திருவலிதாயம், பாடி , சென்னை

	


		
 
	
 
8:08:06 AM         Thursday, February 25, 2021

திருவலிதாயம், பாடி , சென்னை

திருவலிதாயம், பாடி , சென்னை
திருவலிதாயம், பாடி , சென்னை திருவலிதாயம், பாடி , சென்னை திருவலிதாயம், பாடி , சென்னை திருவலிதாயம், பாடி , சென்னை திருவலிதாயம், பாடி , சென்னை திருவலிதாயம், பாடி , சென்னை திருவலிதாயம், பாடி , சென்னை திருவலிதாயம், பாடி , சென்னை
Product Code: திருவலிதாயம், பாடி , சென்னை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                 திருவலிதாயம், வலிதாயநாதர் (குரு) 

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில், திருவலிதாயம் என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது பாடி என அழைக்கப்படுகிறது. சென்னை அம்பத்தூர் சாலையில் வில்லிவாக்கத்தை அடுத்து பாடி லூகாஸ் டிவிஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அருகில் உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னையை அடுத்துள்ள கொரட்டூர் ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 1 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

இறைவன்  : வலிதாயநாதர்,  வல்லீசுவரர்

இறைவி  : தாயம்மை, ஜகதாம்பாள்

தல மரம் : பாதிரி

தல தீர்த்தம் : பரத்வாஜ தீர்த்தம்

தலச் சிறப்புகள்: அகத்திய முனிவர், வில்வலன் வாதாபி ஆகியோரைக் கொன்ற பாவம் நீங்க இத்தலத்துப் பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார். மற்றும் பிரம்மன், இந்திரன், வாயு, அக்கினி, சூரியன்,  மன்மதன், சந்திரன் ஆகியோர் பூசித்துத் திருவருள் பெற்ற தலம்.  பரத்வாஜ முனிவர் வலிநன் என்கிற கருங்குருவி வடிவத்தில் இத்திருத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டார். பிரம்மனின் திருப்புதல்வியரான கமலை வல்லி என்னும் இருவரையும் விநாயகப் பெருமான் இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டதாகப் புராணம் கூறுகின்றது. குருபகவான் இத்தலத்தில் தவம் புரிந்து காமத் தீயை வென்றார். திருமால், அனுமன், சுக்கிரீவன், இராமபிரான், லவகுசலர் முதலியோர் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். பாரத்துவாஜ் முனிவர் கருங்குருவி (வலிநன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாயநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 

கோவில் அமைப்பு  : 3 நிலைகளையுடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப்பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம் நந்தி அமைந்துள்ளது. நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குருபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. வெளிப்பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது உள் பிரகாரத்தில் சூரியன் 4 கரங்களுடன் உள்ள பாலசுப்பிரமணியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கினறன. சோமஸ்கந்தர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமலிங்கம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பாரத்வாஜ் முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது. ஒருசமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்டதால் 'பாரத்வாஜ தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம்   : கொரட்டூர்

பேருந்து வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு
 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×