கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர்
	


		
 
	
 
6:13:34 AM         Thursday, August 06, 2020

கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர்

கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர்
கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர் கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர்
Product Code: கந்தர்வ ஸ்தானம் - ஜம்மு காஷ்மீர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

கந்தர்வஸ்தானம்   கீர் பவானி  

திருத்தல அமைவிடம் :  இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  ஸ்ரீ நகருக்கு கிழக்கே 14 மைல்கள் தொலைவில் துல்முல் கிராமத்தில் அமைந்துள்ளது.   
மாதா :  மஹாராக்ஞயா தேவி
பாணலிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் பூதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்கள் 
சிறப்புக்கள் : அம்மையும், அப்பனும் சுமார் இரண்டரை அடி உயரம்தான். இந்த அமிர்த குண்டத்தில் ஆதிசேஷனாக அனத நாகம் இரண்டாயிரம் கண்களுடன் ஆயிரக்கணக்கான நாக்குகளுடன் பல கோடி சிறு நாகங்கல் சூழ மரகத வண்ணத் தேவியையும் கரு நீல வண்ண பைரவரையும் தாங்குவதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
கீர் எனும் சொல்லுக்கு கூழ் என்று பொருள். இக்கோவிலில் கடவுளுக்கு அரிசிக் கூழ் படைக்கப்படுவதால் கீர் எனும் சொல் கோவிலின் பெயருடன் இணைந்துகொண்டது. இந்துக்களின் நம்பிக்கையின்படி இக்கோவிலின் கடவுளுக்கு மஹாரக்ஞ தேவி, ரங்ஞ தேவி, ராஞ்சி, பகவதி என மேலும் பல பெயர்கள் உண்டு. மாலை நேரம் ஆரத்தி சமயம்   அமிர்த குண்டத்தின் பாலே பிரசாதமாக வழங்கப்படுகிறது. கருவறைக்கு முன்னால் மஹா கணபதியும் கார்த்திகேயனும் உண்டு. ராவணன் தினமும் பால் பாயசம் நைவேத்யம் செய்வானாம். அதனால் அன்னைக்கு கீர் பவானி என்ற பெயர் அதுவே இன்றும் தொடர்கிறது.
சர்வ ஜ்னேஸ்வரியாக க்ருபாசாகரியாக விளங்கும் த்ரைலோக்ய ரக்ஷாகரி ஸ்ரீ நகரில் கீர்பவானி எனும் திருத்தலத்தில் காவல் தெய்வமாக அமர்ந்து அருள்மழை பொழிகிறாள். இங்கு தெய்வீகத் தன்மையுடன் கூடிய ஒரு சிறு குளம் அதன் நடுவில் ஜ்வலிக்கும் ரத்னமாக விஸ்வேஸ்வரியும், பைரவரும் அமைந்துள்ளனர்.
தல பெருமை : இந்தக் குளத்து நீரில் பவானி அன்னையின் அருள் வெள்ளமும் சேர்ந்தே பாய்கிறது எனலாம். இக்குளத்து நீரின் நிறம் நாட்டுக்கு எதிர் வரும் அபாயத்துக்கு ஏற்ப  நிறம் மாறுகிறது என்பது அதிசயம். நீரில் சலசலப்பு அதிகமானால் நாட்டுக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பதன் அறிகுரியாம். மஹாபயகரியாகவும் சர்வானதகரியாகவும் பல ரூபங்களில் விளங்கும் அம்பிகை இந்த திருக்கோயிலில் இப்போதும் இப்படி ஒரு அற்புதத் திருவிளையாடலை நடத்திக்கொண்டு இருக்கிறாள். இந்தப் புனித குளத்து நீரின் சிவப்பு அல்லது லேசான கருப்பு நிறத்துக்கு மாறினால் நாட்டுக்கு தீங்கு என்பதைப் பலமுறை  நிரூபித்திருக்கிறாள் பரமேஸ்வரி.
பவானி என்றால் பிராணனாக இருக்கக்கூடியவள் என்று பொருள். பவம் என்கிற சம்சார சாகரத்துக்குப் பிராணனாக இருக்கக்கூடிய பவானி தேவிதான்.  பவன் என்ற காமனுக்கும் மறு உயிர் கொடுத்தாள் சண்டிகையான தேவி பராசக்தி  நமது நாட்டைக் காத்துக்கொண்டு எல்லையில் வீற்றிருக்கிறாள்.
தல வரலாறு  : . மஹா சிவ பக்தனான ராவணனின் பக்திக்குக் கட்டுப்பட்டே தேவி அர்ச்சாவதாரமாக இலங்கையில் அருள்மழை பொழிந்தாள். அரக்கனான ராவணனின் சம்ஹாரத்துக்குப் பிறகு அஞ்சனை மைந்தன் அனுமன் மூலம் துலாமுல்லாவுக்கு வந்தாளாம். இந்த வரலாறு கல்ஹணரின் ராஜ தரங்கணி என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிரூபிக்கும் வண்ணம் கோயிலில் நுழைந்த உடன் இடது புறம் புடைப்புச் சிற்பமாக பெரிய ஆளுயுர மாருதி. ரகு நந்தனான ஸ்ரீராமரையும் இலக்குவனையும் இரு தோள்களில் சுமந்தவண்ணம் வெள்ளிக் கண் மலர்கள் தீர்க்கமாகப் பார்க்க செந்தூரமும் தைலமும் கலந்த ஆரஞ்சு வண்ண பளபளப்பில் ஹனுமார். பெரிய கோயில் வளாகம். முற்றிலும் ராணுவப் பாதுகாப்புப் படையினரின் காவல் வளையத்துள் இயங்குகிறது. நிறைய சினார் மரங்கள் நிறைந்த பகுதி. 
இந்தக் கோயிலைச் சுற்றி வேறு மதத்தவர்களும் அதிகம் வாழ்கிறார்கள். படைவீரர்கள் இரவிலும் பகலிலும் இங்கு காவல் காக்கின்றனர். இவர்கள் ஷூ தொப்பி இல்லாமல் சாக்ஸூடன் துப்பாக்கி ஏந்தியபடி கோயிலில் வலம் வருகிறார்கள். பக்தர்களை வரிசைப்படுத்துவது முதல் பிரசாதம் தருவது வரை ராணுவ வீரர்கள்தான்.
கோவில் அமைப்பு : 1920 ல் மஹாராஜா பிரதாப் சிங் என்பவரால் புனரமைக்கப்பட்டு மார்பிள் கற்கள் பதிக்கப்பட்ட இந்தத் திருக்கோயில் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. ராணுவத்தினரின் ஒழுங்குக் கட்டுப்பாடு கோயிலிலும் தெரிகிறது. தேவியின் ஒரு கடைக்கண் பார்வையால் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியும். காஷ்மீரில் உள்ள கீர்பவானி கோவில் அமைதியான சூழலில், பளிங்கு கற்களால் கட்டப்பட்டு சிப்பிக்குள் முத்து போல தோற்றம் அளிக்கிறது. 
கோயிலில் ஒரு சிறு நமஸ்கார மண்டபம் எதிரில்  ஏழு கோண வடிவில் சிறு குளம். இதை ராகினி மாதா குளம். மற்றும் அமிர்தகுண்டம் என்கின்றனர். மேற்கில் நீர் வரும் தலைப்பகுதி கிழக்கில் நீர் வெளியேறும் கால் பகுதி இரண்டும் உள்ளது. குளத்தின் அடியில் வெள்ளை மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. நடுவில் சிறு மண்டபம் போன்ற அமைப்பில் இறைதம்பதியினர் காட்சியளிக்கிறார்கள். இதுதான் கருவறை. நமஸ்காரமண்டபத்திலிருந்து 6-8 அடி நீள மரப்பாலம் அதில் அர்ச்சகர் மட்டும் செல்லலாம். குளம் சுமார் 15 அடி நீளம் 10 அடி அகலம் 5 அடி ஆழம் உள்ளதாக அமைந்துள்ளது. இக்குளம் தண்ணீரும் பாலும் கலந்து காட்சியளிக்கிறது.
ஒரு சமயம் காஷ்மீர் பகுதியை வெள்ளம் சூழ ஸ்ரீ கோவிந்த் ஜோகடோ என்ற அந்தணர் கனவில் தோன்றி இந்த தேவி. நீ ஒரு பால் குடத்துடன் வெள்ளத்தில் செல்வாயாக  நாம் பாம்பு வடிவில் உனக்குக் காட்சி தரும் இடத்தில் என்னைக் கண்டறிந்து கொள் என்று ஆணையிட்டாள் என்பதே அச்செவிவழிக் கதை.
நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் அனைத்து நாட்களும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும்  திறந்து  இருக்கும். 

அருகில் உள்ள விமான நிலையம்:  ஸ்ரீநகர் 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  உதம்பூர் 130 கி.மீ    
பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு 

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×