காளிகட் - மேற்கு வங்காளம்

	


		
 
	
 
12:19:22 AM         Wednesday, January 20, 2021

காளிகட் - மேற்கு வங்காளம்

காளிகட் - மேற்கு வங்காளம்
காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம் காளிகட் - மேற்கு வங்காளம்
Product Code: காளிகட் - மேற்கு வங்காளம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

காளிகட் காளி கோயில்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில். காளிகாட் கோவில் பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ளது.  

மூலவர்:காளி,பவதாரிணி-நின்றகோலம் 

தல சிறப்பு :  எட்டுத் திக்குகளிலும் புகழ் பெற்ற இவ்வாலயத்தை பல நூல்களில் காலேஸ்வரம் என்று குறிப்பிட்டுள்ளனர். அன்னையின் உடற்கூறுகளில் வலது காலின் விரல்கள் அல்லது பாதம் அல்லது முகம் விழுந்ததாகக் கருதப்படும் காளிகாட் என்னும் இத்தலம்,சக்தி பீடமாக விளங்குகிறது. காளி காட்டில் அமைந்துள்ள மகாசக்தி பீட நாயகியை காளி என்றும், க்ஷேத்ரபாலகரை நகுலேஷ்வரர் என்றும் அழைக்கின்றனர். காளிகா புராணத்தில் தேவியின் முகம் விழுந்த சக்தி பீடம் என்று கூறப்படுகிறது.

செம்பருத்தி பூ பூஜைக்கு. தட்சிணேஸ்வரம் காளிகோயில் நவரத்தனபாணி-9கூரான கோபுரங்கள். அசுர வதம் முடிந்து ஆவேசத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்த தேவியின் வேகத்தை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை. அவர்கள் ஈசனிடம் கூற சிவன் காளி வரும் வழியில் குறுக்காக படுத்திருக்க அதைக் கவனியாமல் வந்த காளியின் காலில் இடிக்க கீழே பார்த்த காளி தன் தவறை உணர்ந்து தன் நாக்கைக் கடிக்க அந்நிலையே காளிக்கு உருவமானது.
கோயில் அமைப்பு : தற்போதைய கோயிலமைப்பு 200 ஆண்டு பழைமையானதாக இருந்த போதிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு இலக்கியப் பதிவுகளிலும் உள்ளது. பழைமையான முதலாம் குமாரகுப்தா காலத்திய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது, இத்திருத்தலத்தின் பழைமைக்குச் சான்றாக உள்ளது. சிறு குடிசையாக இருந்த திருக்கோயில் சிறு கோயிலாக மானசிங் அரசரால் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் கட்டப்பட்டது. பின்னர் சபர்ணா ராய் சௌத்ரி குடும்பத்தினர் முன்னிற்று தற்போதைய கோயிலமைப்பை 1806 ஆம் ஆண்டில் கட்டினர். 

தல வரலாறு : கங்கை, வங்கக் கடலுடன் கலக்கும் இடத்தை கங்கா சாகர் என்பர். பழங்காலத்தில் அந்த முகத்துவாரத்தில் கபில முனிவர் வசித்து வந்தார். அங்கு இன்றும் அவர் பெயரில் ஒரு சிறு கோயில் உள்ளது. ஒரு முறை சில காபாலிக சன்னியாசிகள் கங்கா சாகரில் புனித நீராடி கபில முனிவரை தரிசிக்க அடர்ந்த காட்டு வழியே சென்றனர். பாதையில் அவர்களுக்கு விரல்கள் வடிவில் ஓர் அதிசயப் பாறை தென்பட்டது. அது காளியின் சாயலில் அவர்களுக்குத் தோற்றமளித்தது. அந்த காபாலிகர்கள், நரபலியை மனதில் கொண்டு அந்தப் பாறையை அங்கேயே ஸ்தாபித்து தங்களது முறைப்படி வழிபட்டனர். தந்திர சாஸ்திரப்படி நரபலி கொடுப்பது அக்கால வழக்கம். அந்தச் சிலையே, இன்றைய காளிகாட் காளி அம்மன்.
காளிகாட் காளி கோயிலைச் சுற்றி முன்பு காடு மண்டி வளர்ந்திருந்ததாம். அந்தக் காலத்தில் இந்த தேவியை ஆத்மராம் என்கிற பக்தன் ஆழ்ந்த பக்தியோடு ஆராதித்து வந்தான். மாலை நேரத்தில் பாகீரதிக் கரையில் அவன் ஜெபம் செய்யும்போது கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் ஒன்று திடீரென்று தோன்றியது. அதைக் கண்டு வியந்தான் ஆத்மராம். ஒளி வந்த இடத்தை மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, தெளிவான தண்ணீருக்கு அடியில் மனிதக் கால் விரல்கள் போல் வடிக்கப்பட்ட சிறு கல் ஒன்றைக் கண்டான். அத்துடன் அவன் அன்றிரவு ஒரு கனவும் கண்டான். அந்தக் கல்லில் தென்பட்ட விரல்கள் தாட்சாயிணியின் வலக்கால் விரல்கள் என்று உணர்ந்து, அதை எடுத்து வந்து தேவியின் பாதங்களை ஒட்டி வைத்து அதற்கும் பூஜை செய்யத் தொடங்கினான். அந்தப் புனித இடமே காளி தேவியின் மகா சக்தி பீடமாயிற்று.
கல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஆத்மராமுக்கு ஒரு சிவலிங்கமும் கிடைத்தது. சிவலிங்கத்துக்கு நகுலேஷ்வர பைரவர் என்று நாமம் சூட்டி காளி சிலையின் அருகிலேயே அமைத்து வழிபட்டான். விரல்கள் போல் காணப்பட்ட அந்தக் கல், பின்னர் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இப்போதைய காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது.

நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் மதியம்  2.00 மணி வரையிலும் , மாலை 5.00  மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும்  திறந்து இருக்கும்.. 

அருகிலுள்ள விமான நிலையம் :  கொல்கத்தா

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஹௌரா

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×