சுக்கிரன் - கஞ்சனுர்
	


		
 
	
 
6:22:17 AM         Thursday, August 06, 2020

சுக்கிரன் - கஞ்சனுர்

சுக்கிரன் - கஞ்சனுர்
சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர் சுக்கிரன் - கஞ்சனுர்
Product Code: சுக்கிரன் - கஞ்சனுர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருக்கஞ்சனூர்  (சுக்ரன்)

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூலிருந்து  8.3 கி.மீ. தொலைவிலும், சூரியனார் கோவிலுக்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சுவாமியின் திருநாமம்: ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் 
அம்பாள் பெயர்:  கற்பகாம்பாள்
தல விருட்சம்: பலா
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்
திருப்பதிகம் பாடியவர் :அப்பர்   

தலச் சிறப்புகள் : இக்கோயிலில் அக்னீஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமானை தான் செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு வழங்கும் நவக்கிரகங்களிலொருவரான சுக்கிர பகவானாக பக்தர்கள் வழிபடுகின்றனர். எப்படி காளஹஸ்த்தியில் சிவபெருமானை இராகு மற்றும் கேது கிரகங்களாக கருதி வழிபடுகின்றனரோ, எப்படி மதுரையில் வீற்றிருக்கும் ஸோமசுந்தரேசுவரரை புத பகவானாக கருதி வழிபடுகின்றனரோ, அப்படியே இங்கும் அக்னீசுவரரை சுக்கிர பகவானாக வழிபடுகின்றனர். ஆக, இது ஒரு நவக்கிரக தலமாகவே கருதப்படுகிறது.
இத்தலத்தில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன் வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் முக்தி தாண்டவ மூர்த்தி  என அழைக்கப்படுகிறார். 
தல வரலாறு : கம்சன் வழிபட்டதால் இத்தலம் கம்சனூர் என்றும் பிறகு பெயர் மருவி கஞ்சனூர் என்றாயிற்று. முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்கதாரியாக திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதுஅமர்ந்து "சிவமே பரம்பொருள்' என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதியிலும் உள்ளது. ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர்.

கோவில் அமைப்பு:   1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது. இது 36 வது தேவாரத்தலம் ஆகும். சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தையடைந்தால் இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சன்னதி, அடுத்து அம்பாள் சன்னதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதிக்குச் செல்லும் போது இடப்பால் (வெளவால் நெத்தி மண்டபத்தில்) விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சன்னதி, நால்வர் சன்னதிகள் உள்ளன. கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள அக்னீஸ்வரருக்கும், கற்பகாம்பிகைக்கும் தனித்தனித் திருச்சுற்றுகளுடன் உற்சவ மண்டபம், அலங்கார மண்டபம், வாஹந மண்டபம், பதினாறு கால் மண்டபம், ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு பெரிய திருச்சுற்றுமாக மூன்று பிரகாரங்களுடன் கூடிய திருக்கோயில் ஆகும்.

அக்னீஸ்வர சுவாமி சன்னதி மஹா மண்டபத்தில் தென்புறம் சுக்கிரபகவான் அருள் நல்கும் சிவபெருமான் உமாதேவியோடு இந்து வாழ்சடையானாகி கிழக்கு நோக்கி தனிச்சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ளார். திருநாவுக்கரசரால் மதிசூடும்பெருமான் எனப்போற்றப்படும் இப்பெருமானே சுக்கிர கிரகதோஷ பரிகார மூர்த்தியாவார்.

இராஜகோபுரத்திற்கு வெளியில் தெற்கு நோக்கி கற்பக வினாயகர் திருக்கோயிலும் சன்னதித்தெருவில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் ஆலயமும் அமைந்துள்ளது. திருக்கோயிலைச்சுற்றி நான்கு ரதவீதிகளும் சந்திரதீர்த்தம், பராசர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய திருக்குளங்களும் பிரம்மதீர்த்தமாகிய காவிரி ஆகியவற்றுடன் கூடிய மிகப்புனிதமான திருத்தலம் இது.
நடராஜர் மூலவர், புல்லுண்ட நந்தி ஆகிய மூர்த்திகளால் சிறப்புபெற்ற திருக்கோயில்.  அப்பரால் பாடப்பட்ட இந்த பழம் பெரும் கோயில் சாலையோரமாகவே உள்ளது. 
 
தல விருக்ஷம்:  பொரசு மரம், இம்மரத்தை ஒரு மண்டல காலம் தினமும் பதினோறு முறை வலம் வந்தால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு குபேரசம்பத்துகளை அடைவார்கள்.
கல்நந்தி: பிராமணர் ஒருவர் புல் கட்டை தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக்கன்று ஒன்று இறந்தது. இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது என்று பிராமணர்கள் அவரை தங்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாமல் ஹரதத்தரிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிடும் போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களுக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்துவந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து, ""கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்'' என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டதாக வரலாறு.
விழாக்கள்: தை திங்களில் ஹரதத்தர் காட்சி அருளல், ஆடிப்பூரம் திருவாதிரை, மாசிமகம் மற்றும் பிரதோஷம், சிவராத்திரி,   நவராத்திரி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி 
தரிசன நேரம் : கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் திறந்து இருக்கும். 
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 
அருகிலுள்ள ரயில் நிலையம் : பாபநாசம்  3 கி.மீ. 
பேருந்து வசதி : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×