சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா




	


	



























	




 




	








 




7:09:40 AM         Thursday, August 06, 2020

சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா

சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா
சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா
Product Code: சாரதாம்பிகை - சிருங்கேரி - கர்நாடகா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்
திருத்தல அமைவிடம் :  சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் துங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
தீர்த்தம் : துங்கபத்ரா 
பாடியவர் : ஆதிசங்கரர் 
சிறப்புகள் :  இங்குள்ள சாரதா தேவியானவள் `ப்ரம்ம வித்யா' ஸ்வரூபமாக அதாவது பிரம்ம,விஷ்ணு, சிவன் மற்றும் ஸக்தி ஸ்வரூபங்களாகிய சரஸ்வதி, லஷ்மி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே ஸ்வரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் பமாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.

சர்வ வல்லமைகளையும் கொண்டவளாக, கருணையின் திருவுருவமாக அருள் பாலிக்கிறாள் அம்பிகை. இங்கு வீற்றிருக்கும் சாரதா அம்பாளுக்கு நான்கு கரங்கள். ஒன்று சின்முத்திரையுடன் விளங்குகிறது. இது ஜீவன் மற்றும் பிரம்மத்தின் ஐக்கியத்தைக் குறிப்பதாகும். இன்னொன்று ஜபமாலையுடன் விளங்குகிறது. அந்தக் கையின் மேல் கொஞ்சும் கிளி ஒன்றும் உள்ளது. இது ஜீவ உற்பத்திக்கு மூலாதாரமான புஜத்தைக் குறிப்பிடுகிறது. மற்றொரு கையில் அமிர்தகலசம் உள்ளது. இது என்றும் அழிவில்லாத் தன்மையை உணர்த்துகிறது. நான்காவது கையில் ஒரு புத்தகம் உள்ளது. இது ஸர்வ வித்யா ஸ்வரூபத்தை விளக்குகிறது.  துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்தார், ஆதிசங்கரர். சிவபெருமான் தனக்குப் பிரசாதமாகத் தந்த ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமௌலீஸ்வரரையும் ரத்தின கர்ப்பகணபதியையும்  முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு இன்று வரை பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக திருவருள்பாலிக்கிறாள். 
ஸ்ரீ சாரதா பீடம் :இங்கு ஆதிசங்கரர் நிறுவியதாகக் கருதப்படும் அத்வைத பீடம் மற்றும் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. புராண கதைகளின்படி, ஆதி சங்கரர் இந்த இடத்தில் ஒரு தவளை நாகத்திற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதைக் கண்டு வியந்து , தனது சிஷ்யர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கான இடமாக தேர்ந்தெடுத்து உள்ளார். இயற்கையின் விதிகளை மீறி பகைமை உணர்வை மிருகங்களே அந்த இடத்தில் கைவிட்டதே அதற்கு காரணம். அவர் இந்த இடத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். மேலும் அவர் இந்த மடத்தைத் தவிர்த்து வடக்கில் பத்ரிநாத் அருகில் ஜோதிர்மத்திலும், கிழக்கில் பூரியிலும் , மேற்கில்துவாரகையிலும் மடங்கள் அமைத்துள்ளார்.

ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள். இவளை வேண்டினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில்  சேர்க்குமுன் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு. 

தல வரலாறு  : அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம்பாவுக்காய் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஷீ சங்கர பஹவத்பாதரால் 7 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14ம் நூற்றாண்டில்  சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது. யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார். ஸ்ரீ சாரதாம்பா கோவில் கல்வி மற்றும் ஞானக் கடவுளான தேவி சாரதைக்காகக் கட்டபட்டுள்ளது. இந்த கோவில் ஆதி சங்கரர் காலத்தைச் சேர்ந்தது. 14ம் நூற்றாண்டில், வித்யாரண்யர், சந்தன விக்ரகத்தை கல் மற்றும் தங்கத்தாலான விக்ரகமாக மாற்றியுள்ளார். கோவில் கட்டடமும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீவிபத்தின் காரணத்தால், தென் இந்திய ஹிந்து கலாசார கட்டிடக்கலை படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.  

தீயில் சிக்கி இடிபாடடைந்த நிலையில் இருந்த இந்த கோயில் தென்னிந்திய கட்டிடக்கலை மரபுப்படி திரும்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே உள்ள மகாமண்டபத்தில் செதுக்கப்பட்டு துவாரபாலகர்கள், துர்காதேவி மற்றும் ராஜராஜேஷ்வரி ஆகியோர் சிலைகள் காணப்படுகின்றன.
மேலும் அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும்  தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக்கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மேலும் உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்றவற்றை இந்த புனிதத்தலத்தில் கொண்டாடுகின்றனர்.

ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. சன்னதியிலுள்ள மூலவர் மற்றும் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் தினப்படி மற்றும் விசேஷ தின பூஜைகள் ஆதி நியமத்துடனும் ஆதி விமரிசையுடனும் நடத்தப்படுகிறது.


நடை திறக்கும் நேரம் :  தினமும் காலை 6.00 மணி முதல் 2.00 மணி வரையும் மாலை 5.00  மணி முதல் இரவு 9.00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். 


அருகிலுள்ள விமான நிலையம் : மங்களூர்  71 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிருங்கேரி 55 கி.மீ 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×