ஜகந்நாதபுரி - ஒரிஸா

	


		
 
	
 
10:58:20 PM         Tuesday, January 19, 2021

ஜகந்நாதபுரி - ஒரிஸா

ஜகந்நாதபுரி - ஒரிஸா
ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா ஜகந்நாதபுரி - ஒரிஸா
Product Code: ஜகந்நாதபுரி - ஒரிஸா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

பூரி ஜகந்நாதர் விமலா தேவி

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின்  ஒரிசா மாநிலத்தில் ஜெகன்நாதர் கோயில்  பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். பூரி ரயில்வே நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 
மூலவர் : ஜெகன்நாதர், பாலபத்திரர், சுபத்திரை
அம்மன் : விமலா தேவி
பீடம் : பைரவ பீடம்
தல சிறப்புகள் : அன்னை சக்தியின் உடற்கூறுகளில் நாபி (தொப்புள் கொடி) அல்லது வயிற்றின் மூன்றாவது மடிப்பு விழுந்த இடமாக பூரி ஜகந்நாதர் கோவில்வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி கருதப்படுகிறது. சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. 
இவள் சாந்த வடிவினள். தாமரை, சாமரம், அபய, வரத முத்திரை தரித்தவள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். பத்மாஸனத்தில் அமர்ந்து ஸர்வாலங்கார  வடிவினளாய் செளந்தர்ய ரூபவதியாக அருட்காட்சியளிக்கிறாள். காமனை எரித்திட்ட ஈசனையும் கவரும் பேரழகு வாய்த்தவள். அவனின் வாமபாகத்தில்  வாழ்பவள். கலாவதியாக தேவி விளங்குகிறள். கலா என்ற பதத்தால் அக்னி, சூர்ய, சந்த்ர என்ற மூன்று தேஜோமண்டலத்தின் கலைகள், தேவியின்  வடிவமானவை. சதுஷ்சஷ்டி கலாமயீ என்றபடி தேவி அறுபத்துநான்கு கலைகளின் வடிவானவள். ‘ஆய கலைகள் அறுபத்து நான்கையும் ஏய உணர்விக்கும் என் அம்மை’ எனும் கம்பரின் கூற்றுப்படி சந்த்ரகலையை தேவி தன் சிரஸில் தரித்தருள்பவள். ஞானிகளையும் மயக்குபவள். ஒளி மயமானவள். 

இக்கோயில் ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரைக்குஅர்பணிக்கப்பட்ட கோயிலாகும்.  முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும். வலது பக்கத்தில் ஜெகநாதரும், நடுவில் சுபத்திரா தேவியும் மற்றும் இடது பக்கத்தில் பாலபத்ரர் என்னும் பலராமரும் உள்ளனர். 
ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவியின் சன்னதி அமைந்துள்ளது. இந்தப் புகழ் பெற்ற பூரி தலத்தில் முதன்முதலில் குடியேறியவள் அன்னை விமலை. இந்தத் தலத்தில் குடி கொள்ள எண்ணினார் ஸ்ரீ ஜகந்நாதர். அப்போது இந்தத் தலத்தினுள் ஜகந்நாதர் வர வேண்டுமானால், ஒரு நிபந்தனைக்கு உட்பட வேண்டும் என்றாள் விமலை. அதன்படி, எந்த நிவேதனப் பொருளானாலும் முதலில் விமலைக்கே வழங்கப்பட வேண்டும் என்பது வழக்கமாயிற்று. மேலும், துர்க்காஷ்டமி அன்று, ஜகந்நாதர் நள்ளிரவில் திருப்பள்ளி கண்ட பிறகு, இந்த பீடத்தில் ஆடு பலியிடப்படுவதும், அதன் பின்னர் ரத்தக் கறை உடனே கழுவப்பட்டு வெட்டுண்ட ஆட்டின் மிச்சங்கள் பின் வாசல் கதவு வழியாக வெளியேற்றப்படுவதும், பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படுவதும் இங்கே வழக்கமானது.

தல வரலாறு : புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரிகடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு நாள் ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.
கோயில் அமைப்பு : தற்போதைய கோயில் ஏறக்குறைய கி.பி.1135ல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது. 
நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும்  திறந்து  இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : புவனேஸ்வர் 
அருகிலுள்ள ரயில் நிலையம் : பூரி 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×