ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம்
	


		
 
	
 
3:51:07 AM         Saturday, May 30, 2020

ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம்

ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம்
ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம்
Product Code: ஸ்ரீராமகிருஷ்ணர் - கொல்கத்தா - மேற்கு வங்கம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

இருப்பிடம் : இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள ஹுக்ளி ஆற்றின் அருகே ராமகிருஷ்ண மடம், பேலூர் மடம் (பெல்லூர் மடம்) நாற்பது ஏக்கர் பரப்பளவில்  அமைந்துள்ளது.

சிறப்புகள் : ஸ்ரீ ராமகிருஷ்ணா கோயில், சுவாமி பிரம்மானந்தா கோயில் (ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதினாறு சீடர்களில் ஒருவர்) தகனம் செய்யப்பட்ட இடத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. சுவாமி விவேகானந்தர் கோயில் விவேகானந்தர் உயிரிழந்த இடமாக இது கட்டப்பட்டுள்ளது.  இராமகிருஷ்ணமிஷன் உதவிபுரிந்திடவும் மக்கள் பணியாற்றிடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு மே 1,1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகாநந்தரால் நிறுவப் பட்ட அமைப்பாகும். அன்னை சாரதா தேவியின் நினைவிடம் மட்டும் நதியை நோக்கியபடி இருக்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம சீடராக இருந்த ஸ்வாமி விவேகானந்தர் காலத்தில் தனது குருவிற்கு அமைத்த நினைவிடம், அவரது நற்கருத்துகளை பரப்ப அமைத்த ஆஸ்ரமம் இது தான். விவேகானந்தர் தனது கடைசி நாட்களை கழித்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி மற்றும் ஸ்வாமி விவேகானந்தர் ஆகிய மூவருக்கும் நினைவிடங்கள் இங்கே உண்டு. 1938-ஆம் ஆண்டு புதிய கட்டிடமும் கட்டப்பட்டது. ஸ்வாமி விவேகானந்தர் தங்கி இருந்த அறை இருக்கிறது. அங்கே அவர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் என அப்படியே வைத்திருக்கிறார்கள். 
நலவாழ்வு, பேரழிவு மீட்பு பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, துவக்க மற்றும் உயர்நிலைக் கல்வி மற்றும் பண்பாடு பேணுதல் என பல துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. தனது நூற்றுக்கணக்கான துறவிகளின் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டு இப்பணிகளை அவ்வமைப்பு நிறைவேற்றி வருகிறது. கர்ம யோகம் எனப்படும் செயல்வழி வழிபாட்டு கொள்கைகளைக் கொண்டு இச்செயல்களை செய்து வருகிறது. 

வாழ்க்கை வரலாறு  : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18  ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் குதிராம் என்பவருக்கும், தாயார்  சந்திரமணி தேவிக்கும்  நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர். சிறு வயதில் ஆடல், பாடல், படம் வரைவது, மண் சிலை செய்வதில் ஆர்வமாக இருந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. இயற்கையை ரசிப்பதிலும், புராணக் கதை கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதையுமே அதிகம் விரும்பினார். அதே நேரம், ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தார். தந்தை காலமானதும் தாய் மற்றும் அண்ணன்களின் பராமரிப்பில் வளர்ந்தார். நண்பர்களுடன் சேர்ந்து நாடகக் குழு நடத்திவந்தார். இவரை தன்னுடன் கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றார் அண்ணன். அங்கு அவரது பாடசாலையில் கல்வி கற்றதுடன் அவருக்கு உதவியாக வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். தட்சிணேஸ்வரம் பவதாரிணி காளி கோயிலில் அர்ச்சகர் வேலை கிடைத்தது. தங்குவதற்கு அறையும் ஒதுக்கப்பட்டது. ராமகிருஷ்ணர் தன் வாழ்வில் பெரும் பகுதியைக் கழித்தது இங்குதான். 

காளியை நேரில் காணவேண்டும் என்ற ஏக்கம், ஆவல் தீவிரமானது. கடும் தியானம் மேற்கொண்டும், அது கைகூடாததால் காளி கையில் இருந்த வாளை உருவி உயிரை மாய்த்துக்கொள்ளவும் முயன்றார். உடனே சுயநினைவை இழந்ததாகவும் ஒரு பேரானந்த ஒளி தன்னை ஆட்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பிறகு அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தன. பித்து பிடித்துவிட்டதாக பயந்துபோன அம்மா, திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே அன்னையாகப் போற்றவிருந்த சாரதாதேவி எங்கு இருக்கிறார் என்று சொன்னதோடு அவரையே மணம் செய்துவைக்குமாறும் கேட்டுக்கொண்டார் ராமகிருஷ்ணர். அனைத்து பெண்களையும் காளியின் அம்சமாகவே போற்றியவர், தன் மனைவியையும் அலங்கரித்து பூஜை செய்து, அவரது காலில் விழுந்து வணங்குவார். பைரவி பிராம்மணி என்ற பெண்ணிடம் தாந்த்ரீகமும், தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தமும் கற்றார். சமாதி நிலையில் 6 மாதங்கள் இருந்தார். 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.

நாடி வருவோருக்கு எளிமையான ஆன்மிக, தத்துவ, யதார்த்த கதைகளைக் கூறி மகத்தான விஷயங்களைப் புரியவைப்பது ராமகிருஷ்ணரின் வழக்கம். இவரது உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமம் என்பார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை காளியாகவும், சிவனாகவும் பார்த்ததாக சீடர்கள் கூறியுள்ளனர். ‘ராமனாக, கிருஷ்ணனாக வந்தவன்தான் இப்போது ராமகிருஷ்ணனாக வந்துள்ளேன்’ என்று தன்னிடம் அவர் கூறியதாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைகள் : ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். இல்லற வாழ்வில் இருந்தாலும், இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையைத் நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும். மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.

ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு அளவிலா ஆச்சரியம் அடைந்தார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது கனவா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அறைக்கு வெளியே வந்து மீண்டும் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். பகவான் ராமகிருஷ்ணர் அங்கே சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார்.

திறக்கும் நேரம் : (ஏப்ரல் முதல் செப்டம்பர்) காலை 6 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை (அக்டோபர் முதல் மார்ச் வரை) 6:30 மணி முதல் 11:30 மணி வரை, 3:30 மணி வரை திறந்து  இருக்கும்.

அருகில் உள்ள ரயில் நிலையம் :   கொல்கத்தா 7 கி.மீ 

அருகில் உள்ள விமான நிலையம் :   கொல்கத்தா 17 கி.மீ  

தங்கும் வசதி : உண்டு 

பேருந்து வசதி : உண்டு  

Mail this page Printable view
×
×
×
×
×
×
×