பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு

	


		
 
	
 
12:41:16 AM         Wednesday, January 20, 2021

பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு

பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு
பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு
Product Code: பெரியநாயகி- தேவிகாபுரம்- தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

தேவிகாபுரம் அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில்
பெரியநாயகி அம்மன் கோயில்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர்-சென்னை நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. 

அம்மன் : பெரியநாச்சியார் (எ) பெரியநாயகி 
மூலவர்: கனககிரீசுவரர் (அ) பொன்மலைநாதர்
தீர்த்தம் :  சிவகங்கை 
தலவிருட்சம் : ஆலமரம்

சிறப்புகள் : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் உள்ளது சிறப்பு. சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.  உள் மண்டபத்தில் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி காட்சி தருகிறாள். அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு நின்ற கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றாள்.

தல வரலாறு : ஒரு சமயம் அம்மையும் அப்பனும் கயிலை மால்வரையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச் சென்றார்.அதுகண்டு வருத்தமடைந்த அன்னை இறைவனை நோக்கி வணங்கி அய்யனே தங்களுடலில் சரி பாதியை எனக்கு வழங்கியருள வேண்டும் என்று வேண்டினாள். இறைவனும் சக்தியை நோக்கி, பெண்ணே நீ பூவுலகம் சென்று கச்சியம்பதியில் (காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஜித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருணைக்கு (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடப்பாகம் தருவேன் என்று உறுதியளித்தார். அவ்வண்ணமே அன்னை கச்சியம்பதி வந்து தவமிருந்து ஏகாம்பரநாதரை மணந்தார். பின்னர் திருவருணைக்கு செல்லும்போது வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரி நாதரை வணங்கி தவமிருந்தார்.அதனால் இத்தலம் தேவிகாபுரம் என்று பெயர் பெற்றது என்பர். பின்னர் திருவருணைக்கு சென்று இடப்பாகம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

பெரியநாயகி ஆலயம் : கற்றவர் போற்றும் காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சி தனிப்பெரும் ஆலயத்துள் எழுந்தருளியிருப்பது போல, இங்கும் அன்னை ஆதிசக்தி தனி ஆலயத்துள் எழுந்தருளியிருந்து அருளாட்சி புரிந்து வருகின்றாள். தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. மலையடிவாரத்திலுள்ள பெரியநாயகி கோயில், சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 7 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவி இங்கு தவமிருந்து ஈசனிடம் சேர்ந்ததால், திருமணத்தடை உள்ளவர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தவத்தை மெச்சி பங்குனி உத்திரத்தின்போது சுவாமி மலையிலிருந்து கீழே இறங்கி வந்து திருமணம் செய்து கொண்டு போகிறார் என்பது இத்தலத்தின் சிறப்பு.

இரட்டை மூலஸ்தானம்: ஒரு முறை இத்தலத்தின் வழியே போருக்கு சென்ற பல்லவ மன்னன், இங்குள்ள சிவனின் பெருமை பற்றி கேள்விப்பட்டான். போரில் வென்றால், சிவனுக்கு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டான். வெற்றியும் பெற்றான். சிலர் கஷ்ட காலத்தில் கடவுளுக்கு நேர்ந்து கொள்வார்கள். காரியம் முடிந்ததும், கடவுளை மறந்து விடுவார்கள். மன்னனும் வெற்றிக்களிப்பில் இப்படியே மறந்தான். மீண்டும் ஒரு கஷ்டம் வரவே, சிவனுக்கு கோயில் கட்டினான். ஆனால், வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் காணாமல் போய்விட்டது. வருத்தமடைந்த மன்னன் காசியிலிருந்து வேறு லிங்கம் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும், மறைந்த சுயம்புலிங்கம் கிடைத்தது. கடவுள் தன்னை மறந்தவரை தானும் மறந்து விடுகிறார் என்பதற்கு உதாரணமே இந்த நிகழ்ச்சி. அவருக்கு மன்னன் கனககிரீஸ்வரர் என பெயரிட்டு, அதே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். இப்படியாக ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் அமைந்தது.
கோயில் அமைப்பு: கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது. இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கின வகையில் அமைந்துள்ளது. ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் காணலாம்.முகம்மதியர் படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன. 500 அடி உயரத்தில் 365 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. எல்லாநாளும் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த எண்ணிக்கையில் படிகள் அமைக்கப்பட்டது. 3 நிலை ராஜகோபுரம், நந்தி, பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தமாதர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரர் அருள்பாலிக்கிறார்கள்.

இங்கு விசாலாட்சி அம்மன் சன்னதியும் உள்ளது. கீழே உள்ள பெரியநாயகி அம்மன் தனி சன்னதி. விஜய நகர கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது. 
இவ்வாலயத்துள் 3 பிரகாரங்கள் உள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது முதலாவதாக ஆலயத்தின் வலப்புறம் ஓர் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. அதன் கரையில் நான்கு கால்களைக் கொண்ட குதிரைகள் இழுத்துச்செல்வது போன்ற கல்யாண மண்டபம் மிக அற்புதமான சிற்ப எழிலுடன் அமைந்துள்ளது. இதில் மனுநீதிச் சோழன் வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்கள் பொற்புடன் விளங்குகின்றன. இது காணவேண்டிய அழகிய மண்டபம் ஆகும். இவை இரண்டிற்கும் இடையில் பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. இதை அடுத்து திருநந்தி தேவர்அன்னையை நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். கோயிலின் வலப்புறம் விநாயகப் பெருமானும், இடப்புறம் ஆறுமுகப்பெருமானும் உள்ளனர். இம்மூன்றாம் பிரகாரத்தின் இருபுறங்களிலும் பண்டை நாளில் நறுமணங்கமழும் சோலைகள் இருந்தனவாக எண்ணுவதற்கு இடமளிக்கிறது. அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது. அது தற்போது வடக்குப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அங்கு வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் உள்ளன. இந்தப்பிரகாரத்தில் தான் மிகுதியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கியவாறிருக்கும் நடராசமூர்த்தி உள்ளார். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சவமூர்த்திகளும் அடுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார்ஆகியோரின் திருவுருவங்களும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளின் உருவங்களும் உள்ளன. இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய உருவங்களைக் காணலாம்.

நடை திறக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் 11.00 வரை மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.  
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை 150 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : காட்பாடி 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×