இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு
	


		
 
	
 
5:33:23 PM         Saturday, September 26, 2020

இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு

இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு
இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு
Product Code: இரத்தினகிரி வேலூர் - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                          இரத்தினகிரி, பாலமுருகன் கோயில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்ட தலைநகராகிய வேலூரிலிருந்து ஆற்காடு செல்லும் பாதையில் 10 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மூலவர் : பாலமுருகன்

உற்சவர் : சண்முகர்

தீர்த்தம் : ஆறுமுக தெப்பம்

பாடியோர் : அருணகிரிநாதர்

தலச் சிறப்புகள் : மூலவருக்கு முன் கருவறையில் மிகப் பெரிய வேல் ஒன்று உள்ளது. ஆடிக் கிருத்திகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் ஆறுமுகப் பெருமானார் நின்ற திருக்கோலத்துடன் கிழக்கு நோக்கி திவ்ய தரிசனம் தருகிறார். இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் காட்சி தருகிறார்.  இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். குழந்தை பாக்யம் தரும் மிக புன்ணியமான தலதமாக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் இன்று கருதப்படுகிறது. 

தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை என்றிருக்கிறார். பின்பு, பத்தி ஏற்றி வைக்கும்படி வேண்டினார் பக்தர். பத்தியும் இல்லை என்றார் அர்ச்சகர். பரிதாப நிலையில் இருக்கும் கோயிலை நினைத்து வருத்திய பக்தர், தீபாராதனைகூட செய்யப்படாத முருகனுக்கு கோயில் தேவைதானா? என்ற சிந்தித்தார்.

உடன் அவரது மனதில் முருகன் பிரசன்னமாக தோன்றவே, மயக்கமானார் பக்தர். இதைக்கண்ட அர்ச்சகர் ஆட்களை அழைத்து வர, மலையடிவாரத்திற்கு சென்றார். இதனிடையே எழுந்த பக்தர், மணலில் "இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லை,'' என மணலில் எழுதி வைத்துவிட்டு அமர்ந்து விட்டார். அதன்பின்பு அவர் யாரிடமும் பேசவும் இல்லை. பிற்காலத்தில் இங்கு குன்றிலேயே முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது.

இக்கோவில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ரத்னகிரி பாலமுருகன் கோயில்  மலை உச்சியில் அமைந்துள்ளது. எங்கெல்லாம் குன்றுகள் உள்ளதோ அங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கும் என இந்து வேதங்கள் கூறுகின்றன. காலப்போக்கில் ஒரு சாதாரண மணல் அமைப்பானது பின்னர் கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டது. 14வது நூற்றாண்டு புலவர் அருணகிரிநாதர் இந்த கோவிலில் 'ரத்தினிகரி வாழ் முருகனே இளைய வாராமாரர் பெருமாளே' என்று பாடியுள்ளார்.  

பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார். தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஒரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார். அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை, விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார்.  இச்சம்பவம் நிகழ்ந்த  சில  தினங்களிலேயே  அப்பெண்  கருவுற்றார்.  அதன் பின்னரே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் என அறிந்து கொண்டார் அந்த பெண். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம் இதுவாகும். 

கோயில் அமைப்பு : மலையில் கிரிவலம் வருவதற்கான அகன்ற பாதையில் மலைமேல் ஏறுவதற்கான படி மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு முன்னதாக பெரிய முகப்பு வாயிலிலிருந்து செல்லும் பாதையில் வரசித்தி விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இவ்விநாயகரை வழிபட்ட பிறகே மலைக்கோயிலுக்கு செல்ல வேண்டும். படிமண்டபத்திலிருந்து மலைக்கோயிலைச் சென்று அடைவதற்கு 177 படிகளில் ஏறிச் செல்லுதல் வேண்டும். இடையில் இளைப்பாறுவதற்கான இரண்டு மண்டபங்கள் உள்ளன. மேலே ஏறிச் செல்லும் போது ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தைக் கண்டு மகிழலாம். இம்மலைக் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலில் கற்பக விநாயகரை கண்டு வழிபடலாம். ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ள இக்கோயிலில் கருவறைக்கு தென்பாகத்தில் கல்யாண மண்டபம் அமைந்துள்ளது கருவறையுள் பாலமுருகப்பெருமான் திருக்கரத்தில் வேல் தாங்கி வள்ளி தெய்வயானை சமேதராகக் காட்சியளிக்கின்றார். விசாலமான 170 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. மலை மீது ஏறிச் செல்லும் பாதையில் எழில் மிகும் மண்டபங்களைக் காணலாம். இக்கோவிலில் மிகப் பிரம்மாண்டமான கோபுரமும் கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.இம்மலையில் ஏறுவதற்கு படிக்கட்டு பாதை அமைந்துள்ளமை போன்றே அதனை ஒட்டினாற் போன்று இறங்கும் படிக்கட்டு பாதையும் இடையில் மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

உற்சவர் சண்முகர் சன்னதி, கல் தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் இருக்கிறார். அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப் படுகிறது.  இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது. இவளுக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது. 

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மகா சண்டியாஜ பூஜை மிக விமர்சியாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசன செய்கின்றனர். இரவில் அர்த்த ஜாம பூஜையில் அவருக்கு பாலை நிவேதனமாக படைகின்றனர். கோவிலின் அடிவாரத்தில் துர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது.  திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். முருகனை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

இத்தலத்து முருகனுக்கு பூஜையின் போது மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்குத் தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர். ஆடி கிருத்திகையன்று சுவாமி, ரத்தினங்களால் ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது விசேஷம். 

இம்மலைக்கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுக்கு ஆடி மாதம் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடிக் கிருத்திகை இங்கு மிகவும் விசேஷமாக நடைபெறுகிறது. இங்கு முருகனால் ஆட்கொள்ளப்பட்ட பாலமுருகனடிமை என்பவரால் இத்தலம் கும்பாபிஷேகம் நடைபெற்று புதுப்பிக்கப்பட்டு மிகப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இவர் மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்திய செய்ய வழியையும் கூறுகிறார். தற்போது மலைக்கு காரில் செல்லும் அளவிற்கு சாலையும் தீர்த்தக்குளமும் அமைக்கப்பட்டு வருகிறது.

காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் :  காட்பாடி

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×