ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு
	


		
 
	
 
6:30:15 AM         Thursday, August 06, 2020

ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு

ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு
ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு
Product Code: ஸ்ரீ தண்டு மாரியம்மன் - கோவை - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

தண்டு மாரியம்மன் - கோவை

திருத்தலஅமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோவை அவினாசி சாலையில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
மூலவர் : தண்டு மாரியம்மன். 
தல விருட்சம் : துவட்டி மரம் 
தீர்த்தம் :   சுனை நீர் 

சிறப்புகள்:  தண்டு மாரியம்மன் மூலஸ்தானத்தில் மூலவராக வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் கட்சி தருகிறார். துர்கா தேவியின் அம்சமாக  காட்சி தருகிறார். அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பலிக்கிறார். அனைத்து மத்தினரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறாள். 
தண்டு என்ற சொல்லே அன்னையின் பெயருக்கு அமுதூட்டும் சிங்கார சொல்லாய் சிறப்புப் பெயராய் அன்னையின் பெயருடன் சேர்ந்து வழங்கி வருகிறது. அன்னை தண்டு மாரியம்மன் முப்பெருந்தேவியாய், அகிலாண்ட நாயகியாய், ஆதிபராசக்தியாய், சாந்த சொரூபிணியாய் சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் எழுந்தருளி கோவை நகரை அரசாட்சி செய்யும் அன்னையாய் திகழ்ந்து வருகிறாள். 
துர்கா தேவியின் அம்சமாக வீற்றிருக்கும் தண்டு மாரியம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவள். செவ்வாய்க்கிழமைகள் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி 9 வாரம் வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
தல வரலாறு: வியாபாரத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி நமது மக்களிடையே ஒற்றுமையை குலைத்தனர். அதன் மூலம் நம்மை அடிமைகளாக மாற்ற சதித்திட்டம் தீட்டினர்.  இந்த நேரத்தில் தான் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினார்கள். அதே போல் மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க் கத்துணிந்தான். நமது மக்களின் அடிமை வாழ்வை மீட்கும் வகையில் படையுடன் கோவை வந்து கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்தான். அங்கு தங்கிருந்த வீரர்களில் ஒருவன் அம்பாளின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவளை தினமும் வணங்கி வந்தான். அவனது கனவில் ஒரு நாள் மாரியம்மன் வீரர் குடியிருக்கும் பகுதியில் வேப்ப மரங்களுக்கும், காட்டு கொடி களுக்கும் இடையே இருந்த நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி தன்னை அங்கே வழிபட கட்டளை இட்டாள். போர் வீரர்கள் தங்கியிருந்தண்டு (கூடாரம்) ஒன்றில் ஒரு படை வீரரை மாரித்தாய் வல்லவி ஆட்கொண்டாள். படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் தண்டுமாரி என்று பெயரிட்டு தொழுது கொண்டாடினர். கோவில் அமைத்து வழிபட்டனர். தன் அருள் மழையை மக்களுக்கு வழங்க நினைத்த அவள் தன் இருப்பை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள். மைசூரிலிருந்து வந்த படைகளுடன் ஒரு படைக்கலமாக இந்த அம்மனின் லிங்க வடிவத்திலான உருவமும் கலந்து கொண்டு வந்து சேர்ந்து விட்டது. போர் முடிந்து புறப்படும் போது இந்த லிங்கத்தை எடுத்து சென்று விட்டனர். ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த லிங்கம் மாயமாய் மறைந்து விட்டது. மறுபடியும் இங்கு வந்து பார்த்தபோது மாரியம்மன் இங்கேயே குடியமர்ந்திருக்கின்ற அபூர்வம் அவர்களுக்கு புலப்பட்டிருக்கிறது. இதை எடுத்த செல்ல முயன்றும் அவர்களால் முடியவில்லை. துர்க்கையின் அம்சமாகக் கோவையில் கொலுவிருக்கும் குணபூரணியே அன்னை தண்டு மாரி. 
கோயில் அமைப்பு:  தண்டு மாரியம்மன் சன்னதிக்கு மேல்புறம் அரசமரத்தின் கீழ் கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். கிழக்குப்பகுதியில் நகக்கிரக பீடம் உள்ளது.  முன் மண்டபத்தில் அஷ்ட லட்சுமியின் திருஉருவங்கள் உள்ளன. கோவிலின் வடக்கு பகுதியில் கருப்பராயன், முனியப்பன் ஆகிய தெய்வங்களின் பழமை வாய்ந்த திருக்கோலங்கள் உள்ளன. 

தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 1.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்பத்தூர், கொச்சின் 140 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்பத்தூர்
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×