மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு
	


		
 
	
 
1:56:20 PM         Thursday, August 13, 2020

மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு

மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு
மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு
Product Code: மதுரகாளியம்மன் - சிறுவாச்சூர்-தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டம் 7 கி.மீ. முன்னதாகவே  உள்ளது. இந்த கோவிலுக்கு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் இருக்கும்.

அம்மன் : மதுரகாளி 
தலமரம் : மருதமரம் 
தீர்த்தம் : திருக்குளம் 

சிறப்பம்சம் : அம்மன் கோவில்களின் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக திகழ்வது மதுர காளி அம்மன் கோவில். இந்த தலத்தின் மா விளக்கு போடுதல் மிகவும் பிரத்தி  பெற்றதாக உள்ளது. வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.
அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.
இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம்.  திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை. அருளும் நிலையிலேயே காட்சி.

தல பெருமை : மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுர காளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.  1000 வருடங்களுக்கு முந்தைய கோயில். குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். மலைகளும் ஏரியும் குளமும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்துள்ள மனதிற்கினிய சூழலில் ஊரின் எல்லையில் அன்னையின் திருக்கோயில் அமைந்துள்ளது. எழிலார்ந்த ராஜ கோபுரம். பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுத்தான் பிற்பாடு மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.  

தல வரலாறு : சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மனஅமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டாள் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. சிறுவாச்சூரின் வழிபடு தெய்வம் செல்லியம்மன் ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்கிறாள். செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்கிறாள்.செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனோ தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறித் தங்குகிறாள்.வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள். 

செல்லியம்மன் அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள், வெள்ளி மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.

தல வரலாறு :  ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்றது இத்தலம். காவிரிபூம்பட்டினத்தின் அழகுடன் வாழ்ந்தவர்கள் கோவலன், கண்ணகி. விதி வசத்தால் பிரிந்து, சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தால். எரித்தபின் மன அமைதி கொள்ளாமல் அலைந்து திரிந்தாள். பின்னாளில் அம்மனாக வடிவெடுத்து மதுரை சிறுவாச்சூர் வழியாக வந்தடைந்தாள். 
இந்த தலத்தில்  சிலப்பதிகாரத்திற்கு சொந்தமான கண்ணகி மதுரையை அழித்தபின் தனது நிம்மதிக்காக  இந்த ஊரில் வந்து மன நிம்மதி கொண்டாள்  என்று  சில செய்திகள் கூறுகின்றன. ஆனால்  முக்கியமான வரலாறாக கருதப்படுவது அந்த காலத்தில்  மந்திரம் செய்யும் மந்திரவாதி     ஒருவன் இருந்தான். அவன் இந்த கோவிலில் மிகவும் சிறப்பு பெற்ற செல்லியம்மனை தன து கட்டுப்பாட்டில் வைத்து தவறான செயல்களை செய்ய வைத்தான். அப்போது மதுரையில் வீற்றிருக்கும்  காளி அம்மன் ஒரு நாள் இந்த அம்மனை காண வந்திருக்கிறாள். அன்றைய தினம்  வெள்ளி கிழமை. அப்போது காளி அம்மன் தன்னை இங்கு ஒரு நாள் இரவு தங்க வைக்குமாறு கூறும் போது செல்லி அம்மன் தன்னை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மந்திரவாதி பற்றி கூறினாள். அப்போது தன்னை மந்திரவாதி தன்னை தீய செயல்களுக்கு துணை புரிய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறினாள்.  உடனே அதனை கண்டு நீ அஞ்ச வேண்டாம் நான் அதனை பார்த்து கொள்கிறேன் என்று மதுரையில் இருந்து வந்த காளி அம்மன் கூறினாள்.   பிறகு மந்திரவாதி வரும்போது தான் அவனை எதிர்கொள்வதாகவும் கூறினாள். காளி அம்மன் கூறிய படியே மந்திரவாதி வந்த உடன் அவனுடன் போரிட்டு செல்லி அம்மனை  காப்பாற்றினாள்.  இதனை அறிந்த செல்லி அம்மன் இந்த ஊரிலே காளி அம்மனை தங்குவதற்கு  வற்புறுத்தினாள். ஆனால் காளி  அம்மனோ  பிறகு தான் சிறுவாச்சூர் பக்கத்தில் இருக்கும் பெரியசாமி  மலையில் இருப்பதாகவும்  பிறகு சிர்வாசூரில் எப்போழுதுமே காளி அம்மனுக்கு முதலில் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் கூறினாள். ஆதலால் தான் இந்த கோவில் திங்கள், வெள்ளி கிழமைகளில் தான் திறந்திருக்கும். 
கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து தொழ விலகிச் சென்று விடுகின்றன. குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிடக் கரைந்து காணாமற்போய் விடுகின்றன.

திறக்கும் நேரம்: காலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×