59. திருஎவ்வுள் 




	


	



























	




 




	








 




3:02:35 AM         Tuesday, February 18, 2020

59. திருஎவ்வுள்

59. திருஎவ்வுள்
59. திருஎவ்வுள் 59. திருஎவ்வுள் 59. திருஎவ்வுள் 59. திருஎவ்வுள் 59. திருஎவ்வுள் 59. திருஎவ்வுள் 59. திருஎவ்வுள் 59. திருஎவ்வுள் 59. திருஎவ்வுள் 59. திருஎவ்வுள்
Product Code: 59. திருஎவ்வுள்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                      திருஎவ்வுள்

திருத்தல இருப்பிடம்    :    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை – அரக்கோணம் ரயில் பாதையில் அமைந்துள்ளது.. சென்னையில் இருந்து திருப்பதி பஸ்கள் செல்லும் வழியில் அமைந்துள்ளது இத்தலம். ரயிலடியிலிருந்து கோயில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து பல வெளியூர் பஸ்களில் நேராக கோயில் வாசலுக்கே செல்ல முடியும். காரில் திருப்பதி செல்பவர்கள் வழியில் இந்த ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டுச் செல்வர்.

மூலவர்    :    வீரராகவப் பெருமாள்

தாயார்    :    கனகவல்லி (வசுமதி தேவி)

தீர்த்தம்    :    ஹ்ருத்தாபநாசினி புஷ்கரிணி

விமானம்    :    விஜயகோடி விமானம்

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 11 பாசுரங்கள்
            திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
மொத்தம்        12 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்    :    இங்கு மூலவர் புஜங்கசயனத்தில் கிழக்கே திருமுகம் கொண்டு வலது திருக்கையை சாலிஹோத்ர முனிவரின் தரைமீது வைத்தபடியும் நான்முகனுக்கு வேதங்களை உபதேசிக்கும் வண்ணமாக இடது திருக்கரத்தில் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். அமாவாசையன்று இந்த புஷ்கரிணியில் ஸ்நானம் செய்வது மிகவும் புண்யகரமானது. இது அஹோபிலமடம் ஜீயரின் மேற்பார்வையில் உள்ளது. திருமால் சாலிஹோத்ச மஹரிஷிக்கு ப்ரத்ய~மாகி, “உறைதற்குரிய உள் எவ்வுள்” என்று வினவியதால் இத்தலத்திற்கு திரு எவ்வுள் என்ற திருநாமம் உண்டாயிற்று. மதுகைடபர்களைக் கொன்று வேதியர்களையும் தாபஸர்களையும் ரச்சித்த ஸ்தலம். ஹ்ருத்தாபநாச புஷ்கரிணியில் தீர்த்தமாடி, வீரராகவனையும் விஜயகோடி விமானத்தையும் சேவிப்பதனால் எல்லா நோய்களும் அழியுமாதலால் பகவானுக்கு ‘வைத்ய வீரராகவன்’ என்ற திருநாமமும் உண்டு. ராமலிங்க அடிகளார் தன் தீராத வயிற்றுவலியை நீக்கிய இப்பெருமாள் பேரில் “போற்றி பஞ்சகம்” பாடியுள்ளார்.

    அருகில் ஸ்ரீநிவாஸப் பெருமாள், ஸ்ரீவராஹஸ்வாமி, காக்கவூரில் ஆஞ்சநேயர், மற்றும் வடக்கு குளக்கரையில் தீர்த்தஸ்வரஸ்வாமி கோயில்கள் உள்ளன.

தனிச்சிறப்பு :
இத்தலத்தில் உள்ள புஷ்கரிணியில் அம்மாவாசையன்று குளித்தால் தீராத வியாதிகள் குணமடையும் என்று கூறப்படுகிறது. பக்தகோடிகள் அனைவரும் உப்பு மற்றும் மிளகினை கடவுளுக்கு காணிக்கையாக்கி வழிபட்டு செல்வார்கள்.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    சென்ட்ரல்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×
Warning: file_put_contents(): Only 0 of 952 bytes written, possibly out of free disk space in /home/karmaorg/public_html/vqmod/vqmod.php on line 330Warning: Unknown: write failed: Disk quota exceeded (122) in Unknown on line 0Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/opt/alt/php54/var/lib/php/session) in Unknown on line 0