புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு
	


		
 
	
 
6:31:43 AM         Thursday, August 06, 2020

புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு

புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு
புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு
Product Code: புன்னை நல்லூர் மாரியம்மன் - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்

திருத்தலஅமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் நீடாமங்கலம் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் புற்றுவடிவில் மாரியம்மன் அருள்பாலித்து வருகிறாள்.   
மூலவர் : மாரியம்மன்
தல விருட்சம் : வேம்பு மரம் 
தீர்த்தம் :   வெல்ல குளம் 
சிறப்புகள்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக, புற்று வடிவில் அருள் மழை பொழிகிறார். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன். கோடையில் அம்மனின் முகத்திலும், தலையிலும் முத்து முத்தாக வியர்வை தோன்றி மறைவதை இப்போதும் காண முடிவது கலியுக அதிசயம். அதனாலேயே அம்மனுக்கு பெயர் முத்து மாரியம்மன்.  இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் தினமும் அபிஷேகம் நடத்தப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மாரியம்மனுக்கு புணுகு சட்டம் சார்த்தப்படுகிறது. அந்த நேரம் திரை போடபட்டிருக்கும்.  புரட்டாசி மாதம் இங்கு அம்மனுக்கு தெப்ப திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இது தவிர ஆவணி தேரோட்ட விழாவும் சிறப்பாக நடைபெறும். 
தல வரலாறு: 1680ல் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா திருத்தல யாத்திரை செய்யும் போது, சமயபுரத்தில் தங்கினார். அன்றிரவு அம்பிகை அரசரின் கனவில் தோன்றி, ஒரு புன்னைக் காட்டில் புற்றுவடிவில் தான் இருப்பதாகவும், தன்னை வழிபடும்படியும் கூறி மறைந்தாள். அரசரும், அவள் குறிப்பிட்ட இடம் வந்து புற்றுவடிவில் இருந்த அம்மனைக் கண்டு, மேற்கூரையும் அமைத்தார்.
18 ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி ராவ் தான் இந்த கோவிலை கட்டினார். அதற்கு முன்பு புற்று வடிவில் தான் இந்த ஆலயம் இருந்தது. அம்மை மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு உள்ளது. பின்பு ஆட்சி புரிந்த சரபோஜி மன்னரும் இந்த கோவிலை புனரமைத்தார். ஒரு முறை துலஜா ராஜாவின் மகளுக்கு கண் பார்வை இழந்த போது புன்னைநல்லூர் மாரியம்மனை வேண்டி பார்வை திரும்ப கிடைத்ததாக சொல்லபடுகிறது. சதாசிவ பிரம்மேந்திரர்  இந்த கோவிலுக்கு வந்து புற்றில் மாரியம்மன் முக வடிவை அமைத்ததாகவும் ஸ்ரீசக்ரம் பதித்ததாகவும் சொல்லபடுகிறது. சோழமன்னர்கள் தங்களது வெற்றிதெய்வமாக காளியை வழிபட்டு வந்தார்கள். இவர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு திசைகளிலும், அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தார்கள். இதில், கிழக்கு பக்கம் அமைக்கப்பட்ட சக்தியே "புன்னைநல்லூர் மாரியம்மன்' என சோழசம்பு நூல் கூறுகிறது.
பார்வை தந்த பார்வதி : துளஜா என்ற ராஜாவின் புதல்விக்கு அம்மை நோய் ஏற்பட்டு பார்வை போனது. அம்மன் பக்தரான இவரது கனவில், குழந்தை வடிவில் தோன்றிய அம்பிகை, புன்னைநல்லூர் வந்து வழிபடும்படி கூறி மறைந்தாள். மன்னரும் அதன்படி செய்தார். மகளுக்கு பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ந்த மன்னர், மேற்கூரையை மாற்றி விட்டு, பெரிய அளவிலான கோயில் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார்.
கோயில் அமைப்பு:  சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்து மாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன.  சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது. மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்கள். சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்தது.
அபிஷேக முறை: மூலவர் புற்று மண்ணால் ஆனதால், அபிஷேகம் கிடையாது. அதற்குப் பதிலாக தைலக்காப்பு சாத்தப்படுகிறது. மூலவர் அருகிலுள்ள விஷ்ணு துர்க்கைக்கும், உற்சவ அம்மனுக்கும் அபிஷேகம் உண்டு. ஐந்து வருடத் திற்கு ஒருமுறை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அம்பாளுக்கு தைலக்காப்பு செய்யப்படும். அப்போது, அம்மனை ஒரு வெண்திரையில் வரைந்து அதில் ஆவாஹனம் செய்து, ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) பூஜை செய்யப்படுகிறது. தைலக்காப்பில் இருக்கும் காலத்தில் உஷ்ணத்தால் பாதிக்காமல் இருக்க இளநீர், தயிர் நைவேத்யம் செய்யப்படுகிறது. அத்துடன் மூலஸ்தானத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள உள்தொட்டி, வெளித்தொட்டி இரண்டிலும் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அம்மை நோய் காணும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைந்து வருவது இன்றுவரை கண்கூடாக உள்ளது. இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார். ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூசை நடைபெறும் கோயில் இது. தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசிக்கிறார்கள்.
இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுகிறது. தவிர தோல் வியாதியால் அவதிப்படுவோர், கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், உடம்பில் சொறி, சிரங்கு உள்ளவர்கள், உடம்பில் கட்டிகள் ஏற்பட்டு தொல்லை உள்ளவர்கள் , உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் அம்மனை வேண்டிக் குணமடைகிறார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி, பணி உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொடுக்கிறார். இங்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுகிறார்கள்.

திறக்கும் நேரம்:  காலை 5.00 மணி முதல் பகல் 9.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 3.00 மணி இரவு 11.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்
 
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 60 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர்
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×