57. திருப்புட்குழி
	


		
 
	
 
6:10:32 PM         Sunday, March 29, 2020

57. திருப்புட்குழி

57. திருப்புட்குழி
57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி 57. திருப்புட்குழி
Product Code: 57. திருப்புட்குழி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                       திருப்புட்குழி

திருத்தல இருப்பிடம்    :    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்திலிருந்து மேற்கே 11 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலுசெட்டி சத்திரத்திலிருந்து நடக்கும் தொலைவில் தான் உள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டு கோயிலாகும்.

மூலவர்    :    விஜயராகவப் பெருமாள் 

தாயார்    :    மரகதவல்லி தாயார்

தீர்த்தம்    :    ஜடாயு தீர்த்தம்

விமானம்    :    விஜயகோடி விமானம் (வீரகோடி விமானம்)

ப்ரத்ய~ம்    :    ஜடாயு.

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள் :    இங்கு மூலவர் ஜடாயு வேண்டுதலுக்கு இணங்கி பரமபதத்தில் இருக்கும் வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு காட்சி தருகிறார். பிள்ளைப் பேறு வேண்டும் பெண்கள் கொஞ்சம் பயிற்றை மடைபள்ளியில் கொடுத்து, வறுத்து நனைத்து மடியில் கட்டிக்கொண்டு தூங்குவார்கள், வறுத்த பயிர் முளைத்தால் பிள்ளைப்பேறு உண்டு என்று அர்த்தமாம். தாயார் மகிமையால் வறுத்த பயிறு முளைப்பதால் (மரகதவல்லி) என்று திருநாமம் ஏற்பட்டதாகப் புராண வரலாறு. ராமானுஜரின் குருவான யாதவப்ரகாசர் இங்குதான் சிஷ்யர்களுக்கு (குறிப்பாக ராமானுஜருக்கு) வேதாந்த பூர்வப~ங்களைக் கற்பித்தார்.

    வாமன புராணத்தில் இத்தலத்தைப் பற்றி விசேஷம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தலத்தில் சீதையைத் தேடப் போன போது ராமன் சிறிது காலம் தங்கி இருந்ததாகவும் அப்போது ஜடாயுவுக்குத் தர்ப்பணம் செய்து மோ~மளிக்க, பூமியைக் கீறிக் கங்கையை ஆவாஹணம் செய்து ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கியதாகவும், எனவே இத்தலத்திற்குத் திருப்புட்குழி என்று பெயர் ஏற்பட்டது என்று கூறுவர். மூலவர் தொடையின் மேல் ஜடாயுவை வைத்துக் கொண்டு தாபத்தை தாங்க முடியாத ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் வலமாக மாறி எழுந்தருளியுள்ளனர். நம்பிள்ளையின் சி~;யரான பின்பழகாரம் பெருமாள் ஜீயர், திருப்புட்குழி ஜீயர் முதலிய மகான்கள் அவதரித்த ஸ்தலம் இதுவே. இந்த ஊர் குதிரை வாகனம் உண்மையான குதிரைபோல அசையும் உறுப்புகள் கொண்டது. ஸ்ரீராமாநுஜரும், ஸ்ரீமணவாளமுனிகளும் பல முறை மங்களாசாசனம் செய்த இடம். நிகமாந்த தேசிகனுக்கும், மணவாளமாமுனிக்கும் தனி சந்நிதிகள் உண்டு.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×