்தம், சூரிய தீர்த்தம்

பஞ்ச நாதம் : இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம்.  

தல சிறப்புகள்: வைத்தியநாதர் கோயில் அல்லது பைத்தியநாத் கோவில் ஜார்கண்டின் தியோகர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள பிரதான கோவிலான சிவன் கோவிலும் தேவி பார்வதி கோவிலும் சிவப்புக் கயிறுகள் கொண்டு இணைத்துக் கட்டப்பட்டுள்ளன. துவாதசலிங்க ஸ்மரணம் எனும் நூலில் உள்ள பின்வரும் செய்யுள் 'பராலியம் வைத்தியநாதம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பரளி நகரிலுள்ள வைத்தியநாதர் கோவிலே பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று என்றும் கருதப்படுகிறது. 

இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான். இராவணன்தனது பத்து தலையையும் சிவனுக்காக ஒன்றன் பின் ஒன்றாக வெட்ட முன்வந்தான்.  அவனுடைய பக்தியைக் கண்ட சிவபெருமான் இராவணன் காயம்பட்ட போது வைத்தியராக வந்து காப்பாற்றினார். அவர் மருத்துவராக தோன்றியதால் அவர் இந்த கோவிலில் வைத்யா என்றும் அழைக்கப்படுகிறார். புனிதமான தலமாகக் கருதப்படும் இவ்விடத்துக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட யாத்திரீகர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விடம் பாபா தாம் அல்லது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த ஜோதி லிங்கத்தைச் சுற்றி 21 கோயில்கள் உள்ளன.  இக்கோயிலில், பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோயில்கள் உள்ளன. ஆனி மாதத்தில் பல நூறாயிரம் யாத்திரீகர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை கால்நடையாக இக் கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இத்தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப் பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் பிரம்மாவுக்கும் திருமாலுக்குமிடையில் நானே பெரியவன் என்ற சண்டை மூண்டது அப்போது சிவபெருமான் ஒரு தொடக்கமும் முடிவுமில்லாத ஒளிப்பிழம்பாகத் தோன்றினார். பிரமா அதன் முடியைத் தேடியும் திருமால் அடியைத் தேடியும் சென்றனர். முடியைக்கண்டதாகப் பிரமா பொய்யுடைத்ததால் அவருக்குத் தனி வழிபாடுகள் இல்லை என்று சிவபெருமான் தண்டித்தார். திருமால் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதால் அவர் உலகம் உள்ளளவும் வணங்கப்படுவார் என்றும் அருளினார். ஜோதிர்லிங்கமானது சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றிய வடிவமேயாகும்.

தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனுடைய அசுரர் படைகளுக்கும், தேவசேனாதிபதியான கார்த்திகேயன் தலைமையிலான தேவர் படைகளுக்கும் இடையில் போர் நடந்தது. இந்தப் போரில் காயமுற்றவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் பொருட்டு சிவன் வைத்தியராக வந்தமையால் வைத்தியநாதர் எனப் பெயர்பெற்றார். வைத்தியநாதர் மருந்துகளுடன் இங்கு வந்து தங்கியதால் இத்தலம் வைத்தியநாதம் எனப் பெயர்பெற்றது.

ராவணன் சிவபெருமானை வேண்டி ஒரு லிங்கத்தை பெற்று இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் அதை தூக்கிச்செல்லமுடியாமல் ஒரு இடத்தில் வைத்துவிட்டான். அங்கேயே தங்கி சில நாட்கள்வழிபாடு செய்தான். அதுவும் நோய் தீர்க்கும் கோயில் என்பதால், வைத்தியநாதம் என்ற பெயர்பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. பாட்னாவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது. மிகப் பழமையான இக்கோயில் 1596-ல் புரன்மலை மகாராஜா என்பவரால் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டது. கோபுரத்தின் உயரம் 72 அடி. 21 பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. கங்காசரோவர் என்னும் திருக்குளம் உள்ளது. 

முன்னொரு யுகத்தில் வீரமகேந்திரபுரி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சூரபத்மன் என்ற அசுரன் அரசாண்டு வந்தான். அவன் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகமாக அரசாள வரம் பெற்றான். அதோடு சாகாவரமும் பெற்றான். அவனது தம்பிகள் தாராசுரன், சிங்கமுகாசுரன் ஆகியோரும் சிவபெருமானிடம் பல வரங்களும் பெற்றிருந்தனர். சூரபத்மன் தேவலோகத்தையும் வென்று இந்திரன் மகன் ஜெயந்தன் முதலான தேவர்களையும் சிறைப்பிடித்து வந்தான். தேவர்களையும், அவர்களுக்கு உதவும் முனிவர் மற்றும் ரிஷிகளையும், மனிதர்கள் பலரையும் சிறையிலடைத்து கொடுமைகள் பல செய்து வந்தான். சிறைப்படாத தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவையும், திருமாலையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சூரபத்மனை வதம் செய்து எல்லா அண்டங்களையும் காக்க வேண்டும் என வேண்டினர். சிவபெருமான் சூரபத்மனை அழிக்கத் திருவுளம் கொண்டு முருகப்பெருமானை தம் நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாக்கினார். முருகன் வளர்ந்து பெரியவராகி தேவர்களைக் காக்க தேவசேனாதிபதியாகச் சென்று சூரபத்மனுடன் போர் செய்து தேவர்களை மீட்டு வந்தார். இந்தக் கடுமையான தேவாசுரப் போரின் போது இருபக்கங்களிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் படுகாயம் அடைந்தனர். போரில் காயம்பட்டுத் துன்பம் அடைந்தவர்களைக் காப்பாற்ற சிவபெருமான் வைத்தியராக, பார்வதி தேவியுடன் வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தார். தேவையான மருந்துகளை ஒரு மலை போல் குவித்து, அதன் மீது அமர்ந்து அம்மையும் அப்பனும் அடிபட்ட வீரர்களுக்கு உதவி செய்தனர்.

போரின்முடிவில் தேவர்களும், முனிவர்களும் விடுதலை பெற்றமைக்கு முருகப் பெருமானைப் பெரிதும் போற்றி வணங்கினர். இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் சிவபெருமானே என முருகப்பெருமானும், தேவர்களும் முனிவர்களும், மனிதர்களும் மருந்து மலை மேல் அமர்ந்திருந்த அம்மை அப்பனை தரிசித்து நன்றி கூறி வழிபட்டனர். யாவருக்கும் வேண்டிய வரம் தந்தார் சிவபெருமான். அப்போது தேவர்களும், முனிவர்களும், பக்தர்களும் அம்மை அப்பரை இங்கேயே இப்படியே என்றும் எழுந்தருளி உலகை ரட்சிக்க வேண்டும் என வரம் கேட்டார்கள். அதன்படியே அம்மையும் அப்பனும் ஜோதிவடிவமாக ஒரு சிவலிங்கத்தில் ஐக்கியமாகினர். இன்றும் அந்த மலைமீது இருந்து அம்மையப்பர் அருள்பாலித்து வருகின்றனர். இந்த சிவலிங்கமே இங்கே ஜோதிர்லிங்கமாக விளங்குகிறது. சிவபெருமான் வைத்தியராக வந்து வீரர்களுக்கு வைத்தியம் செய்தமையினால் வைத்திய நாதர் என்ற பெயர் பெற்றார். தலத்திற்கு வைத்திய நாதம் என்ற பெயரும் உண்டாகியது.

வைத்தியநாதம், வைத்தியநாதர் தரிசனம் செய்வதால் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்த பலன் கிடைக்கும். மேலும் இங்கே மருந்தையே மலைபோல் குவித்து, அக்குன்றின் மீது அம்மையும், வைத்திய நாதரும் ஜோதிர்லிங்கமாக அமர்ந்து இருப்பதால், உயிர்களின் தீராத உடற்பிணியையும், தீராத சகலநோய்களையும் தீர்த்து வைப்பார்கள். ஓம் நமசிவாய என்ற மந்திரம் உடற்பிணியை மட்டுமல்ல பிறவிப்பிணியையும் போக்கி மோட்சத்தையும் கொடுக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். எனவே நமக்கு நோயற்ற நல்வாழ்வை இறைவன் அருளுவார். அன்னை பசியற்ற வாழ்வை வழங்குவார். 

கோயில் அமைப்பு :  சிறு குன்றின்மீது அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்ல வடக்குப் பக்கமாகவும், கிழக்குப் பக்கமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றி அழகான கோட்டைபோன்ற அமைப்பு உள்ளது.  கோபுரமானது அரைகோள வடிவில் இரண்டு திருச்சுற்றுகளைக் கொண்டுள்ளது. கருவறையில் வைத்தியநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். கருவறைக்குள் சென்று லிங்கத்தைத் தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலின் பரிவார தெய்வங்களாக காளி, வீரபாகு, அனுமன், கார்த்திகேயன், ஐயப்பன், விஷ்ணு ஆகியோர் உள்ளனர். சிவராத்திரி, நவராத்திரி, ஹோலிப் பண்டிகை, தீபாவளி, கார்த்திகை முதலிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

வைத்திய நாதத்தில் முதலில் கோயில் அமைந்துள்ள குன்றினையும், கோயிலையும், கிழக்கேயிருந்தும் வடக்கேயிருந்தும் தரிசிக்க வேண்டும். கோயில் கோட்டைபோல் அமைந்துள்ளதாலும், இரண்டு பிராகாரங்கள் உள்ளதாலும் அவற்றில் பல மூர்த்திகள் உள்ளதையும் தரிசிக்க வேண்டும். கோயிலைச் சுற்றி குன்றின் மீது சில சிறுசிறு கோயில்களும் உள்ளன. கோயிலில் சிற்பங்களும் சித்திரங்களும் உள்ளன. அவற்றைக் காண வேண்டும். மூலவர் வைத்திய நாதரையும், அம்பாளையும் தரிசிக்க வேண்டும். இத்தலத்தில் விளக்குக்கம்பம் மரத்தில் கிளைகிளையாக அடுக்காகக் காணப்படுவது போல் அமைத்துள்ளார்கள். நமது தென்னாட்டுப்பக்கம் கோயில் முன்பு சிறு சதுரமான மேடை, அதன் நடுவே ஒரு கல்தூண் வைத்து அதன் உச்சியில் சட்டி வைப்பதற்கு ஒரு நிலை அமைத்து அதில் ஒரு புதிய சிறுபானையில் எண்ணெய் திரிவிட்டு விளக்கு ஏற்றுவார்கள். அதுபோன்று இங்கே இல்லை. பலமூர்த்திகள் சுற்றிலும் உள்ளன. ஓரிடத்தில் அனுமன், விநாயகர் உள்ளனர். கோயில்முன் மண்டபத்தில் தரையில் ஆமை வடிவம், நந்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

பரளி என்ற கிராமம் அருகே இருந்தமையினால் பரளி வைத்திய நாதம் எனப் பெயர் விளங்குகிறது. சபரளி வைத்திய நாதம் தவிர பீகாரில் ஒரு வைத்திய நாதம் கூறப்படுகிறது. இராவணன் கைலாயம் சென்று சிவபெருமானை வேண்டி ஒரு லிங்கம் பெற்று இலங்கை போகும் போது இங்கேயே அந்த லிங்கத்தை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம். அங்கே இராவணன் வழிபாடு செய்தான். கோயில் ஒரு மேட்டின் மீதுள்ளது. இங்கே கவுரி, திரிபுரசுந்தரி, காயத்திரி, விநாயகர், முருகன், காளி, பைரவர், ராமர் முதலியவர்கள் உள்ளனர். இக்கோயிலைச் சுற்றிலும் 25 கோயில்கள் உள்ளன. இங்கே சிவகங்கை என்னும் தீர்த்தக்குளம் இராவணனால் உண்டாக்கப்பட்டதும், சந்திரகூபம் என்ற தீர்த்தமும் உள்ளன. மேலும் கங்கை யமுனைத் தீர்த்தமும் கொண்டுவந்து வைத்திய நாதேசுவரருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மாதம் பிரம்மோற்சவம் இங்கே நடைபெறுகிறது. பங்குனி உத்திரமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோயில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், கதவுகள் காணப்படுகின்றன.  

சாதாரண நாட்களில் காலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். 4 மணிமுதல் 5.30 வரையான நேரத்தில் கோவில் பிரதம அர்ச்சகர் இறைவனுக்கு பதினாறு வகை உபசாரங்ககளையும் செய்வார். அதன் பின் புனித நீரால் அபிடேகம் செய்வர். பின்னர் அடியவர்களும் புனித நீரால் அபிடேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சித்து வணங்குவர். இந்தப் பூசைகள் பிற்பகல் 3.30 வரை நடைபெறும். பின்னர் நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் சிருங்கார பூசை நடைபெறும். சாதாரண நாட்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். எனினும் ஆவணி மாதத்தில் கோவில் அதிகநேரம் திறக்கப்படும்.

ஆடி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வழிபடவருவார்கள். அவர்கள் கங்கை நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களை காவடிபோல் சுமந்துகொண்டு, சுல்தான் கஞ்ச் என்னுமிடத்திலிருந்து கால்நடையாகவே கோயிலுக்கு வருவார்கள்.  அப்படி வரும்போது அந்தக் காவடியை எதற்காகவும் கீழே வைக்கக்கூடாது. வேண்டுமானால் அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு நம் அவசிய காரியங்களைச் செய்யலாம். உறங்குவதென்றாலும், அந்தக் காவடியை மற்றவர் வைத்துக் கொண்டு நிற்கவேண்டும். வேறு வழியின்றி தரையில் வைக்க நேர்ந்தால் மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே சென்று, அங்கிருந்து தரையில் விழுந்து வணங்கிபடி வந்து பின்னர் காவடியைச் சுமந்து செல்லவேண்டும்.  இந்த வழியில் இரண்டு இடங்களில் அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும். அங்கும் இவர்கள் நிற்கமாட்டார்கள். ஓடியவண்ணம்தான் எல்லாமே. சூரியன் மறைவதற்குள் கோயிலை அடைந்தாகவேண்டும். இவ்வாறு கொண்டுசெல்லப்படும் கங்கை நீரைக் கொண்டு வைத்தியநாத சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

ஆவணி மாதத்தில் நடைபெறும் 'சிராவண மேளா' என்ற திருவிழாவில் பெருமளவு அடியவர்கள் கலந்துகொள்வர். இந்தத் திருவிழாவில் சுமார் 8 மில்லியன் முதல் 10 மில்லியன் வரையான அடியார்கள் பங்கேற்கின்றனர். பல அடியவர்கள் தேவ்கரிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரமான பீகார் மாநிலத்திலுள்ள சுல்தான்கஞ்ச்சிலிருந்து கங்கை நதியின் நீரைக் கொண்டுவந்து இங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிடேகம் செய்வர். அவர்கள் இரு செம்புகளில் நீரைக்கட்டிக் காவடியாக வெறுங்காலுடன் நடந்துவந்து வழிபடுவர். வைத்தியநாதரை வழிபட்ட பின்னர் அடியார்கள் தும்கா மாவட்டத்திலுள்ள பசுகிநாதர் கோவிலுக்குச் சென்று தரிசிப்பர்.

காலை 4.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்து இருக்கும்.

 

அருகிலுள்ள விமான நிலையம் : பரளி, ஹவுரங்காபாத்

அருகிலுள்ள ரயில் நிலையம் : பரளி

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×