காசி - உத்திரப்பிரதேசம்
	


		
 
	
 
5:16:06 AM         Saturday, May 30, 2020

காசி - உத்திரப்பிரதேசம்

காசி - உத்திரப்பிரதேசம்
காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம் காசி - உத்திரப்பிரதேசம்
Product Code: காசி - உத்திரப்பிரதேசம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

காசி- விசாலாட்சி கோயில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் கங்கை ஆற்றின் மீர்காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். 51 சக்தி பீடங்களில் இடங்களில் ஐந்தாவது சக்தி பீடமாக அன்னை விசாலாட்சி பீடம் விளங்குகிறது. 
மூலவர் : அவிமுகேஸ்வரர் , விசுவநாதர்
அம்மன் : விசாலாட்சி
தீர்த்தம் : ஆதி கங்கை
பீடம் : மணிகர்ணிகா பீடம்

தேவியின்  மணிக்கட்டுகள் காதணிகள் அல்லது கண்கள் விழுந்த இடம்.

தல சிறப்பு :  மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது சிறப்பு. அமாவாசை நாட்களில் நாள் முழுவதும் திறந்து இருக்கும். விசாலாட்சி அம்மன் கோவில் நமது தென்னாட்டு பாணியில் அமைந்து உள்ளது. தேவியின் கண்களும், காது வளையங்களும் விழுந்ததாக கருதப்படுகிறது. முற்காலத்தில் அன்னபூரணியும் விசாலாட்சி தேவியர்கள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்ததது. பின்னர் இரு தேவியர்களுக்கும் தனித் தனித் கோயில்கள் அமைக்கப்பட்டதால், இருதேவியர்களும் வேறுபட்டு காட்சியளிக்கின்றனர். 
தல வரலாறு : இந்தக்கோயில் 1785இல் மகாராணி அகல்யா பாயினால் (இந்தோர்) கட்டப்பட்டது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே காசி விசாலாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லலாம். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோயிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப் பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோயில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். 
தலபெருமை:  இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்துகொள்கின்றனர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும்போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. 
கோயில் அமைப்பு:  இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.  கோயில் வடநாட்டுப்பாணியில் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். விசுவநாதருக்குத் தங்க விமானம் சுவர்ண பந்தனம், மரகத மூர்த்தி, அவரவர் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட்டு வழிபடலாம். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

வாரணாசி கோவிலில் ஆறு புள்ளிகள் உள்ளன. இது சாஸ்தாங்கா (ஆறு மடங்கு) யோகத்தை அடையாளப்படுத்துகிறது. விஸ்வநாத் கோயில், விஷாலக்ஷ்மி கோயில், புனித நதி கங்கை, கால பைரவர் கோவில், துடிராஜ் கோயில் (இந்த கோயில் கணபதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது) மற்றும் தண்டபாணி கோயில் 
நடை திறக்கும் நேரம் :  காலை 4.30 மணி  முதல் 11.00 மணி  வரை  மாலை  5.00 மணி  முதல் இரவு 8.00 மணி  வரை திறந்து இருக்கும். 
அருகில் உள்ள விமான நிலையம்:  வாரணாசி 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  வாரணாசி 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

தகுந்த காலம்: ஆகஸ்ட் முதல் அக்டோபர்  வரை 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×