கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு
	


		
 
	
 
2:30:09 PM         Thursday, August 13, 2020

கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு

கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு
கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு
Product Code: கோனியம்மன் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

கோனியம்மன் கோயில்

திருத்தல  அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது. 
மூலவர் :  கோனியம்மன்
தல விருட்சம் : மகிழ, அரச,  நாகலிங்க பூ மரம் 
கோனியம்மன் திருவுருவம்: மூலஸ்தானத்தில் வடக்குப் பார்த்துக் கோயில் கொண்டுள்ள அம்மனின் சிலை உருவம் சுமார் 3½ அடி அகலமும், 2½ அடி உயரமும் உடையது. முகத்தில் மூண்ட கோபமும், உக்கிரமான பார்வையும், தம்முடன் எதிர்த்துச் சண்டையிட வந்த கொடிய அசுரனை, தேவி அவன் பலத்தை ஒடுக்கி, வீர வாளால் சிரத்தை வெட்டி வீழ்த்தி, வீர வாகை சூடியது போல் அம்மனது தோற்றம் விளங்குகின்றது. மகிஷாசுரமர்த்தினியின் வலக்கைகள் நான்கிலும், சூலமும், உடுக்கை, வாள் ஆகிய ஆயுதங்களும், இடக்கைகள் நான்கிலும் கபாலம், தீ, சக்கரம், மணி ஆகிய நான்கு ஆயுதங்களும் உள்ளன. 
மூலஸ்தான திருவுருவத்தில், இடச் செவியிலே குண்டலமும் காணப்படுவதால் கோனியம்மன் ஏனைய சாதாரண சக்தியன்று. அர்த்தநாரீஸ்வரர் தொடர்பு கொண்ட வீரசக்தி ஆவாள்.  கருவறையின் பின்புறம், ஆதி கோனியம்மன் சிலை மார்பளவு உள்ளது. அரச மரத்தின்  கீழ் பஞ்சமுக கணபதி 10 கைகளுடன் காட்சி தருகிறார். சிவனைப் போன்று இடது  காதில் தோடு அணிந்து உள்ளார். வலது காதில் குண்டலம் அணிந்திருக்கிறார். இது  ஒரு அபூர்வமான காட்சி. வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி இங்கு ஆடிமாதம் 30 நாட்களும், ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. நவகிரகங்கள் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது மேலும் ஒரு சிறப்பு.
கோவில் அமைப்பு : இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார். 
சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் ராஜ கோபுரத்துடன் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது இந்த ஆலயம். இங்கு விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மாகாளி அம்மன், தம்பதி சமேதாராக நவகிரகங்கள், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். அமாவசை, பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள், மாசி 14 நாட்கள் திருவிழா, தை வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகை மற்ற விழாக் காலங்களில் காமிக ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு : கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான். ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன், தனது ஆட்சியின் கீழ் வசிக்கும் மக்கள், வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம், பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின், இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வழிபடத் தொடங் கினர். இக்கோயில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக் காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும், மண்மேட்டையும் கட்டி, காப்புத்தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.

தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 12.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 
வரையிலும் கோவில் திறந்திருக்கும்

அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்பத்தூர்  5 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்பத்தூர் 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×