44. அஷ்டபுயகரம்
	


		
 
	
 
6:45:41 PM         Sunday, March 29, 2020

44. அஷ்டபுயகரம்

Product Code: 44. அஷ்டபுயகரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

    அஷ்டபுயகரம்

திருத்தல இருப்பிடம்    :    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து மேற்கே 1  கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மூலவர்    :    ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திரவரதன். 
                  அஷ்டபுஜப் பெருமாள், 

தாயார்    :    அலர் மேல் மங்கை, பத்மாஸினி., புஷ்பவல்லி

தீர்த்தம்    :    கஜேந்திர புஸ்கரிணி

விமானம்    :    சக்ராக்ருதி விமானம்

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பேயாழ்வார் - 1 பாசுரம்

திருத்தலச் சிறப்புகள்    :    மூலவர் நின்ற கோலத்தில் எட்டுக் கரங்களுடன் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். அந்த எட்டு கைகளில் ஆயுதங்களுடன் வலதுபுறம் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு, இடது புறம் சங்கு, வில் கேடயம், கதை என அட்டபுயகரத்தோனாக விளங்குகிறார். கருடன் மேல் வீற்றிருக்கும் பெருமாள், ஆதிசேடன் கீழ் கண்ணன், ஆதிசேட தம்பதிகள் தாங்கிய வண்ணம் லட்சுமியுடன் பூவராஹர் விசேஷம்.

உற்சவருக்கு நான்கு புஜங்களே உள்ளன. கரையும் வேலும் உண்டு. நரசிம்மனைக் கொல்ல வேண்டும் என்று வந்த சரபம், அஷ்டபுஜத்தானைக் கண்டு பயந்து, விஷ்ணுவை சரணம் அடைந்தது. பகவான் ஆக்ஞைப்படி யாகசாலைக்கு வாயு மூலையில் சரபேசன் என்ற பெயருடன் சிவன் யாகத்தை காப்பதாக ஐதீகம். ஒரு யானை, ஸீக்ருத விசேஷத்தினால் ஆண்டுபுஜக் குளத்தில் தாமரைப்பூ பறித்து எம்பெருமாளை ஆராதித்து வரும்பொழுது ஒரு நாள் யானையை குளத்தில் ஒரு முதலை பிடித்துக் கொள்ள, யானை பகவானை சரணடைய, பகவான் தம் ஸ{தர்சனத்தினால் அந்த முதலையைக் கொன்று யானையை ரட்சித்த ஸ்தலம். ஸ்ரீஸ்வாமி தேசிகனும் மணவாளமாமுனிகளும் மங்களாசாசனம் செய்த இடம்.

பிரம்மன் சரஸ்வதி இன்றி தானே உலக நன்மைக்காக யாகம் செய்ய அதை சரஸ்வதி தடுக்க எண்ணி, காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களையும் அனுப்பினாள். காளியின் கொட்டத்தை அடக்கவே பெருமாள் 8 கரங்களுடன் தோன்றி அரக்கர்களை அழித்து, காளியை அடக்கி அட்டபுயக்கரத்தோனே ஆதிகேசவப் பெருமாளாக இங்கு எழுந்தருளியுள்ளார்.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×