சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில்

	


		
 
	
 
11:43:22 AM         Friday, May 14, 2021

சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில்

சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில்
சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில்
Product Code: சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                        சித்திரவேலாயுத சுவாமி - திருக்கோவில்
 
திருத்தல அமைவிடம் : இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயமாகும். மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே 71 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 

மூலவர் : சித்திரவேலாயுத சுவாமி  ( வேல் )
 
தீர்த்தம் : சமுத்திர தீர்த்தம்
 
தலவிருட்சம் :  வெள்ளை நாவல் மரம்
 
தல சிறப்புகள் : பண்டைய மட்டக்களப்பின் முதற்பெரும் "தேசத்துக் கோவிலாக" விளங்கிய இக்கோவில், மட்டக்களப்பு மன்னரும், கிழக்கிலங்கை மக்களும் தம் தேசத்துக்கே உரிமை கொண்டாடிப் போற்றிய பழம்பெருமை வாய்ந்தது. மட்டக்களப்புப் பகுதியில் ஆகமவிதிப்படி எழுந்த முதலாவது இறைகோட்டம் என்ற பொருளிலேயே, இ்க்கோவிலுக்குத் திருக்கோவில்" என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.  இந்தியத் திருத்தலங்களுக்குக் கூட இல்லாத பெருமையாகவும் புனிதமாகவும் கருதப்படுகின்றது.
 
இவ் ஆலயத்தினை இலங்கை வேந்தன் இராவணன் வழிபட்டு வந்ததாகவும், இவனது இலங்காபுரி கோட்டை அழிந்த நிலையில் அதன் சின்னங்கள் திருக்கோவிலுக்கு கிழக்கே காணப்படுவதாகவும் வித்துவான் வி.சீ.கந்தையா கூறியுள்ளதாக தேரோடும் திருக்கோவில் எனும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பிலே பழமையும், பிரசித்தியும் உடைய முருகன் கோயில்களை திருப்படைக்கோயில்கள் என அழைப்பர். பண்டைய மன்னர்களின் செல்வாக்கும், மானியமும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்கள் என போற்றப்பட்டன. இந்நிலையில் மட்டக்களப்பில் முதலாவது திருப்படைக்கோயில் என அழைக்கப்பட்டது. திருக்கோவில் முருகன் ஆலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம், என்பனவற்றோடு விருட்சம் முறையாகக் கொண்டு விளங்குவதுடன் இவ்வாலயத்தில் தாய் தந்தையரின் பிதிர் கடன் நிறைவேற்றும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ திருவிழா இவ்வாலயத்தின் சிறப்பு வாய்ந்தொன்றாகும்.
 
கோயில் அமைப்பு : இவ்வாலயம் மூன்று கோபுரங்களைக் கொண்டிருந்ததால், "திரிகோவில்" என்று தமிழிலும், "துங்கோள" என சிங்களத்திலும் அழைக்கப்படுகின்றது. திருக்கோவில் எனப் பெயர்சூட்டப்பட முன்பு, இத்தலத்தின் பெயர், "நாகர்முனை" என்பதாகும். பாண்டியர் கலைப்பாணியைப் பிரதிபலிக்கும் பழமை வாய்ந்த கருவறை விமானம். கடலோரத்தில் கம்பீரமாக அமைந்திருந்த இக்கோவில். இக்கோயில் எப்போது அமைக்கப்பட்டது என்பதற்கான சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும், திருக்கோவில், மண்டூர், உகந்தை ஆகிய மூன்று ஆலயங்களையும் சமகாலத்தவையாகக் காட்டுவதுடன், சூரபதுமனுடனும், இராவணனுடனும் இக்கோவிலைத் தொடர்புறுத்துவதுண்டு. சூரபதுமனை வதைத்தபின், மாணிக்க கங்கையில் மூழ்கியெழுந்த வேலிலிருந்து, மூன்று ஒளிக்கதிர்கள் சிந்தியதாகவும், அவை மேற்கூறிய மூன்று கோயில்களிலும் அமர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அதைக்கண்ட அப்பகுதியில் வாழ்ந்த வேடர்கள் அவ்வேலுக்குக் கொத்துப்பந்தரிட்டு வழிபட்டு வந்ததாகவும், பின் "மனுராசா" எனும் அரசன் இன்றைய கோயிலைக் கட்டியதாகவும் கருதப்படுகின்றது. வேடர்களால், மிகப்பழங்காலந்தொட்டே வேல் வழிபாடு இடம்பெற்று வந்த தலம்.
 
மட்டக்களப்புச் சிற்றரசர்களாலும், இலங்கையைப் பிற்காலத்தில் ஆண்ட கண்டி மன்னர்கள், கோட்டை மன்னர்கள் இக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றனர். கோட்டை மன்னர்களில் ஒருவனான ஏழாம் விஜயபாகுவால் அவனது பத்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட சிதைந்த கல்வெட்டொன்று, இக்கோவிலில் உள்ளது. இதே மன்னனால் நீர்ப்பாசனத்துக்கு "வோவில்" எனும் ஏரி வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் தம்பிலுவில் கல்வெட்டும், இதே ஆலயத்தில் வைத்துப் பேணப்படுகின்றது.
 
முழு மட்டக்களப்புத் தேசமுமே உரிமைகொண்டாடிய கோவில் என்பதால், இது ""தேசத்துக்கோவில்" என்று அழைக்கப்பட்டது. திருக்கோவில் "திருப்படைக் கோவில்"களிலும் ஒன்றாகும். திருப்படைக் கோவில் என்பது, மட்டக்களப்புச் சிற்றரசரின் மானியம் பெற்று வந்த பழம்பெருமை வாய்ந்த ஆலயங்களாகும். தான்தோன்றீச்சரம், சித்தாண்டி, மண்டூர், உகந்தை, கோவில் போரதீவு, வெருகல், திருக்கோவில் ஆகிய ஏ்ழு ஆலயங்களும், மட்டக்களப்பின் ஏழு திருப்படைக்கோயில்களாகக் கொள்ளப்படுகின்றன. இவற்றில் தான்தோன்றீச்சரம் தவிர்ந்த ஆறும் முருகன் கோவில்கள் என்பது சிறப்பு.
 
தமிழக ஆறு படைவீடுகளை ஒத்த ஈழத்து வழக்காகக் கொள்ளப்படுகின்றது. இங்கு "படை" என்பது, படைவீட்டைக் குறிக்காமல், முருகனின் ஆயுதமான வேலையே குறிக்கும் என்பர். திருப்படைக்கோவில்களில் பெரும்பாலானவை, மூலவராக, வேலையே கொண்டிருந்ததையும், அவற்றில் பல, "சித்திரவேலாயுத சுவாமி" ஆலயங்களாகவே இனங்காணப்பட்டன. தான்தோன்றீச்சரம் மட்டக்களப்புத் தேசத்தின் ஒரேயொரு பழம்பெருஞ் சிவாலயம். இலங்கையில் சைவக்கோவில்கள் பலவற்றை அழித்த போர்த்துக்கேயர், இங்கிருந்த கல்நந்தி புல்லுண்ட சம்பவத்தால் இக்கோவிலை இடிக்காது திரும்பினர் என்பது மக்கள் நம்பிக்கை. இக்கோவிலும் திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த பல மன்னர்கள் போற்றிய ஆலயமாகக் கொள்ளப்படுகின்றது.
 
தல வரலாறு :  கி.மு 1ம் நூற்றாண்டில் தமிழ் மன்னன் எல்லாளனே முதன் முதலாக கற்கோயிலாக கருவறை முதல் விமானம் வரை அமைத்து திருப்பணியை ஆரம்பித்தான் என்றும் சத்திரியர்கள் எனப்படும் ஜந்து பாண்டிய அரசர்களின் மானியம் பெற்று இது கட்டப்பட்டதுடன் இலங்கை தமிழ், சிங்கள மன்னர்களாலும் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் மட்டுமா நகரை ஆட்சி புரிந்த வாகூரன் என்னும் அரசனின் மகன் பிரசன்ன சித்து திருக்கோவில் முருகனின் திருப்பணிகளைச் செய்ததுடன் பின் கலிங்க நாட்டு இளவரசன் புவனேயகவாகு என்பவன் மகப்பேறு வாய்க்க வில்லையென்றும் பிரசன்ன சித்துவுடன் நட்பு கொண்டு பிரசன்ன சித்துவின் வேண்டுகோளின்படி திருக்கோயிலின் திருப்பணிகள் செய்வதற்காக சோழ நாட்டில் இருந்து சோழ மன்னர்களின் அரசன் உதவியுடன் தச்சர்கள் சிற்பிகள் மற்றும் கட்டிடப் பொருட்களுடன் திருக்கோவில் துறைமுகத்தை வந்தடைந்தடைந்தனர்.
 
இதனையடுத்து அவர்களின் உதவியுடன் அழகிய தூபிகளுடன் கூடிய மாடங்கள் வீதிகள் அமைத்து சிறப்பான ஆகம முறையிலான மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெரு விழா செய்து வைத்து ஆலயத்தை பாராமரிக்கும் பொறுப்பை பிரசன்ன சித்துவிடம் கயவாகு மன்னன் கையளித்ததாகவும் திருக்கோவில் முருகன் அருளால் மழைக்காலத்தில் அழகான ஆண் குழந்தை கிடைத்ததாகவும் அக்குழந்தைக்கு மேகவருணன் என பெயர் சூட்டி மகிழ்ந்தான்.
 
மட்டக்களப்பு தேசத்தில் தோன்றிய பெருங் கற்கோயில்களில் திருக்கோவிலும் சிறப்பு பெறுவதுடன் கயவாகு மன்னனைத் தொடர்ந்து அவனது மகன் மேகவருணன் சிறப்பான ஆலய திருப்பணிகளை மேற்கொண்டு வந்ததுடன் இவனது திருப்பணிக் காலத்திலேயே ஆலயத்திற்கு முறையான ஆலய பூஜைகளை முன்னெடுக்கும் நோக்குடன் நாற்பது சோழ குடி மக்களையும் பூஜை திரவியங்களையும் அனுப்பி வைத்தான் அவ்வாறு வந்தவர்களை வரவேற்று “தம்பட்டர்” எனும் பட்டம் சூட்டியதாக கூறப்படுகிறது. இங்கு ஆலய பூஜை செய்ய மல்லிகார்ச்சுனம் என்னும் இடத்தில் இருந்து ஆதிசைவ மரபினரான வீரசங்கம குருமார்கள் அழைக்கப்பட்டு அவர்களிடம் பூஜை செய்யும் பொறுப்புக்களை கையளித்து அவர்களுக்கென தம்பட்டை என்னும் பெயரில் கிராமம் ஒன்றினை உருவாக்கி அவர்களை நிலையாக இருத்தி ஆலயத்தின் பூஜை பணியை கொடுத்தான்.
 
கயவாகு மன்னனின் மகன் மேகவருணனனைத் தொடர்ந்து ஆலயத்திருப்பணிகளை மகள் ஆடகசவுந்தரி ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின் தொடர்ந்து தந்தையின் பணியியை முன்னெடுத்த ஆடகசவுந்தரி திருப்பணிகளை மேற்கொண்டதுடன் ஆடி அமாவாசைத் திருவிழாவின் இறுதி நாளான தீர்த்த உற்சவத்தின் போது மாமங்கைத் தீர்த்தம் கொண்டு வந்து கடலில் விட்டு தீர்த்தமாடும் சம்பிரதாயத்தைக் கொண்டிருந்ததாகவும், இதனைத் தொடர்ந்த மாகன், குளக்கோட்டன் மற்றும் பாண்டியர்கள் பாலசிங்கன் என்ற அரசன் தனது மனைவி சீர்பாத தேவியுடன் வந்து தங்கி திருப்பணிகள் செய்யப் பெற்ற சிறப்பு மிக்க திருத்தலமாக திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் சிறப்பு பெறுகின்றது.
 
திருக்கோவில் ஆலயத்தின் திருவிழா, ஆடி அமாவாசைக்கு பதினெட்டு நாட்கள் முன்தொடங்கி, அமாவாசை அன்று, தீர்த்தோற்சவத்துடன் நிறைவுறுகின்றது. ஆடி அமாவாசையன்று, இலட்சக்கணக்கில் திருக்கோவிலில் அடியார் கூடும் இந்நிகழ்வு, தென்கிழக்கிலங்கையில் "தீர்த்தம்" அல்லது "தீர்த்தக்கரை" என்றே அறியப்படுவதுடன், அன்று, திருக்கோவில் சமுத்திரத்தில் நீராடுவது, புண்ணியம் சேர்க்கும் என்ற நம்பிக்கையும் அடியவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அருகிலுள்ள விமான நிலையம் : மட்டக்களப்பு, கொழும்பு
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : மட்டக்களப்பு  
 
பேருந்து வசதி  : உண்டு 
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×