காஞ்சிபுரம் - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




12:18:51 PM         Friday, May 14, 2021

காஞ்சிபுரம் - தமிழ்நாடு

காஞ்சிபுரம் - தமிழ்நாடு
காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு காஞ்சிபுரம் - தமிழ்நாடு
Product Code: காஞ்சிபுரம் - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மிக அருகில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். 
அம்மன் / மூலவர் : காமாட்சி அம்மன்
தீர்த்தம் : பஞ்சகங்கை (எ) உலகாணி தீர்த்தம்.
தலவிருட்சம் : செண்பகம்.
பீடம் : ஸ்ரீ சக்கரபீடம், காமகோடி பீடம்
தல சிறப்புகள் :   இங்கு அம்மை மூன்று தேவியரின் அம்சமாக இருக்கிறாள். காமாட்சி அம்மன் தெற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார். இக்கோயிலில் அம்மன் இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. 
காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள்  கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம்  காலமாக இருந்து வருகிறது.  காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில்  அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக  திகழுகிறாள். இந்த திருத்தலத்தில் அம்பிகைக்கு மூன்று உருவங்கள் உண்டு. அவை ஸ்தூலம், காரணம், சூட்சுமம், என்பன மேலும் இந்த அம்பாளை வணங்குவதால் கோடான கோடி நன்மைகள்  உள்ளது. ஆகவே இந்த அம்பாளுக்கு காமகோடி காமாட்சி என்ற சிறப்பு பெயரோடு அருள்பளிகிறாள்.
ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம். 

கோயில் அமைப்பு: கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். இந்த கோவிலில் சரஸ்வதி, லக்ஷ்மி, அருபா லக்ஷ்மி,  சியாமளா, வராகி, அன்னபூரணி, அர்த்தநாரிஸ்வரர் ஐயப்பன், துர்வாச முனிவர் ஆகியோர் தனி தனி சன்னதியில் உள்ளனர். கருவறைக்குள் மூலவரின் சிலைக்கு அருகில் காமாட்சி அம்மன் ஒற்றை காலில் தவம் இருப்பது எங்கும் காண கிடைக்காத அதிசயம்.  இந்த  கோவிலில் உள்ள முதல் பிரகாரத்தில்    காயத்திரி மண்டபத்தின் நடுவில் தான் காமாட்சி அம்மன் உள்ளார். இந்த மண்டபத்தில் மொத்தம் இருபத்தி நான்கு மண்டபங்கள் உள்ளது.   இந்த மண்டபத்தின் தோற்றம் போன்று கீழும் இதே மண்டபம் உண்டு ஆதலால் காயத்திரி   மண்டபத்தில் இருந்து அம்மனை வணங்க மாட்டார்கள். அந்த மண்டபத்தில் இருந்து வணங்குவது அம்பாலின்  மீது நிற்பதற்கு சமம்.

தல வரலாறு: முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன் தவ வலிமை பெற்று  எல்லாரையும் வென்று , தன்னால் கொன்றவரின் பலம் தனக்கு வந்து விட வேண்டும் என்று வரம் பெற்று இருந்தான்.  மேலும் அவனுக்கு ஒன்பது வயது பெண் குழந்தையால் மரணம் நிகழும் என்ற விதியும் இருந்தது.  இதனால் தேவர்களும் இந்திரர்களும் மிகவும்  வேதனை அடைந்தனர். ஆகவே சக்தி தேவி  ஒன்பது வயது குழந்தை போல வடிவம் எடுத்து அசுரனை வாதம் செய்து அமர்ந்த இடம் தான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்.

விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கள்வர்  பெருமாள் சன்னதி  அம்பாளுக்கு அருகில் இருப்பது மிகவும் சிறந்த ஒன்றாகும். இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கருதபடுவது துண்டீர மகராஜா சன்னதி. இந்த தலத்தை  ஆட்சி செய்த துண்டீரர் என்ற ஆகாசபூபதிக்கு குழந்தை இல்லை. அவர் காமாட்சி அம்மனை தினமும் வழிபட்டு வந்தான். கணபதி துண்டீரர் என்ற பெயரோடு அந்த ஊரை ஆட்சி செய்தார்.  பிள்ளையார் துண்டீரர் என்ற பெயரில் ஆட்சி செய்ததால் அந்த ஊரிற்கு தொண்டை மண்டலம் என்ற சிறப்பு பெயர் சூட்டப்பட்டது.   துண்டீர மகராஜா  காமாட்சி அம்மனுக்கு எதிரே  அமர்ந்துள்ளார். இவரை காண செல்லும் முன் அமைதியாக  செல்ல வேண்டும். 

நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 வரையிலும்  மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும்  இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : அரக்கோணம் 24 கி.மீ
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×