திக்குறிச்சி
	


		
 
	
 
4:41:15 AM         Saturday, May 30, 2020

திக்குறிச்சி

Product Code: திக்குறிச்சி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

 

2.திக்குறிச்சி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்திலிருந்து சுமார் 5 கி.மீ வடகிழக்கில் உள்ள இத்தலம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தாமிரபரணி திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் நதி. இதன் கிளை நதியொன்று கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நதிக்கரையில் தான் திக்குறிச்சி அமைந்துள்ளது. சிதறால் என்று இப்போது வழங்கும் திருச்சாரணத்து மலையிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : திக்குறிச்சி மகாதேவர்

திருத்தல அமைப்பு : பன்னிரு சிவாலயங்களில் இரண்டாவது கோயிலாகும். பழமைவாய்ந்த இத்தலம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் ஆறும், மற்றப் பக்கங்களில் எழில் மிகு சோலைகளும் அமைந்து அமைதியான ஒரு சூழ்நிலையில் கோயில் உள்ளது. கோயில் கிழக்குத்திசை நோக்கி உள்ளது. கோயிலின் எதிரில் அரசமரமும், நாகமரமும் உள்ளது. கோயிலின் முன்புறம் கொடிமரம் உள்ளது ஆனால் தற்போது அம்மரம் ஒடிந்துவிட்டது. பெரிய நந்தி ஒன்று இங்கு இருப்பதாகவும், இப்போது அந்த நந்தி விக்கிரகம் ஆற்றினுள் கிடப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். நந்திக்குறிய ஒரு வழிபாட்டினை ஒரு கிணற்றில் செய்கின்றனர். மலைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கோயில் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்போது படகில் தான் செல்ல வேண்டும். கோயிலின் வடக்குபுற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும். ஏனெனில் கிழக்குதிசை பார்த்து கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம் ஆறு உள்ளது. கோயிலின் பின்புறம் ஏராளமான செம்பருத்தி செடிகள் காணப்படுகின்றன. சிவராத்திரியை ஒட்டி எவ்வளவு இலை பறித்தாலும் மீண்டும் துளிர்த்து வளர்ந்து விடுவதாகத் தெரிகிறது. இங்கு மூன்று கால பூஜை நடைபெறுகிறது மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது இங்கு விநாயகர், சாஸ்தா, நாகராஜர் போன்ற உபதேவதைகளின் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயில் முன் பின் பகுதிகளில் அரசமரம் உள்ளது. ஆற்றில் நீராடி மகாதேவரை தரிசிக்கலாம்.

அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : குழித்துறை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×