63. திருக்கடல்மல்லை




	


	



























	




 




	








 




3:36:13 AM         Tuesday, February 18, 2020

63. திருக்கடல்மல்லை

63. திருக்கடல்மல்லை
63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை 63. திருக்கடல்மல்லை
Product Code: 63. திருக்கடல்மல்லை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                          திருக்கடல்மல்லை

திருத்தல இருப்பிடம்    :    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கடல்மல்லை என்னும் மகாபலிபுரம் சென்னைக்கு தெற்கே 64 கி.மீ. தொலைவில் உள்ளது.

மூலவர்    :    ஸ்தலசயனப் பெருமாள் 

உத்ஸவர்    :    உலகுய்ய நின்ற பெருமாள்

தாயார்    :    நிலமங்கைத் தாயார்

தீர்த்தம்    :    புண்டரீக புஷ்கரிணி, கருட நதி

விமானம்;    :    ககனாக்ருதி விமானம், (அனந்த நிலை விமானம்)

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் 26 பாசுரங்கள்
            பூதத்தாழ்வார் - 1 பாசுரம்
மொத்தம்    :    27 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் : இங்கு மூலவர் புஜங்கசயனம், கிழக்கே திருமுகமண்டலம், வலது திருக்கரத்தை திருமார்பின் மீது உபதேசமுத்திரையாக வைத்து “ஞானத்தமிழ் புரிந்த நான்” என்பதை விளக்குகிறார்) உற்சவர் கையில் ஒரு சிறு தாமரை மொட்டுடன் காண, அதை அவரே மூலவரின் பாதங்களில் சேர்ப்பதாக ஐதீகம். பூதத்தாழ்வாரின் அவதார தலம் இது. லட்சுமி, நரசிம்மர், ஸ்ரீராமர், ஆண்டாள் சந்நிதிகள் உள்ளன. 

    ஒரு சமயம் புண்டரீக மகரிஷி தாமரை மலர்களைக் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளிக் கொண்டுள்ள பெருமாளை வழிபடச் செல்லும் போது, வழியில் சமுத்திரத்தைப் பார்க்க, நீரைக் கைகளால் இறைத்துக் கொண்டிருக்க, இவரது பக்தியை பாராட்டிய பெருமாள் ஒரு முதியவர் வேடங்கொண்டு இவரிடம் வந்து உண்ணுவதற்கு ஆகாரம் கேட்க, அந்த நிலையிலும் அவருக்கு உணவு கொடுக்க எண்ணிய ரிஷி, தன் கையிலிருந்த மலர்களை கொடுத்து இருக்கச் சொல்லி, தான் சென்று உணவு கொண்டு வருவதாக கூறினார். அவர் திரும்ப வருவதற்குள் பெருமாள் மாமல்லைக் கடலில் ரிஷி கொண்டுவந்த பூக்களையெல்லாம் சூடிக்கொண்டு, ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் கோலத்தைக் காட்டினார். முனிவர் வணங்கி தனக்கு பாதத்தருகில் அமரும் பேறு வேண்டும் என்று கேட்டார். பகவானும் அருளினார். இவ்வாறு இத்தலத்தில் பெருமாள் தரையிலே ஆதிசேடன் மீது சயனித்திருக்க, ‘தலசயனப் பெருமாள்’ என்ற பெயர் பெற்றார். புண்டரீக மஹரிஷி கை கூப்பிய வண்ணம் அருகில் உள்ளார்.

இது அனைத்து வசதிகளும் கொண்ட இடம் ஆகும். இது கலைச் சிறபங்கள் நிறைந்த ஸ்தலமாகும். கடற்கரையிலிலுள்ள பூஜையில்லாத கோயிலிலும் ஸ்தலசயனப் பெருமாள் அழகாகச் சயனித்திருக்கிறார்.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    செங்கல்பட்டு

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 952 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0