7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு




	


	



























	




 




	








 




1:18:07 PM         Thursday, August 13, 2020

7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு

7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு
7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு
Product Code: 7.ஆதி விநாயகர்-தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

மதிமுக்தீஸ்வரர் ஆலயம்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  திருவாரூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திலதைப்பதியில் சுவர்ணவல்லி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்மழை புரிந்து கொண்டிருக்கிறார்.

சிறப்பு  : ஆதி விநாயகர் ( எ ) நரமுக விநாயகர்

இறைவன் ( மூலவ‌ர் ) பெயர் : முத்தீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்.

இறைவி பெயர்: சுவர்ண நாயகி, மரகதவல்லி

தல விருட்சம்:  மந்தாரை

தீர்த்தம் : தேவி தீர்த்தம்,  பிரம தீர்த்தம், சக்கர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், அரிசிலாறு

தேவாரப்பாடல் பாடியவர் : திருஞான்சம்பந்தர்

 தலச் சிறப்புகள் : ஆதி விநாயகர் என்பது யானை முகவிநாயகர் தோன்றுவதற்குமுன் உள்ள விநாயகர் தோற்றம். இந்த விநாயகர் தும்பிக்கை இல்லாமல் திரு முகத்துடன் காட்சி தருவார். திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் மிக பழமையான இந்த ஆலய வாசலில் தான் ஆதி விநாயகர் சன்னதி உள்ளது .  திலதர்ப்பணபுரி என்னும் பெயரே திலதைப்பதி என்றாயிற்று. இப்பெயரும் இன்று மக்கள் வழக்கில் உருச்சிதைந்து "செதலபதி" என்று வழங்குகிறது. "செதலபதி" என்று கேட்டால்தான் மக்களுக்குத் தெரிகிறது.

தல வரலாறு:    ராம லக்ஷ்மணர்கள் இந்த இடத்தில் தசரதனுக்கும் ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்ததாக வரலாறு.ராமர் தர்ப்பணம் செய்யும்போது நாலு பிண்டங்கள் பிடித்து வைக்கிறார். அந்த பிண்டங்கள் சிவ லிங்கமாக மாறுகிறது. இந்த நாலு லிங்கங்கள் கோவிலின் பிராகாரத்தில் காணலாம்.இந்த கோவிலில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் பண்ணுவது மிகவும் விசேஷம். இங்கு தர்ப்பணம் பண்ண அம்மாவசை திதி நட்சத்திரம் முதலியவை பார்க்க தேவையில்லை. எந்த நாளிலும் இங்கு பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.தெய்வப்பொன்னி நதியின் இருகரைகளிலும் சோழ வள நாட்டில் அமைந்துள்ள புண்ணியத்    தலங்கள் பலவற்றுள் , திருத்திலதைப்பதி என்ற சிறந்த சிவஸ்தலம் ஒன்று உள்ளது.

இப்பழமையான சிவாலயம், ஒரு பிராகாரம் மட்டுமே கொண்டது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டது. சென்ற ஆண்டு மீண்டும் திருப்பணிகள் செய்விக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் விமரிசையாக  நடந்தேறியது. கோயிலுக்கு அண்மையில் நரமுக விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மனித முகம் கொண்ட இவர், யானை முகம் கொள்வதற்கு முன்னமே இவ்வாறு தரிசனம் தருவதால் இவரை ஆதி விநாயகர் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தி போன்ற நாட்களில் ஏராளமான அன்பர்கள் வந்து தரிசிக்கிறார்கள்.
கோவில் அமைப்பு:  சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியது. அம்பிகை தெற்கு நோக்கியவாறு  அழகிய வடிவுடன் காட்சி அளிக்கிறாள்.சுவாமிக்கு முக்தீஸ்வரர், மந்தார வநேச்வரர், ஆகிய பெயர்களும், அம்பிகைக்கு சுவர்ணவல்லி, மலர்க்கொடி ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. ராம பிரான் இத்தலத்தில் தனது தந்தையாகிய தசரதருக்குத்  திலதர்ப்பணம் செய்ததால், பிராகாரத்தில்,   அந்த ஐதீகத்தைக் காட்டும் சன்னதி இருப்பதைக்காணலாம். கன்னி மூலையில் உள்ள  கணபதிக்கு அருகிலுள்ள மண்டபத்தில் ராம-லக்ஷ்மணர்கள் மண்டியிட்ட நிலையில் மண்டியிட்டுப் பிண்டம் போடும் நிலையில் உள்ளனர்.இதனை அடுத்து, முருகன், கஜலக்ஷ்மி ஆகியோரது  சன்னதிகள் உள்ளன. தலமரமாகிய மந்தாரை, வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. எனவே, அமாவாசை தர்ப்பணம் செய்வது இங்கு விசேஷமாகக் கருதப்படுகிறது. இத்தலம் நான்கு யுகங்களிலும் முறையே, மந்தார வனம் என்றும், ஹரி க்ஷேத்திரம் என்றும், பிரம நாயகம் என்றும் திலதர்ப்பணபுரி என்றும் பெயர் பெற்றது.
இரும்புக் கம்பிகளாலான கதவையுடைய முகப்பு வாயில். உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி, உள்வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம். வலப்பால் அம்பாள் சந்நிதி. பிராகாரத்தில் விநாயகர், இராம இலக்குவர்கள் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர், தேவியாருடன் பெருமாள் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். கோயிலுக்கு எதிரில் உள்ள சிறிய சந்நிதியைத் தவறாமல் தரிசிக்க வேண்டும். இது ஆதி விநாயகர் சந்நிதி எனப் படுகிறது. இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால், மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, அதிசயமான அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.

கோயிலுக்கு வெளியே பக்கத்தில் (பின்புறத்தில்) அழகீசர் கோயில் - அழக நாதர் சந்நிதி ஒன்றுள்ளது. சிவலிங்கத் திருமேனி. நகரத்தார் திருப்பணியும், பராமரிப்பும் பெற்றுள்ள இக்கோயிலில் நாடொறும் ஒருவேளை பூஜையே.

கூத்தனூரில் உள்ள துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி கோயில்கள் தரிசிக்கதக்கன. சரஸ்வதிக்குத் தனிக் கோயில் இங்கிருப்பது விசேஷமானது. இக்கோயிலை (சரஸ்வதி கோயிலை) க் கட்டியவர் ஒட்டக் கூத்தரின் பேரர் ஒவாக்கூத்தர் என்பது கல்வெட்டுச் செய்தி.

தரிசன நேரம் :  கோவில் தினமும் காலை 6.30  மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி  

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவாரூர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×