ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு
	


		
 
	
 
3:35:32 AM         Saturday, May 30, 2020

ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு

ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு
ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு
Product Code: ஸ்ரீசேஷாத்ரி மஹரிஷி - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


சேஷாத்ரி சுவாமிகள்


இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம், இவர் சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது.

 
சேசாத்திரி சுவாமிகளை காஞ்சி காமாட்சியின் அவதாரம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இவர் தன்னுடைய 19வது வயதில் கிபி 1889ல் திருவண்ணாமலைக்கு வந்தார். அதன்பின்பு திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து மறைந்தார். இவர் இரமண மகரிசி பாதாள லிங்க சந்நதியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது அவரை மீட்டார். இவர் தங்கக்கை சேஷாத்ரி என்றும் அழைக்கப்பட்டார். 

வாழ்க்கை வரலாறு  :  காமகோடி வம்சத்தில் வரதராஜன் - மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் பிறந்தார். இவர் பிறந்தது சனிக்கிழமை, ஹஸ்த நட்சத்திரமாகும். சாஸ்திரங்களைக் கற்று வல்லவராக இருந்தார். சேஷாத்ரியின் 14 வயதில் அவருடைய தகப்பனார் இறந்துவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தபோது அவருடைய ஜாகத்தினைக் கணித்தவர்கள், இவர் சன்னியாக மாறி யோகியாகக் கூடியவர் என்றார்கள். இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்தார். இவரின் வரலாறை கேட்டால் வித்தியாசமானது. கிபி 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் நாள் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி சேசாத்திரி சாமிகளுக்கு அபிசேகம் செய்ய கோரிக்கை வைத்தனர். முதலில் சுவாமிகள் மறுத்தாலும் பின்பு பக்தர்களின் வற்புறுத்துதலால் ஏற்றுக்கொண்டார். பக்தர்கள் பலர் குடம்குடமாக அபிசேகங்களை செய்து அலங்கரித்தனர். அந்த அபிசேகத்தின் குளிர்ச்சியால் சேசாத்திரி சாமிகளுக்கு குளிர் காய்ச்சல் வந்தது. உணவோ, நீரோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். பக்தர்கள் கம்பளி கொடுத்தாளும் போர்த்திக் கொள்ளாமல் இருந்தார். கிபி 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் நாள் வெள்ளிக்கிழமை ஹஸ்த நட்சத்திறத்தன்று முக்தி அடைந்தார். முக்தி நாள் தமிழ் மாதமான மார்கழி மாதம் 21ம் நாளாகும். அவரின் இறுதி ஊர்வலத்தில் பகவான் ரமணர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவருடைய தாயார் அருணாசல, அருணாசல, அருணாசல என மூன்று முறை கூறிவிட்டு உயர்துறந்தார். இதனால் அண்ணாமலை சேசாத்திரியின் மனதில் ஆழப்பதிந்து திருவண்ணாமலைக்கு வந்தார். ஞானமார்க்கத்தை தேடிய சேஷாத்ரி தனது இளமைப்பருவத்தில் திருவண்ணாமலை வந்தார் அங்கேயே சுற்றிதிரிந்தார் இவர் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் குளிப்பார் அங்கு வரும் பக்தர்களில் சிலர் மீது மட்டும், பக்தர்கள் மீது தண்ணீரை வாயில் கொப்பளித்து துப்புவார் பலருக்கு பல்வேறு விதமான நோய்கள் தீர்ந்து இருப்பதாக இதனால் நம்பப்படுகிறது. பலருக்கு பல்வேறுவிதமான தோஷங்கள்
விலகிஉள்ளது. இவர் திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் இருக்கமாட்டார் இவரை கிறுக்குச்சாமி என்றும் அழைக்கப்பட்டார் அதற்க்கு காரணம் இவர் ஊரை சுற்றி வந்துகொண்டே இருப்பார் எந்தநேரத்தில் எந்தசெயலை செய்வார் என்று யாராலும் சொல்லமுடியாது. திடீரென்று ஒரு கடைக்குள் செல்வார் கடையில் உள்ள நெய்டின்னை தட்டிவிடுவார் கடைக்காரருக்கு வியாபாரம் அமோகமாக நடக்கும் இப்படி இவர் செய்வதால் ஆரம்பத்தில் இவரை வெறுத்த மக்களும் வியாபாரிகளும் இவர் பார்வை நம் மீது படாதா என ஏங்குவர். ஆனால் சரியான நபருக்கு மட்டுமே இவரின் கருணைப்பார்வைபடும். 

ஒருமுறை ஒரு சவஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னே சென்ற இவர் திடீரென ஒரு கல்யாணவீட்டிற்க்குள் சென்றார். சவ ஊர்வலத்தில் கலந்துவிட்டு தீட்டோடு கல்யாணத்திற்க்குள் வருகிறானே என்று அனைவரும் இவரை விரட்டினர் எதையும் பொருட்படுத்தாமல் சமையலறையில் வைத்து இருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் கல்யாணவிருந்திற்காக வைத்து இருந்த சாம்பாரை தட்டிவிட்டார். ஆத்திரமடைந்தவர்கள் அவரை அடிக்கப்பாய்ந்தனர் திடீரென் ஒருவர் அவரை அடிக்காதீர்கள் சாம்பாரை பாருங்கள் என்று காண்பித்தார் அதற்க்குள் ஒரு நாகம் இறந்து கிடந்தது சுவாமிகளின் சக்தியை நினைத்து அவரை கையெடுத்து வணங்கினர். 

சேஷாத்ரி தியானத்திற்காக குறிப்பிட்ட இடம் இல்லை. அவர் இடத்திலிருந்து இடத்திற்கு நகர்வார், அவருடைய பிடித்த இடங்கள் கும்பாத்து இளையனார் கோயில், திரட்டுபன் அம்மன் கோயில், யோகேஸ்வர மண்டபம் மற்றும் பதான லிங்கம் ஆகியவை. ரமணா மகரிஷிக்கு மிகவும் முன்னதாக திருவண்ணாமலைக்கு சேஷாத்ரி வந்தார். இந்த புனித கோயில் நகரமான திருவண்ணாமலை சுற்றி மக்கள் பெரும்பாலும் ரமணா மகரிஷிவின் மூத்த சகோதரனாக சேஷாத்ரி மஹானைக் குறிப்பிடுவார்கள்.  திருவண்ணாமலை அருகிலுள்ள ரமணா ஆஷ்ரமத்திற்கு அருகிலேயே சேஷாத்ரி ஸ்வாமலை ஆஷ்ரம் அமைந்துள்ளது.

திறக்கும் நேரம் : காலை  6.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்து  இருக்கும். 

அருகில் உள்ள ரயில் நிலையம் :  திருவண்ணாமலை 2 கி.மீ  (விழுப்புரம்-காட்பாடி)

அருகில் உள்ள விமான நிலையம் :   சென்னை 185 கி.மீ  

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×