திருக்கோவிலூர்

	


		
 
	
 
1:39:47 PM         Friday, May 14, 2021

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர் திருக்கோவிலூர்
Product Code: திருக்கோவிலூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                    திருக்கோவிலூர்- உலகளந்த பெருமாள் கோவில் ( திருவிக்கிரமசுவாமி )

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.

மூலவர் : திருவிக்கிரமர்

உற்சவர் : ஆயனார், கோவலன்

அம்மன் : பூங்கோவல் நாச்சியார்

தல விருட்சம் : புன்னைமரம்

தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், ஸ்ரீசக்ரதீர்த்தம்

கிருஷ்ணருக்கான ஐந்து தலங்களாக திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகியவை  பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 

தல சிறப்புகள் : இது பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம் என்ற பெருமை உடையது.  இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். மூலவரின் திருமேனி 21 அடி உயரம் கொண்ட பழமையான மரத்தால் ஆனதாகும். எம்பெருமான் பச்சிலை மூலிகைகளைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டு பேரழகனாக வீற்றிருக்கிறார். இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள பகவான் மகாபலியை தன்னுடன் இணைத்துக் கொண்ட வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி திருமார்பில் ஸ்ரீவத்ஸமும் கண்டத்தில் கௌஸ்துபமும் காதுகளில் குண்டலமும் வைஜெயந்தி வனமாலை புரள தேஜோ மயமாக விளங்குகிறான். பிரகலாதன், மகாபலி, விஷ்வக்சேனர் புடை சூழ ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக எழுந்தருளியிருக்கிறான். உற்சவராக ஆயன், ஆயனார், கோவலன், கோபாலன் எனும் பல்வேறு திருநாமங்களோடு கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இப்படி காட்சி தருவது பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஐதீகம். பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பின் திரிவிக்ரமனான காட்சியளித்த உலளந்த பெருமாளாக திருமால், மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு திருமால் காட்சியளித்து அவர்களை பாசுரம் பாட வைத்த தலம். இங்கு திருமால் திரிவிக்ரமர், உலகளந்தப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 43-வது திவ்ய தேசமாகும்.

ஓரடியால் வானத்தை அளந்தும், மற்றொரு அடியால் பாதாள உலகை அளந்தும், மூன்றாவது அடியை எங்கே வைப்பது என மகாபலியை கேட்கும் விதமாக வலது கையை வைத்துள்ளார். மேலே உள்ள திருவடியை பிரம்மா ஆராதனை செய்ய, கீழே உள்ள திருவடியை லட்சுமி, பிரகலாதன், மகாபலி, நமச்சு மகாராஜா ஆகியோர் பூஜை செய்கின்றனர். சுக்ராச்சாரியார், மிருகண்டு மகரிஷி, அவரது பத்தினி, முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடன் ஆகியோர் கருவறையின் வலது பக்கமும், இடது பக்கமும் காட்சி தருகின்றனர்.

திரிவிக்ரம சுவாமியின் வலதுபுறம் தாயார் பூங்கோவல் நாச்சியார் சன்னிதி அமைந்துள்ளது. இது, கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை கொண்டு எழிலோடு தனிக்கோவிலாக அமைந்துள்ளது. மூலவர் பூங்கோவல் நாச்சியார் என்றும், உற்சவர் புஷ்பவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகின்றாள். திரிவிக்ரம சுவாமியை பிரம்மா, இந்திரன், மகாபலி, மிருகண்டு, குஷி, காசியபர் மற்றும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

தல வரலாறு : மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான். அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும்  மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார். மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார்.

இத்தலம் நடுநாட்டு திருப்பதி என சிறப்பாக அழைக்கப்படுகிறது. மிருகண்டு முனிவர், ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதார கோலங்களைக் காண வேண்டினார். அதற்காக எதுவும் உண்ணாது, தீவிர விரதமிருந்த முனிவரின் வைராக்கியத்தை பிரம்மன் கண்டு வியந்தார். ‘‘மிருகண்டு முனிவரே, தாங்கள் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில், கிருஷ்ண க்ஷேத்ரத்தில், கிருஷ்ணன் எனும் திருநாமத்தோடு பகவான் கோயில் கொண்டிருக்கும் தலத்திற்குச் சென்று தவமியற்றுங்கள்’’ என்று பணித்தார். உடனே, முனிவர் இந்த திருக்கோவிலூர் வந்து தவமியற்றி வாமன, திருவிக்ரம தரிசனத்தை கண்டார்.

இந்த தலத்திற்கு ஆதியில் கிருஷ்ணன் கோயில் என்றே பெயர். சதுர் யுகங்களுக்கு முற்பட்ட தொன்மையை உடையது. கோபாலன் எனும் சொல்லே கோவாலன் எனத் திரிந்தது. அதுவே திருக்கோவலூர் என்றும் கோவிலூர் என்றும் ஆனது. மிருகண்டு முனிவருக்கு திருவிக்ரமராக அவதாரத்தைக் காட்டும் முன் கிருஷ்ணனாக பகவான் எழுந்தருளியிருந்த சந்நதி, தற்போது இத்தலத்தின் முன்புறத்திலேயே உள்ளது. சாளக்கிராமத் திருமேனியுடன் ஆதிசந்நதியில் அருள்பாலிக்கிறார் கிருஷ்ணர். இங்கு கிருஷ்ணன் ஆனந்தமாக உறைவதை அறிந்த துர்க்கை விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இங்கு கோயில் கொண்டாள். துர்க்கைக்கு இங்கே கோயிலும், வழிபாடுகளும் உண்டு. இதை திருமங்கையாழ்வார், ‘‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்’’ என்று புகழ்கிறார். கிருஷ்ண பத்திரா நதியைத்தான் பெண்ணை ஆறு என்கிறோம்.

கோவில் அமைப்பு : இந்த கோவில் ஊரின் நடுவே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. இந்த கோவில் மற்றும் கோபுரங்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோவிலுக்கு கிழக்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரங்கள் மிகப்பெரியதாக இருக்கும். கோவில் வாசலில் உள்ள ராஜகோபுரம், திருமங்கை மன்னன் கோபுரம் என மொத்தம் 4 கோபுரங்கள் உள்ளன. மேலும் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி தனித்தனியே உள்ளது. இங்குள்ள தாயார் சன்னதி மிக நீண்ட சன்னதி என்ற பெருமை கொண்டது.

ஒரு சமயம் மிருகண்டு முனிவர் இந்த தலத்திற்கு வந்து திருமாலை நோக்கி தவம் செய்தார். திருமாலும் மிருகண்டு முனிவருக்குத் தரிசனம் காட்டி என்ன வேண்டும் என்று கேட்க தனக்கு வாமன அவதாரம் காட்சியை மீண்டும் காட்ட வேண்டும் என்றார். பெருமாளும் உடனே வலது காலை விண்ணில் வைத்து இடது காலை பூமியில் அழுத்தி வாமன அவதாரத்தைக் காட்டினார். இன்னொரு சமயம் இங்கு தங்கி தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களைத் துன்புறுத்திய பாதாள கேது என்ற அரக்கனை திருமால் குசத்வஜன் என்ற மன்னன் மூலம் கொன்று முனிவர்களது பயத்தைப் போக்கியதாக வரலாறு உண்டு. கி.மு.500 -ம் ஆண்டில் கட்டப்பட்ட கோவில் என்பது மிகவும் பிரசித்தம்.

நல்ல பதவிகளை அடைய விரும்புவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச்சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

காலை 6.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி  முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :  திருக்கோவிலூர்

அருகிலுள்ள விமான நிலையம் : புதுச்சேரி

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×