ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா





	


	



























	




 




	








 




10:47:47 PM         Tuesday, January 19, 2021

ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா

ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா
ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா
Product Code: ராதாகிருஷ்ணாபூர் - திரிபுரா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ராதா கிருஷ்ணாபூர்     திருபுரசுந்தரி

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் மேகாலயா    திரிபுராவில் உள்ள உதயபூரில்  இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ராதிகாஷ்பூர் கிராமத்திற்கு அருகே உள்ள மலைகளின் மேல் அமைந்துள்ளது.
பீடம் : கூர்ம அவதாரப் பீடம்
சிறப்புக்கள் :  அன்னையின் வலது கால் இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது. இந்து மத புராணங்கள் குறிப்பிடும் காளி தேவியின் 51 சக்தி பீடங்களில்  ஒன்றான  தேவியை ஷோராஷி என்றும் கூறுகின்றனர். பொதுவாக திரிபுரசுந்தரி மிகவும் அழகானவள். என்றும் இளமைதரும் பதினாறு வயதானவள். ஆனால் ஆலயத்தின் உள்ளே உள்ளது காளி உருவிலான சிலை அதுவும் இரு சிலைகள் முறையே இரண்டடி உயரத்திலும் , ஐந்தடி உயரத்திலும் உள்ளன. சிறிய சிலையை முன் வெளியூர்களுக்கு செல்லும் பொழுதும் , யத்தத்தின் பொழுதும் தங்களுடன் அந்த நாட்டு மன்னர்கள் எடுத்துச் சென்றனர் எனக் கூறப்படுகின்றது. இந்தியாவில் திரிபுரா சுந்தரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட எண்ணற்ற கோயில்களும் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை தென் இந்தியாவில் உள்ளன. 
ஒரு கிராமியக் கதையின்படி சிவபெருமானுடைய கவனத்தை கலைத்த காமனை அவர் எரித்தவுடன் அந்த சாம்பலை எடுத்த தேவர்கள் அது மீண்டும் மன்மதனாகட்டும் என நினைத்து ஒரு உருவம் தந்தனர் . ஆனால் அவர்கள் எதிர் பார்பிற்கு மாறுதலாக அந்த உருவம் ஒரு பயங்கரமான அசுரனாயிற்று. அவன் சிவபெருமானிடம் சென்று பல வரங்களைப் பெற்று தேவர்களை துன்புறுத்தினான். அவன் சிவபெருமானுடைய ஆசியை பெற்று இருந்ததினால் அவனை அழிக்க முடியாமல் போன தேவர்கள் சிவபெருமானையே வேண்ட அவர் தன்னுடைய மூன்று குணங்களை கொண்டு காளியின் அவதாரமான திரிபுரசுந்தரியை படைக்க அவள் அந்த அசுரனை வதம் செய்தாளாம் .
தல வரலாறு  :  முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்ற அரக்கன் இருந்தான் அவனுக்கு மூன்று குணங்களைக்  ரஜஸ் , தமஸ் , சத்வ, குறிக்கும் வகையில் மூன்று புதல்வர்கள் இருந்தனர் . அவர்கள் சிவபெருமானிடம் தம்மை அழிக்க முடியாத வரத்தைக் கேட்டுப் பெற்று பறக்கும் தங்க, வெள்ளி, இரும்பிலான மூன்று நகர்களை உருவாக்கி, அதில் இருந்தபடி தேவர்களை துன்பப்படுத்தி வந்தனர். அவன் கொடுமைகளை சிவபெருமானிடம் சென்று தேவர்கள் எடுத்துக் கூறிய பொழுது அவர்கள் மூவரையும் சிவபெருமான் அழித்தார்.
அந்த மூன்று குணங்களைக் கொண்ட அசுரர்களை அழித்தவரை மணந்ததினாலும் மூன்று உலகிலும் தங்க, வெள்ளி, இரும்பிலான மூன்று உலகையும் சேர்த்து அவள் அழகுக்கு நிகரானவள் எவரும் இல்லை என்பதினாலும், திரிபுரசுந்தரி      (திரிபுர என்றால் மூன்று) என்ற ரூபத்தை அடைந்து இங்கு குடி கொண்டுள்ளாள். இன்னொரு விளக்கத்தின்படி மூன்று குணங்களை அழித்தவருடைய மனைவி என்பதினால் திரிபுரசுந்தரி என்பவள் மூன்று குணங்களுடன் கூடிய அதி சுந்தரமான அழகைப் பெற்றவள் என்ற பெயர் ஏற்பட்டது.
திரிபுரசுந்தரி ஆலயத்தில் எப்படி காளி தேவி சிலையாக இருக்க முடியும் என வினவிய பொழுது ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பத்திரகாளி கோவிலில் பத்ரகாளியை மந்திரங்களினால் உருயேற்றி மிக அழகிய ரூபத்தில் மெருகேற்றி திரிபுரசுந்தரியாக பூஜிப்பதாக கூறினர்.
கோவில் அமைப்பு  :  இந்தக்  கோவிலின் அமைப்பு ஒரு ஆமை அல்லது கூர்மா வடிவத்தை ஒத்திருப்பதால் இது 'கூர்ம அவதாரப் பீடம்' என்று அழைக்கப்படுகிறது. இது. முதலாம் நூற்றாண்டில் கட்டபட்டதாகக் நம்பப்படுகிறது. வெளிக்கோபுரம் கோயில் உள்பட மொத்த அமைப்பும் பெங்கால் டெரிகோட்டா பாணி அமைப்பு அடியில் சதுரம் மேலும் கூம்பு வடிவில் உச்சியை நோக்கிச் செல்லும் சிகப்பு டெரிகோட்டா அடிப்படையில் இந்தக் கோயில் ஒரு விஷ்ணு ஆலயம். இந்தக் கோவில் அதன் குடிசை வடிவ கட்டமைப்பு மற்றும் அதன் கூம்பு வடிவ கூரையுடன் வங்காள கட்டிடக்கலையை  ஒத்திருக்கிறது. திரிபுரா சுந்தரி கோவிலின்  கிழக்கு பக்கத்தில் கல்யாண்சாகர் என்கிற ஏரி அமைந்துள்ளது.

இந்த ஊர் மன்னர் தன்யா மாணிக்க தெப்பர் என்பவர் க்னவில் ஒரு நாள் திரிபுரசுந்தரி தோன்றி தான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதையுண்டு கிடப்பதாகவும் தன்னை எடுத்து விஷ்ணு கோவிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். ஆனால் மன்னர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விஷ்ணு கோயிலில் சிவனின் மனைவியை பிரதிஷ்டை செய்தால் ஏற்றுக்கொள்வார்களா என யோசித்தார். திரும்பவும் திரிபுரசுந்தரி “ நான் கனவில் வந்து சொன்னதை இன்ன்மும் ஏன் செய்யவில்லை” என வினவ திடுகிட்ட மன்னர் வருவது வரட்டும் என திரிபுரசுந்தரி சிலையை அன்னை கூறிய இடத்தில் விஷ்ணு கோயிலில் பிரதிஷ்டை செய்தார். பிறகு இந்தக் கோயில் திரிபுர சுந்தரிக்காகவே பிரபலம் ஆகிவிட்டது.
இங்கு காளி பிரசன்னம் ஆகியிருப்பதால் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலை ஒட்டிய ‘கல்யாண் சாகர்’ ஏரியில் மீன்களுடன் ஆமைகளுக்கும் பயபக்தியுடன் பக்தர்கள் உணவு போடுகிறார்கள் அவற்றை யாரும் பிடிப்பதும் இல்லை. 
நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 6.00 மணி முதல்  இரவு 10.00 மணி வரையிலும்  திறந்து  இருக்கும்.

அருகில் உள்ள விமான நிலையம்: அகர்டலா  
அருகிலுள்ள ரயில் நிலையம் :  குமரகட் 
  
பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×