ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு
	


		
 
	
 
5:19:46 PM         Saturday, August 08, 2020

ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு

ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு
ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு
Product Code: ஸ்ரீஜக்கி வாசுதேவ் - கோயம்புத்தூர் - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


சத்குரு ஜகி வாசுதேவ்

இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் நகரிலிருந்து 40 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் வெள்ளியங்கிரி மலைகளின் அடிவாரத்தில் ஈஷா யோக மையம் உள்ளது.
தியானலிங்கம் உள்ள இடம் சென்றால், கண்ணை மூடிக்கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் பல இடங்களில் அமர்ந்திருப்பார்கள். பாதாள அறை போல இருக்கும் ஒரு அறைக்குள் லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கத்தை தியானலிங்கம் என்று கூறுகிறார்கள். அந்த தியானலிங்கத்தை சுற்றி பலர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.

தியானலிங்கம் பிராணா பழிதம் என்ற தீவிர மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது . 13 '9' உயரத்தில், தியானலிங்க உலகின் மிகப்பெரிய பாதரசம் சார்ந்த, நேரடி லிங்கம் ஆகும். இது ஒரு சக்தி வாய்ந்த மற்றும் தனிப்பட்ட ஆற்றல் வடிவம். 250,000 செங்கல் குவிமாடம் அமைப்பு கீழ் உட்கார்ந்து உள்ளது. மனோதத்துவ ரீதியான கருத்தில், தியானலிங்க ஒரு குரு, பிரமாண்டமான விகிதங்களின் ஆற்றல் மையம். ஒரு பிரம்மாண்டமான வெள்ளை பளிங்கு தரையையும், ஒரு இலவச நிற்கும் பாயும் கூரையுடனும், கண்களைத் திறந்து பார்த்தால், இந்த இடம் மிகுந்த சுவாரஸ்யமான சிறப்பம்சமாகும். 

வாழ்க்கை வரலாறு  :  கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரில் ஒரு தெலுங்கு குடும்பத்தில், செப்டம்பர் 3, 1957-இல் சுசீலா மற்றும் டாக்டர் வாசுதேவ் தம்பதியினருக்கு பிறந்தார். நான்காவதாக பிறந்த இவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு. இவர் பிறந்தபோது குறிசொல்லும் நாடோடி ஒருவர், இக்குழந்தை மிகவும் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வான் என்று குறி சொல்லிவிட்டு, 'இந்த பிரபஞ்சத்தை ஆள்பவன்' என்று பொருள்படும் ஜகதீஷ் என்ற பெயரையும் சூட்டிவிட்டுச் சென்றார்.
சத்குருவின் தந்தை இந்திய ரயில்வேயில் கண் மருத்துவராகப் பணிபுரிந்ததால், அவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்ல வேண்டியிருந்தது. ஜகி என்று அழைக்கப்பட்ட ஜகதீஷ், சிறு வயதிலேயே இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவர் அடிக்கடி அருகாமையில் உள்ள வனங்களுக்குப் பயணம் செய்வார். சில சமயம் இப்பயணங்கள் 3 நாட்கள் வரை கூட நீடிக்கும். இவர் 11 வயதில், மல்லடிஹள்ளி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிஜியை சந்தித்து, அவரிடம் எளிய யோகாசனங்களைக் கற்று, தவறாமல் அவற்றைப் பயிற்சி செய்து வந்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டதாரி ஆனார். அப்போது அவர் வகுப்பில் இரண்டாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார். கல்லூரி நாட்களில் பயணம் செய்வதிலும் மோட்டார் பைக்குகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார். இரவுகளில் பைக் ஓட்டிச்செல்வதுமாக இருந்தனர். சத்குரு தனது மோட்டார் பைக்கில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார்.
நேபாளின் எல்லையைத் தொட்டபோது அவருக்கு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால், நேபாளிற்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. தான் எங்கு செல்வதையும் எவரும் தடுக்க முடியாதவாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இச்சம்பவம் அவருக்குள் உருவாக்கியது. அவர் பட்டப்படிப்பை முடித்தபின் இந்த எண்ணமே அவரைப் பல தொழில்களைத் துவங்கத் தூண்டி, அவற்றை வெற்றிகரமாக நடத்தச் செய்தது. அவர் செய்த தொழில்களில் கோழிப்பண்ணை, செங்கல்சூளை, கட்டிடத்தொழில் ஆகியவையும் உள்ளடங்கும்.

சத்குரு ஜகி வாசுதேவ் ஞானியாகவும் யோகியாகவும் குருவாகவும் திகழ்பவர். இவர் நிறுவியுள்ள ஈஷா அறக்கட்டளை, மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத ஒரு பொதுத் தொண்டு நிறுவனம். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கபூர், கனடா, மலேசியா, உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா அறக்கட்டளை வழங்கிக் கொண்டிருக்கிறது. சமூக மற்றும் சுற்றுபுற நல செயல்பாடுகள் பலவற்றிலும் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பொருளாதாரம் மற்றும் சமூகப்பிரிவு அமைப்பும் ஈஷாவிற்கு சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை வழங்கியுள்ளது. 

ஆன்மீக அனுபவம் : அவருடைய 25 ஆம் வயதில், செப்டம்பர் 23, 1982 இல் சாமுண்டி மலைக்கு பைக்கில் சென்றார். அங்கு ஒரு பாறை மீது அமர்ந்தபோது ஒரு ஆழமான ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார். சத்குரு அந்த அனுபவத்தை விவரிக்கையில், "என் வாழ்க்கையில் அந்த நொடி வரை இது நான் என்றும், அது வேறொருவர், அது வேறொன்று என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல்முறையாக எது நான், எது நானில்லை என்று எனக்கு புரியாமல் போனது. திடீரென நான் என்பது எல்லா இடங்களிலும் பரவிக்கிடந்தது. நான் உட்கார்ந்திருந்த பாறை, நான் சுவாசித்த காற்று, என்னை சுற்றியிருந்த காற்றுமண்டலம், என்று எல்லாவற்றிலும் தெறித்துக் கிடந்தேன். இது கேட்பதற்கு சுத்த பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்.
ஒரு பத்து பதினைந்து நிமிடம் இப்படி இருந்திருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் பழைய நிலைக்கு திரும்பியபோது, முழு நினைவுடன், கண் திறந்த வண்ணம் உட்கார்ந்தவாறு சுமார் நான்கரை மணி நேரம் கழிந்திருந்ததை உணர்ந்தேன். ஒரு நொடிப்பொழுது போல நேரம் ஓடிவிட்டது," என்று குறிப்பிடுகிறார். இந்த அனுபவம் கிடைத்து 6 வாரங்கள் கழித்து, அவர் தன் தொழிலை நண்பரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, தனக்கு ஏற்பட்ட உள்ளனுபவத்தைப் பற்றி மேலும் அறிய விரிவான பயணம் மேற்கொண்டார். ஒரு வருடம் இப்படி தியானத்திலும் பயணத்திலும் கழிந்தபின், சத்குரு தன்னுடைய அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள யோகப் பயிற்சிகளை கற்றுத்தர முடிவு செய்தார்.

ஈஷா யோக மையம் : ஈஷா அறக்கட்டளை  1992 இல் சத்குரு ஜக்ஜி வாசுதேவ் நிறுவப்பட்டது. கோவையில் தனது முதல் வகுப்பினை 1989 இல் நடத்தினார். 'சஹஜ ஸ்திதி யோகா' என்று அப்போது அழைக்கப்பட்ட அந்த வகுப்புகளில் ஆசனங்கள், பிராணாயாம கிரியாக்கள் மற்றும் தியானம் கற்றுத்தரப்பட்டது. ஆன்மீக ஆர்வம் கொண்டவர்கள் அதிகரித்துக் கொண்டே சென்றதால், 1993 இல் அவர்களுக்கு உறுதுணையாக ஒரு ஆசிரமம் நிறுவ வேண்டுமென சத்குரு தீர்மானித்தார். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, கோவா என்று பல இடங்களைப் பார்த்தும் அதில் மனநிறைவு இல்லாமல், கடைசியில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்தார். 1994 இல் அந்த இடத்தைப் பதிவு செய்து யோக மையம் ஒன்றை நிறுவினார்.

13 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட லிங்கம் கறுப்பு நிற அடர்த்தியான கிரானைட் கல்லால் ஆனது. நுழைவாயிலில் உள்ள சர்வ தர்ம ஸ்தம்பம், ஒருமைத்தன்மையின் சின்னமாகத் திகழ்கிறது. இந்து, கிறித்துவம், முஸ்லிம், சீக்கியம், ஜெயின், தாவோயிஸம், ஜோராஸ்ட்ரியானிஸம், யூத மார்க்கம், புத்த நெறி, மற்றும் ஷிந்தோ (ஜப்பானிய மரபு) ஆகிய நெறிகளைக் குறிக்கும் சின்னங்கள் செதுக்கப்பட்டு, உலக மக்கள் அனைவரையும் இந்த ஸ்தம்பம் வரவேற்கிறது.

மிகப்பெரிய, விலை உயர்ந்த, அலங்கார, அரச சிம்மாசத்தில் உயர் மேடையில் இவர் உட்க்காருவது கிடையாது. வெறும் மரத்தால் செய்யப்படட வாங்கு, அல்லது வீட்டுச் சோபா நாற்காலியில்தான் உடகாருவார். பின்னால் வெறும் கல்சுவர்தான் தெரியும்.  ஒருவித ஆடம்பர அலங்கோலங்களும் இருக்காது.  அவரைப் பின்பற்றுவோர், அவருக்கு விளக்குக காட்டிப் பூசை செய்து,பஜனை பாடித் தொழுவது கிடையாது. அவர் அதை அனுமதிப்பதும் இல்லை. எதிர்பார்ப்பதும் இல்லை.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே நடைபெறும் சிவராத்திரி மஹாசிவராத்திரி எனும் சிறப்பு விழாவாக கருதப்படுகிறது . பாரம்பரியமாக, மஹாசிவராத்திரி இரவு முழுவதும் விழிப்புடனும், தனித்துவமான கிரக நிலைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. 

திறக்கும் நேரம் : தியானலிங்க வளாகத்தில் 12:30 மணி முதல் 1:15 மணி வரை தியானம் நடைபெறுகிறது. காலை  8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்து  இருக்கும். 

அருகில் உள்ள ரயில் நிலையம் :  கோயம்புத்தூர் 28 கி.மீ  

அருகில் உள்ள விமான நிலையம் :   கோயம்புத்தூர் 

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×