10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு




	


	



























	




 




	








 




1:30:09 PM         Thursday, August 13, 2020

10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு

10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு
10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு
Product Code: 10.வாதாபி பிள்ளையார்- தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருச்செங்காட்டங்குடி  உத்தராபதீசுவரர் கோயில்

 

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  நாகை மாவட்டத்தில். நன்னிலத்திலிருந்து வடகிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு திருவாரூர்-திருமருகல் வழித்தடத்தில் நேரடி பஸ் வசதி உள்ளது.

மூலவ‌ர் :  வாதாபி பிள்ளையார்

இறைவன் பெயர் : உத்ராபதிஸ்வரர் , கணபதீஸ்வரர்

இறைவி பெயர் :  திருக்குழல் நாயகி

தல விருட்சம் :  ஆத்தி ( மந்தாரை )

தீர்த்தம் : சத்ய, சூரிய தீர்த்தம் 

தேவாரப்பாடல் பாடியவர் : திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி.

தலச் சிறப்புகள் :. இத்தலத்தில் பிள்ளையார் கயமுகாசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்டார் என்பதும், இறைவன் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை. பல்லவர் கால தெய்வீகக் கலைச் செல்வங்களான நவதாண்டவ மூர்த்திகளையும், துவார பாலகர்களையும் நீங்கள் காணவேண்டுமென்றால் இந்த ஊருக்குத்தான் வரவேண்டும். இறைவன் உத்திராபதீஸ்வரர், சிறுத் தொண்டருக்கு அருள் புரிந்த பைரவ வேடத்திலேயே காட்சி தருகிறார். அந்த சிலையைப் பார்க்கவே வித்தியாசமாயிருக்கும்

தல வரலாறு:  சிறுத் தொண்டர் நரசிம்ம பல்லவ மன்னனிடம் படைத் தளபதியாக விளங்கியவர் பரஞ்சோதியார். இவர் தலைசிறந்த சிவத் தொண்டர். இவரது காலம் ஏழாம் நூற்றாண்டாகும். இவர் மன்னனின் ஆணைப்படி வாதாபி மீது போர் தொடுத்து மாபெரும் வெற்றி பெற்றார். பரஞ்சோதியார் சிவத் தொண்டில் சிறந்து விளங்குவதைக் கேள்விப்பட்ட மன்னர், அவரை வணங்கி, அத்தொண்டிலேயே அவர் முழுமையாக ஈடுபட அனுமதி அளித்தார்.

உடனே தனது “போர்த் தளபதி’ பதவியை விட்டு நீங்கி, சிறுத் தொண்டர் என்னும் பெயருடன், தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தார். அங்கே அவரது மனைவியாரான “திருவெண்காட்டு நங்கை’யுடன் சிவத்தொண்டில் ஈடுபட்டார். நாள்தோறும் ஒரு சிவனடியாருக்காவது அன்னமிட்டு உண்பது அந்தத் தம்பதியின் வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், ஒரு நாள் ஒரு அடியார் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால், “யாரேனும் சிவனடியார் கிடைக்கின்றாரா?’ என்று பார்த்து வரப் புறப்பட்டார். இவரின் அன்பை வெளிப்படுத்த விரும்பிய இறைவன், பைரவர் வேடம் தாங்கினார்; சிறுத் தொண்டரின் இல்லத்திற்கு வந்தார்.

அவரை சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், பணிப்பெண் சந்தன நங்கையும் வரவேற்றனர். தன்னை “உத்திராபதி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சிவபெருமான், “”பெண்கள் மட்டுமே உள்ள இல்லத்தில் யாம் புகுவதில்லை, யாம் கணபதீச்சரத்து (திருச்செங்காட்டங்குடி கோயில்) அருகே உள்ள ஆத்திமரத்தடியில் காத்திருக்கிறோம். சிறுத்தொண்டர் வந்ததும் வருகிறோம்” என்று கூறிச் சென்றுவிட்டார். அடியார் கிடைக்காமல் மனம் வருந்தி வீடு திரும்பிய சிறுத் தொண்டர், நடந்ததை அறிந்தார். உடனே ஆத்திமரத்தடிக்கு ஓடினார். அங்கே சிவபெருமான், சிவனடியார் கோலத்தில் காத்திருந்தார். அவரை அமுதுண்ண அழைத்தபோது, “”நான் நரப்பசு மட்டுமே உண்பேன்; எனக்கு பெற்றோரின் விருப்பத்தின் பேரில் ஊனமில்லாத தலைமகனின் கறி சமைத்துத் தந்தால் சாப்பிட வருவேன்” என்று கூறினார்.

இதைக் கேட்டு சற்றும் தயங்காத சிறுத் தொண்டர், அடியார்க்கு அமுது படைக்க தனக்கொரு பிள்ளை பிறந்ததை எண்ணி மகிழ்ந்தார். அவரது மனைவியும் கணவன் சொல் தட்டாத காரிகை. அதனால் மனதைத் திடமாக்கிக் கொண்டு, பிள்ளைக் கறி சமைக்க ஒப்புக் கொண்டாள். இருவரும் மனமொருமித்து, சிவனடியார்க்கு பிள்ளைக் கறி சமைக்கத் தயாராகினர். தங்கள் குழந்தையான சீராளனைப் பள்ளிக் கூடத்தில் இருந்து அழைத்து வந்து, அவனை ஒரு காய்கறிப் பொருளாகவே எண்ணி, அரிந்து கறி சமைத்தனர், சிறுத் தொண்டரும் அவரது மனைவியாரும்! சமைத்ததை வாழை இலையில் பரிமாறினர்.

சாப்பிட அமர்ந்த இறைவன், ஒன்றும் அறியாதவர் போல், “உன் மகனையும் அழைத்து என் பக்கத்தில் அமர வைத்தால்தான் சாப்பிடுவேன்’ என்று பிடிவாதம் செய்தார். வேறு வழியின்றி சிறுத் தொண்டர் வெளியே சென்று, “”கண்மணியே சீராளா! ஓடி வா! சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உண்ண உன்னை அழைக்கின்றார், ஓடி வா!” என்று ஓலமிட்டு அழைத்தார்.
அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.

பள்ளிக்கூடத்திலிருந்து சீராளன் வழக்கம்போல ஓடி வந்தான்! அவனைக் கண்டு அதிசயித்த சிறுத் தொண்டர், அவனை வாரி அணைத்து சிவனடியாரிடம் கொண்டு சென்றார். அங்கே அடியாரைக் காணவில்லை. இவை அனைத்தும் இறைவனின் திருவருளே என்பதை உணர்ந்தனர். அப்போது வான வீதியில் காளை வாகனத்தில், அன்னை பார்வதியுடன் இறைவன் சோமாஸ்கந்தராகத் தோன்றி காட்சியளித்து அருள் வழங்கினார்.பிள்ளைக் கறி கேட்டு வந்த “உத்திராபதி’ என்னும் பைரவர், திருங்செங்காட்டங்குடி கோயிலில் தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றார்.

ஆலய அமைப்புசுமார் 93 அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே தெற்கு நோக்கிய சந்நிதியில் “வாய்த்த திருகு குழலி’ என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அன்னை காட்சி தருகின்றாள். “திருகு குழல் உமை நங்கை பங்கன் தன்னைச் செங்காட்டான் குடியதனில் கண்டேன் நானே’ என திருநாவுக்கரசர் இந்த அன்னையைப் போற்றிப் புகழ்கின்றார்.

உட்பிரகாரத்தில் சிறுத் தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன் ஆகியோர் சிலை வடிவங்களைக் காணலாம். ஆலயச் சுற்றில் பழைமையான காட்டாத்திமரம் அமைந்துள்ளது. அதனருகே உத்திராபதியார் சந்நிதி அமைந்துள்ளது. இது உலோகத்தினால் தோன்றிய சுயம்பு மூர்த்தமாகும். இவரது எழிற்கோலம் கலை ரசனை மிக்கது.

கிழக்கு நோக்கிய மூலவராகக் “கணபதீச்சரர்’ காட்சி தருகின்றார். தெற்குப் பிரகாரத்தில் வாதாபி கணபதியின் தனிச் சந்நிதி அமைந்துள்ளது. கைகளைத் தொடையில் இருத்தி, கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் இடப்பக்க துதிக்கை கழியுடன் விநாயகர் காணப்படுகிறார்.

தரிசன நேரம் : கோவில் தினமும் காலை 7.00 மணி முதல் பகல் 11.30  மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  திருச்சி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : பேரளம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×