ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா

	


		
 
	
 
11:31:36 PM         Tuesday, January 19, 2021

ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா

ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா
ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா
Product Code: ஸ்ரீசாய்பாபா - சீரடி - மஹாராஷ்ட்ரா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ஷீர்டி சாயி பாபா கோயில்

இருப்பிடம் : இந்தியாவின்  மகாராஸ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டம், ஷிர்டி சாயி பாபாவின்   முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், புனித யாத்ரீக ஸ்தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. 

சிறப்புக்கள் : சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது. சாய்பாபா சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு நின்றாலும் பாபா உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும். கோவில் உள்ளே, சாய் பாபா மற்றும் சமாதி சிலை இத்தாலிய பளிங்கில் இருந்து செதுக்கப்பட்டு, அரச துணியினால் அலங்கரிக்கப்பட்டு, தங்க கிரீடம் அணிந்து புதிய மலர் மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. உள்துறை மற்றும் வெளிப்புறம் (கூம்பு) கோவில், தங்கம் மூடப்பட்டிருக்கும். பாபா இன்னும் உயிருடன் இருந்த சமயத்தில் சடங்குகள் மற்றும் மரபுகள் உள்ளே நான்குஆர்த்தியங்கள் தினமும் நடைபெறுகின்றன. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம். இந்த சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது.

வாழ்க்கை வரலாறு: செப்டம்பர் 28, 1838 சீரடி என்ற இடத்தில் பிறந்த இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவ துவங்கியது. இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார்.

இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் , குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இவர், இந்து முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர். மசூதியில் வேற்றுமை பாராமல் நுழைந்து இந்துக்களை இவரை வழிபட வைத்தது போலவே, மசூதியை மலர்களால் அலங்கரிக்க விரும்பிய முஸ்லீம் பக்தரை அந்த மலர்களை அருகிலிருந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்ய பணித்தது என்று பல நிகழ்வுகளில் இந்துக்களும் முஸ்லீம்களும் நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற தமது உன்னத எண்ணத்தை செயல்படுத்தியவர்.
பாபா அடிக்கடி இந்து கடவுள்களைப் பற்றிப் பேசுவார், புனித நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் அல்லது பகவத் கீதை, ஈஷா உபநிஷத் மற்றும் பலவற்றைப் பற்றி பேசுவார். கிருஷ்ணர் மற்றும் ராமரின் பெயர்கள் அவரிடம் மிகவும் அன்பாக இருந்ததாக தெரிகிறது. அவரது முஸ்லீம் ஆதரவாளர்களுடன் பாபா எப்போதும் அல்லாஹ் மற்றும் குர்ஆன் பற்றி பேசுவார், பெரும்பாலும் பாரசீக வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்.  அல்லாஹ்வின் பக்தன், இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் கொண்ட ஒரு எளிமையான குர்ஆன் என்றே கூறினான். அடுத்த ஆண்டுகளில் பார்சிஸ் மற்றும் சில கிறிஸ்தவர்கள் ஷீர்டிக்கு வருவார்கள்.சாயி பாபா அனைத்து மதங்களையும் மதிக்கிறார், அனைத்து மதங்களும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த குறிக்கோளுக்கு வழிவகுக்கும் குறிப்பிட்ட பாதைகள்தான்.  

சீரடி சாயி பாபா 20 ஆம்  நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர்.   இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினார். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். 

கோவில் அமைப்பு :  இந்த கோவில் 1922 ல் கட்டப்பட்டது. ஷீர்டியில் உள்ள சாய் பாபா கோவில் சராசரியாக 25,000 பக்தர்கள் தினமும் வருகை தருகிறது, சமய விழாக்களில் இந்த எண்ணிக்கை 100,000 வரை உயரலாம்.  ஷீர்டியில் உள்ள சாய் பாபா ஆலயம் ஸ்ரீ சாய் பாபா சன்ஸ்தான் அறக்கட்டளால் நிர்வகிக்கப்படுகிறது. 
ஆலயத்துக்குள் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு ரத்ததானம் செய்யலாம். பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆலய வளாகத்துக்குள் ஆம்புலன்ஸ் ஒன்றை எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறார்கள். ஆலயத்துக்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த தனி கவுண்டர் வசதி உள்ளது. கோவில் உள்பகுதியில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென்றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம். கோவில் உள்ளே ஒரு இடத்தில் விநாயகர் மற்றும் சிவனுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரகமாயியிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.

சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நாடெங்கும் உள்ள சாய்பாபா ஆலயங்களில் வியாழந்தோறும் இத்தகைய வழிபாட்டை கடைபிடிக்கிறார்கள். சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 நேர ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியம் தான். சீரடி தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.

பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாலு வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். அவரவர் அதிருஷ்டம் எந்த வரிசையில் அமைகிறது என்பது உள்பக்க வரிசையில் செல்வது நல்லது. கடைசி வரிசையில் அமைத்து முன்னால் போய் விட்டால் பாபாவை பார்ப்பது சிரமமாக இருக்கும்.

கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி எல்லாம் ஆகிறது. அது வரை நின்று கொண்டே இருக்கவேண்டியதுதான். க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும். விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை. சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம். வெளியே வந்ததும் பாபா அமர்ந்திருந்த மரத்துக்கு எதிரே ஊதுவத்தி ஏற்றி வைக்கும் படி அறிக்கை பலகை கேட்டுக் கொள்கிறது. இதுவும் அவரவர் விருப்பம் தான். கட்டாயமில்லை. ஊதுவத்தி புகையில் படிந்த கரியை எல்லாரும் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்.

திருவிழாக்கள்: ராமநவமி (மார்ச் / ஏப்ரல்), குரு பூர்ணிமா (ஜூலை) , ஈத் (ஜூலை) விஜயதாசமி / தசரா (செப்டம்பர் / அக்டோபர்)
திறக்கும் நேரம் : காலை 4.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை  திறந்து  இருக்கும்.  

அருகில் உள்ள ரயில் நிலையம் : சாய் நகர் ரயில் நிலையம் 0.5 கி.மீ

அருகில் உள்ள விமான நிலையம் : அவுரங்காபாத் 150 கி.மீ.

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×