பழமுதிர்சோலை




	


	



























	




 




	








 




1:49:13 PM         Thursday, August 13, 2020

பழமுதிர்சோலை

பழமுதிர்சோலை
பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை பழமுதிர்சோலை
Product Code: பழமுதிர்சோலை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                              சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை ( பழமுதிர்ச்சோலை ) 

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் தலைநகரான மதுரை மாநகருக்கு வடக்கே 20 கி.மீ தொலைவில் கள்ளழகர் மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில் 2 கி.மீ தொலைவில் மிகவும் எழிலோடு அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது.

சுவாமி : சுப்பிரமணிய சுவாமி

அம்பாள் : வள்ளி,தெய்வானை

தீர்த்தம் : நூபுர கங்கை

தலவிருட்சம் : நாவல்

சிறப்புக்கள் : அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள் செய்கிறார். இங்கு முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி உள்ளது. இத்தலத்தில் முன்னர் முருகவேல் மட்டுமே இங்கு இருந்ததாகவும், பின்னர் முருகன் வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது என்பர். நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் ஆகியோர் முருகனை துதித்துப் பாடிய பெருமை வாய்ந்த தலமாகும். “அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.

தல வரலாறு : தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்த உலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார். ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, "என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?'' என்றான். சந்தோஷப்பட்ட பாட்டி வேண்டும் என்றார். உடனே முருகன், பாட்டி தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல், சுட்ட பழத்தையே கொடேன் என்றார். சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன், பாட்டி பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள் என்று கூறி சிரித்தான். தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர்.          
அழகர்கோயில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அழகர் கோயிலில் உள்ள மூலவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம். மலையலங்காரன் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விசேஷ நாளல்ல. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு உகந்த வெள்ளிக்கிழமையே விசேஷ நாளாகும். அன்று பூவங்கி சாத்தப்படுகிறது. அன்று தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. தவிர பெரும்பாலும் அர்ச்சனைக்கு அரளி புஷ்பமே சாற்றப்படுகிறது. மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல் பக்தர்களுக்குத் துளசி வினியோகிப்பது கிடையாது.

இக்கோயிலில் உற்சவம் ரதோச்வ காலங்களில் வரும் பெரும்பாலான மக்களுக்கும் அர்ச்சனை செய்பவர்களுக்கும் விபூதிதான் கொடுத்து வருகிறார்கள். துளசி எப்போதும் கொடுப்பதில்லை. கோயில் மூலஸ்தானத்திலேயே சோலை மலைக்குமரன் எனும் வெள்ளி விக்ரகம் இருந்து வருவதுடன் பஞ்சலோகத்தில் சக்கரத்தாழ்வார் மூலவரைப் போன்று உற்சவ விக்ரகமும் இருந்து வருகிறது. திருமலையைப் போன்ற இனிய தோற்றமுடையதாக இருப்பதால் திருப்பதி திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இம்மலையை வணங்கி வழிபடலாம்.

திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை கூறியருள்கின்றார். புராண வரலாறுகளிலும், இலக்கியங்களிலும், பழமுதிர்ச்சோலை தலம், முருகஸ்தலம் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

பழமுதிர்சோலை முருகன் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கு. வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி கோவில் இங்கு நூபுரக கங்கை தீர்த்தம் விழுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உற்பத்தியிடம் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்த போதிலும் இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. யானை துதிக்கைப் போல பருமனாக கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இத்தீர்த்தத்தில் நீராடினால் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது சிலம்பாறுன்னு பேர் பெறுகிறது.

அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங்களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு தேனாறு என்றும் பெயர் இங்கிருக்கும் “மாதவி மண்டபத்தில் அமர்ந்துதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியதாக செவிவழி சேதியும் உண்டு. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது அனுமார் தீர்த்தம். இங்க ஓர் அநுமார் கோயில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோயில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும் கோயிலும் இருக்கு. மலையில் வட பக்க சரிவில், பார்த்த உடனேயே பாபத்தை போக்கக் கூடிய பெரிய அருவி தீர்த்தம் இருக்கிறது. அழகர் கோயிலுக்குச் சிறிது வடக்கே போனால் இருக்கும் உத்தர நாராயண வாவி என்னும் தீர்த்ததினால் தான் கோயில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும்.

அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும். சைத்ரோற் சவ காலத்தில் அழகர் மதுரைக்கும் வண்டியூருக்கும் போய்த் தங்கி இருக்கும் போது கூட இந்தத் தீர்த்தமே கொண்டு வரப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால் அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுகிறது. இந்த விநோதத்தின் ரகசியம் இன்றுவரை ஒருவருக்கும் புலப்படவில்லை.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து தடபுடலாக தயாராகிக் கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்து பற்றி மீனாட்சி சிவனிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தாள்.  உங்களோடு வந்திருப்பவர்களை உடனடியாய் சாப்பிடச் சொல்லுங்க. இங்கு பல்வேறு உணவுகள் கொட்டிக் கிடக்கின்றது. நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் அனைத்தும் வீணாகி விடுமேன்னு கிண்டலடிக்க, இப்போது எங்கள் யாருக்கும் பசியில்லை. எனது கணங்களில் ஒன்றான குண்டோதரனுக்கு மட்டும் பசிக்கின்றதாம். அவனுக்கு மட்டும் விருந்து வைங்கள் என்று சுந்தரேஸ்வரர் சொல்லி இருக்கிறார்.மலையளவு இருந்த விருந்து சாப்பாட்டை ஒரு நொடியில் விழுங்கி இன்னும் கொண்டா வென வாய் பிளந்து நிற்கும் குண்டோதரனை கண்டு மீனாட்சி திக்கித்து நின்று, தன் தவறை உணர்ந்து சுந்தரேஸ்வரரிடம் தஞ்சம் புகுந்தாள். ஐயனும் அன்னப்பூரணியை அழைத்து அவன் பசியை தீர்க்கச் சொன்னார். அன்னை அளித்த உணவுகளை சாப்பிட்டு, ஏரி, குளம், வாய்க்காலில் இருந்த தண்ணீரை குடித்தும் அவன் தாகம் அடங்காமல் ஈசனிடம் முறையிட்டான்

உடனே, தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. நீ அங்கு செல் என கட்டளையிட்டார். குண்டோதரனிடம் நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள் , என்றார். இதுவே "வைகை' ஆனது. 

திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம், கல்வி வரம் வேண்டியும் பக்தர்கள் இங்கு முருகப்பெருமானை வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வணங்குகின்றனர். பொதுவாக ஆடி, ஆவணி மாதங்களில் தான் நாவல் மரங்களில் பழங்கள் பழுக்கும். ஆனால் இங்குள்ள நாவல் மரத்தில் ஐப்பசி மாதத்தில் பழங்கள் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

மதுரைலிருந்து பேருந்து மூலம் அழகர் கோவில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக நடந்தும், சிற்றுந்துகள் மற்றும் வாடகை வண்டிகள் மூலம் பழமுதிர்சோலை அடையலாம்.

திருவிழாக்கள் : இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் தைப்பூசம், தமிழ்வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், கிருத்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், சோமவாரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம். கொண்டாடப்படுகிறது. ப்பு பூசைகளும், அபிசேகங்களும் நடைபெறுகின்றன. 

திருக்கோவில் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×