பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு

	


		
 
	
 
10:54:25 PM         Tuesday, January 19, 2021

பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு

பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு
பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு
Product Code: பாலமுருகனடிமை - இரத்தினகிரி - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

பாலமுருகனடிமை ரத்தினகிரி – வேலூர்

இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  வேலூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் 14 கி.மீ., தூரத்தில் ரத்தினகிரி மலை உச்சியில் பாலமுருகன் கோயில் உள்ளது.

மூலவர் : பாலமுருகன்
உற்சவர் : சண்முகர்
தீர்த்தம் : ஆறுமுக தெப்பம்
பாடியவர்: அருணகிரியார்

வாழ்க்கை வரலாறு  :  ஜனவரி 1941,  24 கீழ்மின்னல்  எனும்  ஒரு சிறிய கிராமத்தில் கந்தசாமி முதலியாருக்கும் திருமதி சின்னகரகம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாக பிறந்தார் .  சிவனின் பெயர்களான தட்சிணாமூர்த்தி மற்றும் சசிதனாண்டம் என பெயர்யிட்டனர். அவரது பள்ளி படிப்பு முடிந்தபின் அவர் மின்சக்தி துறை வேலை செய்தார்.  சிவகாமியுடன் திருமணமாகி இரண்டு மகள்களையும் ஒரு மகனையும் ஆசீர்வதித்தார்.

தனது 27 ஆவது ஆண்டில் ஒரு நாள், வேலைக்குச் செல்லும் வழியில், முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை.  அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை என்றிருக்கிறார். பின்பு, வத்தி ஏற்றி வைக்கும்படி வேண்டினார் வத்தியும் இல்லை என்றார் அர்ச்சகர். பரிதாப நிலையில் இருக்கும் கோயிலை நினைத்து வருந்திய பக்தர், தீபாராதனைகூட செய்யப்படாத முருகனுக்கு கோயில் தேவைதானா என்ற சிந்தித்தார். உடன் அவரது மனதில் முருகன் பிரசன்னமாக தோன்றவே, மயக்கமானார் பக்தர். இதைக்கண்ட அர்ச்சகர் ஆட்களை அழைத்து வர, மலையடிவாரத்திற்கு சென்றார். இதனிடையே எழுந்த பக்தர், மணலில் "இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லை,'' என மணலில் எழுதி வைத்துவிட்டு அமர்ந்து விட்டார். அதன்பின்பு அவர் யாரிடமும் பேசவும் இல்லை. பிற்காலத்தில் இங்கு குன்றிலேயே முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது.

பாலமுருகனடிமை சுவாமிகள் இக்கோயிலைக் கட்டி நிர்வகித்து வருகிறார். 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் முருகனின் அருளாலும், பாலமுருகனடிமை சுவாமிகளின் அருளாலும், பக்தர்களின் அருளாலும் ஒளிர்வதாக நம்பப்படுகிறது. தேவர்களின் கடவுளாக நம்பப்படும் முருகன் ரத்தினகிரியில் வாழ்ந்து அருள்பாலிப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.  அவராக விரும்பும் பக்தர்களை அழைத்து அவரின்பிரச்சினைகளை எழுத்து மூலம் எழுதிக்காட்டி முருகனின் அருளால் தீர்த்து வைக்கிறார் முருகன் ஆட்கொண்டதில் இருந்து மெளனச்சாமியாராக வலம் வருகிறார். 

இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. எங்கெல்லாம் குன்றுகள் உள்ளதோ அங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கும் என பண்டைய இந்து வேதங்கள் கூறுகின்றன. காலப்போக்கில் ஒரு சாதாரண மணல் அமைப்பானது பின்னர் கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டது. உற்சவர் சண்முகர் சன்னதி, கல்தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் இருக்கிறார். அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப் படுகிறது. இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது. இவளுக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது.
இங்குள்ள விநாயகர் கற்பக விநாயகர். இங்குள்ள கோபுரம்  5 நிலைகளைக் கொண்டது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.

தல பெருமை : இத்தலத்து முருகனுக்கு பூஜையின் போது மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்குத் தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர். கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.

விழாக்கள் : தமிழ் புத்தாண்டு, ஆடிக்கிருத்திகை விழா, ஆடி வெள்ளி, கந்த சஷ்டி விழா, நவராத்திரி , பங்குனி உத்தரம் , ஆங்கிலப் புத்தாண்டு, சுவாமிஜி பாலமுருகன் அடிமை ஞானம் ஆண்டு நிறைவு - 20 மார்ச்

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.

அருகில் உள்ள ரயில் நிலையம் :  காட்பாடி 8 கி.மீ  

அருகில் உள்ள விமான நிலையம் :   சென்னை 137 கி.மீ  

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×