மதுரை - தமிழ்நாடு

	


		
 
	
 
12:42:03 AM         Wednesday, January 20, 2021

மதுரை - தமிழ்நாடு

மதுரை - தமிழ்நாடு
மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு மதுரை - தமிழ்நாடு
Product Code: மதுரை - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். 
மூலவர் : சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர் 
அம்மன் : அங்கயற்கண்ணி, மீனாட்சி
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை கிருதமாலை, தெப்பக்குளம் புறத்தொட்டி    
தலவிருட்சம் : கடம்ப மரம்
பாடியவர் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் 
பீடம் : மந்த்ரிணி 
தல சிறப்புகள் :  அன்னை கல்வி மற்றும் கலைகளின் அதிபதியான ராஜமாதங்கியின் வடிவமாக திகழ்கிறாள்.  இத்தளத்தின் அம்பாள் மீனாட்சியம்மனாவார். இவரது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும். இந்த கருவறை விமானத்தை தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால் மீனாட்சி என்று பெயர் பெற்றார். தன்னுடைய முட்டைகளை மீன் பார்வையாலேயே தன்மயமாக்குவது போல பக்தர்களை அருட் கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். மீனாட்சியம்மன் திருக்கோலத்தில் கிளியும் இடம்பெற்றள்ளது. இந்திரன் சாபவிமோசனத்திற்காக இத்தலத்தினை தேடி வந்தபோது கிளிகளே சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன. 
இவருக்கு பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறை யவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன. மீனாட்சியை அங்கயற்கண்ணி என தமிழில் அழைக்கின்றனர். இவர் மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை அலங்காரம் செய்த பிறகே பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன்பின்பே மூலவரான சிவபெருமானுக்கு பூசைகள் செய்யப்படும். இதற்கு மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து எப்போதுமே தன்னுடைய கணவனுக்கு தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால் கணவரை எழுப்பும் முன்பே மனைவியான அம்பிகை அபிசேகத்தினை முடித்து தயாராகிறாள். இதனால் காலையில் முதல் பூசை மீனாட்சிக்கு செய்யப்படுகிறது. 
இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தினை சிவன் முக்திபுரம் என்றும் அழைக்கின்றனர்.  இத்தலம் முக்கியமான சிவதலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாகும்.  இதனை ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. 
தேவலோகத்தின் அரசனான இந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது. இராமர், லட்சுமணர், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவகளால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றதாகும். 
தல வரலாறு :  
விருத்திராசூரனை கொன்றமையால் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின்மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின்அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இத்தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு இந்திரன் தன்னுடைய பாவத்தினை தீர்த்திக் கொண்டான். அதனால் சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 

கோயில் அமைப்பு : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம் இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64  சிவகணங்களும், 8 வெள்ளை  யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக் குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.

நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் மதியம் 12.30 வரையிலும்  மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும்  இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×