திருவெண்காடு 

	


		
 
	
 
7:08:22 AM         Thursday, February 25, 2021

திருவெண்காடு

திருவெண்காடு
திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு திருவெண்காடு
Product Code: திருவெண்காடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருவெண்காடு 
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் 
 
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை வட கிழக்கே 24 கி.மீ தொலைவில்  உள்ளது.
மூலவர்:சுவேதாரண்ய சுவாமி
சிறப்புஉற்சவர்: அகோர மூர்த்தி (புதன் கிரகம்)
அம்மன்/தாயார்: பிரமவித்யாநாயகி (வேயன்ன தோனி நாச்சியார் )
தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம் 
தீர்த்தம்:முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) 
தேவாரப் பாடல் பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில்அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: புதன் கிரக தோஷப் பரிகாரத் தலமான திருவெண்காடு தலத்திற்கென தனிச் சிறப்புகள் பல உள்ளன. வால்மீகி இராமயணத்தில் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சுப கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால் ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும். 
சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர் சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.
தல சிறப்பு: கோவில் உள்ளே நான்கு பிரகாரங்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் இராஜ கோபுரங்கள் உண்டு. வெளிப் பிரகாரத்திலிருந்து உள்ளே செல்ல இரு கோபுரங்கள் இருக்கின்றன. சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் பல தானங்களைச் இக்கோவிலுக்கு செய்திருப்பது தெரிய வருகிறது. ஆதிசிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு ஸ்தலத்திற்கு உண்டு. இங்கும் சிதம்பரம் போன்றெ நடராஜர் சபை, ஸ்படிக லிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் 4 முறை அபிஷேகமும் நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறையும் அபிஷேகம் நடைபெறுகின்றன. மேலும் இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே போன்று இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராஜர் சபைக்கு அருகில் மஹாவிஷ்னுவின் சந்நிதி இருக்கிறது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.

இங்குள்ள அகோரமூர்த்தி இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு பெற்றவர். பிரம்மாவிடம் பெற்ற வரங்கள் காரணமாக மருத்துவன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியதனால் அவர்கள் திருவெண்காடு வந்து தங்கி இருந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து மேலும் தேவர்களுக்கு துன்பத்தைத் தர ரிஷபதேவர் அசுரனுடன் தேவர்களைக் காப்பாற்ற போரிட்டார். ரிஷபதேவர் போரில் காயப்பட, சிவபெருமான் கோபமுற்று அவருடைய 5 முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோரமூர்த்தியைக் கண்டவுடன் அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்தான். இந்த அகோரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமை இரவில் வழிபடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதம் இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த தலங்களில் திருவெண்காடு தலமும் முக்கியமான ஒன்றாகும்.
தரிசன நேரம்: தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 96 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம் 18 கி.மீ 
பேருந்து வசதி : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×