நல்ஹாத்தி – நந்திகேஷ்வரி, காளிகா தேவி ஆலயம்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், பிர்பம் மாவட்டத்தின் தாரபீத் நகரத்தில் நல்ஹாத்தி ரயில் நிலையத்தில் இருந்து 1/2 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறு குன்றில் மேல் நலதீஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.
இறைவன் : நந்திகேஷ்வர், யோகீசர்
அன்னை : நந்தினி, காளிகா தேவி
தல சிறப்பு : இங்கே அன்னை விஷ்ணுவின் அவதாரமான கூர்ம அவதாரம் எடுத்து, ஆமை போன்ற வடிவில் காட்சியளிக்கிறாள். கருவறையில் அமைந்துள்ள அன்னையின் உடல் முழுவதும் குங்குமத்தைக் கொண்டு சிறப்பாக அலங்காரம் செய்யப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள அன்னை மூன்று தங்கக் கண்களோடு காட்சியளிப்பது மற்றொரு சிறப்பு. அம்மனின் உடற்கூறுகளில் கழுத்தின் எலும்புகள் விழுந்த இடத்தில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் நந்திகேஷ்வரி ஆலயம் 14வது பீடமாகத் திகழ்கின்றது. நம் சரீரத்தில் புருவங்களின் மத்தியப் பகுதியில் இரண்டு இதழ் தாமரையாக பிரகாசிக்கிறாள் தேவி. காளி தேவி வேகமாகவும், அதிக சக்தியுடனும் பிரகாசிப்பதால் பிரசண்ட தேவி என்றும் சின்னமஸ்தா என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.
தல வரலாறு : தெய்வத்தின் தந்தையாக இருந்த தட்சன், சிவனையும் சக்தியையும் அவமதித்தான். அவர் தக்ஷ யோகாவிற்கு அவர்களை அழைக்கவில்லை. தெய்வ வழிபாடு செய்த சக்தி, தட்சன் யோகாவிற்கு சென்றார். அவளுடைய தந்தை நிறைய அவமானப்படுத்தினார். எனவே தெய்வம் சக்தி யோகாவில் தன்னை தியாகம் செய்து கொண்டார். இதைக் கேட்டதும் சிவன் கோபமடைந்து, இந்த பிரபஞ்சத்தை அழித்ததற்காக நடனமாடத் தொடங்கினார். இதை தடுக்க, விஷ்ணு தனது சக்ராவுடன் உடலை வெட்டினார். உலகின் 52 வெவ்வேறு இடங்களில் இது அமைக்கப்பட்டது. இது இந்த கோவிலில் தேவி சக்தி தொண்டைப் பகுதி வைக்கப்பட்டது, இது 'நல்ஹாத்தி' (நள - தொண்டை) என அழைக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில், மகா நவமி நாட்கள், பக்தர்கள் இந்த கோவிலில் கூடிவருகின்றனர்.
இந்த காளிகா தேவி ஆலயத்தில், சின்னமஸ்தா தேவி திருவுருவமாக பழங்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததாம். காளியின் பயங்கர ரூபத்தை காட்டும் விதமாக சின்னமஸ்தா தேவி காட்சியளித்திருக்கிறாள். பிற்காலத்தில் நிகழ்ந்த அந்நிய படையெடுப்புகளால் சின்னமஸ்தா தேவியின் கோயில் சேதப்படுத்தப்பட்டு சிதிலமடைந்தது. இதையடுத்து, நல்ஹாத்தி தலத்தில் சின்னமஸ்தா தேவி திருவுருவத்துக்கு பதிலாக காளி என்ற நாமத்துடன் 'பிண்டி' எனப்படும் உருண்டை வடிவத்தில் காட்சியளிக்கிறாள். சாதாரணமாக வட இந்தியக் கோயில்களில் திருவுருவச்சிலை இல்லாத கருவறையில் இத்தகைய பிண்டி காட்சி அளிப்பது இயல்பு.
கோயில் அமைப்பு : இத்திருத்தலத்தில் நந்திகேஷ்வரர் பைரவராக விளங்குகிறார். கோயில் வளாகத்தினுள் விஷ்ணு, அனுமன், ராமர், சீதை, நவதுர்கா எனத் தனித்தனி சந்நிதிகளும் உள்ளன. கோயிலுக்குள் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இம்மரத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கயிறு கட்டி வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது மக்களின் நம்பிக்கை. தாங்கள் நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தி இங்குள்ள நந்திகேஷ்வரி அன்னைக்கு இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். மிகவும் புகழ்பெற்று விளங்கிய இத்திருக்கோயில் தற்போது மேற்புறம் வைக்கோலால் வேய்ந்த கூரைகளோடு காட்சியளிக்கிறது.
இவ்வாலயத்தில் யாக வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக பெளர்ணமி, புத்த பூர்ணிமா ஆகிய நாட்களில் யாகம் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது. சிறப்பு பூஜையாக அமாவாசை தினத்தன்று காளி பூஜை நடத்தப்படுகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளிப் பண்டிகை நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வைகாசி வளர்பிறை சதர்த்தசி அன்று பரப்பிரம்ம ஜயந்தி இங்கு கொண்டாடப்படுகிறது. அன்று கன்னிப் பெண்கள் ஆயிரக்கணக்கில் வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்..
அருகிலுள்ள விமான நிலையம் : கொல்கத்தா
அருகிலுள்ள ரயில் நிலையம் : நல்ஹாத்தி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு