ஸ்ரீபாம்பன் சுவாமிகள்




	


	



























	




 




	








 




6:11:04 AM         Thursday, August 06, 2020

ஸ்ரீபாம்பன் சுவாமிகள்

ஸ்ரீபாம்பன் சுவாமிகள்
ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள்
Product Code: ஸ்ரீபாம்பன் சுவாமிகள்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை - திருவான்மியூர் பேருந்து நிலையம் அல்லது தியாகராஜா தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 10 நிமிடம் நடந்து சென்றால், சமாதித் திருக்கோயில் உள்ளது. 
மூலவர் : பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

தல விருட்சம் : வேம்பு 

கோவில் அமைப்பு : பாம்பன் சுவாமிகளது சமாதித் திருக்கோயில், கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. எனினும் இவரின் திருமுகம் வடக்கு நோக்கி உள்ளதாம். இவரது திருமுகம் தரிசனம் கிடைக்கும் இடத்தில் ஒரு கோமுகம் இருக்கிறது. அருகில் ஒரு வில்வ மரம். இந்த மரத்தடியில் அமர்ந்து சுவாமிகளின் திருமுகத்தைத் தரிசித்தவாறு தியானம் செய்வது சிறப்பு என்பர். கருங்கல் திருப்பணியில் திகழும் பாம்பன் சுவாமிகளின் சமாதித் திருக்கோயிலை அவர் மீளாத் துயில் கொண்டிருக்கும் சந்நிதியின் உள்தோற்றத்தை இப்போது முழுமையாக தரிசிக்க முடியாது. சமாதித் திருக்கோயிலின் திருக்கதவை மூடி வைத்து, அதில் சுவாமிகளின் திருவுருவப் படத்தைத் தொங்க விட்டுள்ளனர். சுவாமிகளின் இன்னொரு படமும் இங்கு வழிபாட்டில் உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பூக்களால் சுவாமிகளின் திருவுருவப் படம் அலங்கரிக்கப்படுகிறது. படத்துக்கு மட்டுமே பூஜை. ஒரு சில காரணங்களால் இந்த சமாதித் திருக்கோயிலில் சுவாமிகள் உறையும் திருச்சந்நிதியை பக்தர்களால் தரிசிக்க முடியவில்லை. என்றாலும், தினப்படி ஆராதனையும் பக்தர்களின் வழிபாடும் குறைவின்றி நடந்து வருகிறது. முருகப் பெருமான் விக்கிரகம்தான் முன்பு, சுவாமிகளின் சமாதித் திருக்கோயிலில் அவரது சமாதியின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததாம். முருகப்   பெருமானின் விக்கிரகத்துக்கு முன்னால் பாம்பன் சுவாமிகளின் விக்கிரகம். பௌர்ணமி, கிருத்திகை மற்றும் சஷ்டி முதலான தினங்களில் இங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு பௌர்ணமியிலும் நள்ளிரவு 12 மணிக்கு முருகப் பெருமான் மற்றும் பாம்பன் சுவாமிகளது விக்கிரகத்துக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் வழிபாடு நடைபெறுகிறது. அப்போது பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் இசைக்கப் படுகின்றன. நள்ளிரவு வேளையிலும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கூடுவர்.

பெரிய அன்னதான மண்டபமும், பாம்பன் சுவாமிகளின் பிரதான சீடர்களில் ஒருவரான சுப்ரமண்யதாசன் என்கிற சின்னசாமி ஜோசியரின் சமாதியும் இந்த வளாகத்துக்குள் இருக்கிறது.

வாழ்க்கை வரலாறு : பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக 1848-50 ஆம் ஆண்டு ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்றுஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார்1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். தமது 12  வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருக்கு அகவை 25 எட்டிய பொழுது காளிமுத்தம்மாளை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.

ஒரு முறை பாம்பனில் உள்ள தங்களுக்குச் சொந்தமான தென்னந் தோப்புக்குச் சென்றார் சுவாமிகள். தோப்புக்குள் தந்தையார் இருப்பதை அறிந்து வாயிலிலேயே நின்றார். கீழே கிடந்த பனை ஓலை ஒன்றை எடுத்தார். இடுப்பில் இருந்து எழுத்தாணி யைக் கையில் எடுத்தார். அப்போது, ‘கங்கையைச் சடையிற் பரித்து’ எனும் சொற்கள், அவரது மனதில் மின்னலென உருவெடுத்தது. இதையே துவக்கமாக வைத்து முதல் பாடலை எழுதினார். ராமநாதபுரம், உத்தரகோச மங்கை, மதுரை, திருச்சி, வயலூர், விராலிமலை, திருவானைக்கோவில், திருவண்ணாமலை, திருக் காளத்தி, திருத்தணி, காஞ்சிபுரம், கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி, திருமழப்பாடி, நாகப்பட்டினம், திருக்கழுக்குன்றம் உட்பட ஏராள மான தலங்களுக்கு யாத்திரை சென்று அங்கு உறையும்  தெய்வத் திருமேனிகளைத் தரிசித்துள்ளார். ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ள பிரப்பன் வலசையில் 30 நாட்களுக்கும் மேல் கடும் தவம் இருந்தார். அங்கே இப்போது நினைவாலயமும் உள்ளது. 

திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில்சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகளின் மகாசமாதியில் ஆண்டுதோறும் மார்கழி வளர்பிறை பிரதமையில் மயூர வாகன சேவன விழா நடைபெறுகிறது. அன்று சுவாமிகளின் அடியார்கள், சுவாமிகள் இயற்றிய பாடல்களைப் பாடி முருகன் அருளைப் பெறுவர்.

அருணகிரிநாதரை மானசீக குருவாகக் கொண்டவர் பாம்பன் சுவாமிகள். தன்னுடைய பதிகங்களின் இறுதிப் பாடல்கள் தோறும் அருணகிரிப் பெருமானின் திருநாமத்தை முத்தாய்ப்பாகக் குறிப்பிட்டு நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். பாம்பன் சுவாமிகளின் காலம் வரையில் அருணகிரிப் பெருமானின் குரு பூஜை தினம் அறியப்படாது இருந்து வந்தது. அப்புனித நன்னாள் 'ஆனி மூலம்' என்று முருகப் பெருமானின் திருவருளால் கண்டறிந்து வெளியிட்டு அருளியவர் சுவாமிகள்.

திறக்கும் நேரம் : காலை  6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை  4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்து இருக்கும். 

அருகில் உள்ள ரயில் நிலையம் :  சென்னை- சென்ட்ரல் 

அருகில் உள்ள விமான நிலையம் :   சென்னை 

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×