ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம்
	


		
 
	
 
4:05:02 AM         Saturday, May 30, 2020

ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம்

ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம்
ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம் ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம்
Product Code: ஸ்ரீசைதன்ய மகாபிரபு - மேற்குவங்காளம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ஸ்ரீசைதன்ய மகாபிரபு  மேற்குவங்காளம்

இருப்பிடம் : இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று அழைக்கப்பட்டார். 

மாயாபுர் கரையில் அமைந்துள்ள கங்கை சங்கமிக்கும் இடத்தில், 130 கி.மீ. வடக்கே கொல்கத்தா  இஸ்மாய்கின் தலைமையகம் மாயாபூரில் அமைந்துள்ளது. ஸ்ரீசைதன்ய மகாபிரபு   பிறப்பிடமாக கௌடியா வைணவியத்தை பின்பற்றுபவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . 

வாழ்க்கை வரலாறு  : நவத்வீப பகுதியில் அமைந்துள்ள மாயாபூரில் பிப்ரவரி 18, 1486 அன்று பிராமண குடும்பத்தில், ஜகன்னத் மிஸ்ரா- சச்சி தேவி ஆகியோரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். எட்டு வயதில் கங்கநாகராவில் கங்காதச பண்டித குருகுலலத்தில் நுழைந்தார். அவரது பிறந்தநாளை கௌரா-பூர்ணிமா விழாவாக  கொண்டாடப்படுகிறது. இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம் என்றார். சைதன்யர் புரி ஜெகன்நாதர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். சாஸ்திரங்கள் மட்டுமின்றி, மிகச்சிறந்த பண்டிதர்களும், அவர் சாதாரண மனிதர் அல்ல என்றும், சாக்ஷாத் பகவானே தனது பக்தராக அவதரித்துள்ளார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தனது வாழ்வின் தொடக்கத்தில், பகவான் ஸ்ரீ சைதன்யர் சமய சடங்குகளில் சற்று பொறுமை காண்பித்தார். இருப்பினும், அவர் தனது இளமைப் பருவத்தில் உயர்ந்த நோக்கத்தினை செயல்படுத்த ஆரம்பித்தார். எல்லா தரப்பட்ட மக்களும் இறையன்பைப் பெறுவதற்கு உதவியதன் மூலமாக, அவர் அனைவருக்கும் மிகவுயர்ந்த ஆன்மீக ஆனந்தத்தினை வழங்கினார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஸங்கீர்த்தனம் செய்வதன் மூலமாக ஸ்ரீ சைதன்யர் இந்த உயர்நிலையை அனைவருக்கும் வழங்கினார். தனது 48வது வயதில் 14ஜூன் 1534 அன்று பூரில் இறந்தார்.

ஒருசமயம், ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கத்துக்கு விஜயம் செய்வதாக இருந்தது. பகவான் ஸ்ரீகிருஷ்ணனே பிரேம பக்தியின் தத்துவத்தை விளக்க கலியுகத்தில் சைதன்ய மகாப்பிரபுவாகத் தோன்றி, நாம சங்கீர்த்தனத்தின் உயர்வை உலகுக்குப் போதித்தார். அம் மகான் ஸ்ரீரங்கம் வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டது. ரங்கநாதர் ஆலயத்தில் அவருக்கு பெரிய வரவேற்புக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அப்போது ஆலய நிர்வாகிகளுக்கும், ஆஸ்திக பண்டிதர்களுக்கும் கோபால பட்டரின் நினைவு வந்தது. ஆனால், கோபால பட்டரோ நடப்பது எதுவுமே அறியாமல் வழக்கம் போல் கீதை பாராயணம் செய்து கொண்டிருந்தார். ஆலய நிர்வாகிகள் அவரிடம், ஐயா, வடநாட்டிலிருந்து ஒரு பெரிய மகான் வருகிறார். நாளை ஒரு நாள் மட்டும் நீங்கள் பாராயணம் செய்வதை நிறுத்திக்கொண்டால் தேவலாம் என்று வேண்டினர். அவர்கள் கூறியது பட்டர் காதில் விழவில்லை. பட்டரை நன்கு அறிந்த ஒருவர் ஸ்ரீரங்கன். அவர் இப்பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு வழி சொன்னார். 
எக்காரணம் சொன்னாலும் இந்தப் பித்தன் காதில் ஏறாது. இவனது பாராயணத்தை நாளை ஒரு நாள் மட்டும், யாருமே வராத வடக்கு வாசலில் வைத்துக் கொள்ளச் சொல்கிறேன் என்று கூறி, ஆலயத்துக்கு அந்த மகான் கிழக்குக் கோபுரவாசல் வழியாக வருவதால் கூட்டமும், மேள சப்தமும் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். எனவே, நாளைக்கு மட்டும் பாராயணத்தை வடக்கு கோபுர வாசலில் வைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டினார் ஸ்ரீரங்கன். சொர்க்க வாசலில் கீதை பாராயணம் செய்வதும் நல்லதுதான் என்று பட்டரும் அதற்கு ஒப்புக் கொண்டார். மறுநாள், ஸ்ரீசைதன்ய மகாப்பிரபு பூரணகும்ப மரியாதையுடன், ஸ்ரீரங்கநாதர் ஆலய கிழக்கு கோபுர வாயிலில் நுழைந்து கொண்டிருந்தார். திடீரென பரவச நிலையடைந்த மகாப்பிரபு, இங்கே எங்கேயோ பகவத்கீதை பாராயணம் கேட்கிறதே.. என்று உணர்ச்சிப் பெருக்குடன் வடக்கு வாசலை நோக்கி ஓடினார். அங்கே கோபால பட்டர் கீதை பாராயணம் செய்து கொண்டிருந்தார். மேள, தாள, வேத கோஷங்களுக்கு மத்தியில் கீதையின் நாதம் இவருக்கு எப்படிக் கேட்டது என்று அதிசயித்தனர். அனைவர் மனநிலையையும் தமது  சங்கல்பத்தால் அறிந்து கொண்ட மகாப்பிரபு, அவர்களின் அறிவுக்கண்களைத் திறக்கும் ஆசையுடன் கோபால பட்டரைப் பார்த்துக் கேட்டார்.
ஐயா, இத்தனை பக்தி சிரத்தையுடன் கீதை பாராயணம் செய்கிறீர்கள். சமஸ்கிருதத்தையும் கற்று, சொல்சுத்தமாக உச்சரித்து, தவறில்லாமல் பாராயணம் செய்தால் என்ன என்று கேட்டார். அதற்கு கோபால பட்டர், பிரபு, தாங்கள் சாட்சாத் கிருஷ்ணனாகவே நின்று என்னைக் கேட்பதாகத் தோன்றுகிறது. என் வாழ் நாளுக்குள் கீதையின் அத்தியாயங்களை முழுவதுமாக மனப்பாடம் செய்து விடுவது என்பது, நான் ஸ்ரீரங்க நாதன் முன்பு எடுத்துக் கொண்ட விரதம். ஆனால், எப்போதெல்லாம் பாராயணம் செய்ய ஏடுகளைப் புரட்டுகிறேனோ, அப்போதெல்லாம் அதிலே பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் உருவம், அவன் அருகில் நிற்கும் அர்ஜுனன், அனுமன் கொடி தாங்கிய தேர் இவைதான் தெரிகின்றன. இடையிடையே தெரியும் எழுத்துக்களைக் கூட்டிப் பாராயணம் செய்கிறேன். சைதன்ய மகாப்பிரபு கோபால பட்டரை உளமாரத் தழுவிக் கொண்டார். இதன் மூலம், எவனொருவன் ஸ்ரீமத் பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணனையே காண்கிறானோ, அவனே கீதையை பாராயணம் செய்ய அருகதை உள்ளவன் என்ற தத்துவத்தை விளக்கினார்.

சங்கீர்த்தன இயக்கம் : காந்திக்கு சுமார் 450 வருடங்களுக்கு முன்பே, அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை மிகப்பெரிய அளவில் தொடங்கியவர். பிறப்பின் அடிப்படையிலான ஜாதி, மதத் தடைகளை மீறி, பலதரப்பட்ட நிலையிலுள்ள எல்லா மக்களும் ஆன்மீக விழிப்புணர்வு பெற வழிவகுத்தார். தற்பெருமை கொண்ட உயர்குல மக்களின் முயற்சிகளைத் தகர்த்தெறிந்தார். அவரால் தொடங்கப்பட்ட புரட்சிகரமான ஆன்மீக இயக்கம் விரைவில் இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றோ ஹரே கிருஷ்ண இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 
ஸ்ரீ சைதன்யர் ஸங்கீர்த்தன இயக்கத்தை ஆரம்பித்த குறுகிய காலத்தில், பலரும் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். நவத்வீபத்தின் வீடுகளிலும் வீதிகளிலும் கீர்த்தனம் காட்டுத் தீயைப் போலப் பரவியது. அந்த சங்கீர்த்தன இயக்கம் வங்காளத்தை ஆண்டு வந்த இஸ்லாமியர்களையும், ஜாதியின் அடிப்படையில் புரோகிதர்களாக இருந்த இந்துக்களையும் அச்சுறுத்தியது. அவர்களின் புகாரைக் கேட்ட காஜி, வளர்ந்து வரும் ஸங்கீர்த்தன இயக்கத்தினைத் தடுக்க முயன்றார். அவரது கட்டளையின் பேரில், ஸ்ரீ சைதன்யரைப் பின்பற்றுவோர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற காவலர்கள் அவர்களின் மிருதங்கத்தினை உடைத்தனர். ஹரி நாம ஸங்கீர்த்தனம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், யாராவது தொடர்ந்தால் அவர்கள் பராபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் காஜி கட்டளையிட்டார். நகரம் முழுவதும் ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடியபடி அனைவரும் காஜியின் வீட்டின் முன்பாகக் கூடினர்.

கூட்டத்தினைக் கண்டு பயந்தபடி உள்ளேயே இருந்த காஜியினை பகவான் அன்புடன் அழைக்க, வெளியே வந்த காஜி அவருடன் சமயப் பயிற்சிகள் குறித்து நீண்ட வாதத்தில் ஈடுபட்டார். இறுதியில் காஜியும் சைதன்யரைப் பின்பற்றுபவராக மாறி, ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பாதுகாத்து பரப்பத் தொடங்கினார். இன்றும்கூட பக்தர்கள் சந்த் காஜியின் சமாதிக்குச் சென்று தங்களுடைய மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். காஜி வாழ்ந்த காலத்திலிருந்து இன்றுவரை நவத்வீபத்தைச் சார்ந்த இஸ்லாமியர்கள் ஹரி நாம ஸங்கீர்த்தனத்திற்கு ஆதரவளிப்பவர்களாக உள்ளனர்.

இந்தியா முழுவதும் பயணம் செய்து நாம ஸங்கீர்த்தனத்தினை பரவச் செய்தார். ஆறு வருடங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தின் மூலமாக பகவானின் மீதான தூய அன்பினை பரவச் செய்தார். பெரும்பாலான இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீர்த்தனையில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ சைதன்யர், ஸார்வபௌம பட்டாசாரியரின் முன்பு தனது ஆறு கரங்களைக் கொண்ட உருவை வெளிப்படுத்தினார். இரு கரங்களில் இராமரின் வில் மற்றும் அம்பினையும், இரு கரங்களில் கிருஷ்ணரின் புல்லாங்குழலையும், இரு கரங்களில் சைதன்யரின் கமண்டலம் மற்றும் தண்டத்தையும் ஏந்தியபடி, தான் முழுமுதற் கடவுள் என்பதை வெளிப்படுத்தினார். அதுவரை மிகப்பெரிய மாயாவாதியாக இருந்த ஸார்வபௌமர் அப்போது ஸ்ரீ சைதன்யரின் தாமரைத் திருவடிகளில் சரணடைந்து, மிகப்பெரிய பக்தராக மாறினார்.

மாயாபூரை படகு மூலமாகவும், மேலும் பொதுவாக ரயில் அல்லது பேருந்து மூலமாகவும் அடையலாம்.
 
அருகிலுள்ள இரயில் நிலையம் :  ஹௌரா ஜங்ஷன் 30 கி.மீ.

அருகிலுள்ள விமான நிலையம் : கொல்கத்தா 117 கி.மீ.

தங்கும் வசதி : உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×