52. திருக்காரகம்
	


		
 
	
 
6:15:32 PM         Sunday, March 29, 2020

52. திருக்காரகம்

52. திருக்காரகம்
52. திருக்காரகம் 52. திருக்காரகம் 52. திருக்காரகம் 52. திருக்காரகம் 52. திருக்காரகம் 52. திருக்காரகம்
Product Code: 52. திருக்காரகம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                திருக்காரகம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய காஞ்சியில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் பிரகாரத்தில் இருக்கிறது. இதற்கு ‘காரகம்’ என்று பெயர்.

மூலவர்    :    கருணாகரப் பெருமாள்
 
தாயார்    :    பத்மாமணி நாச்சியார்
 
தீர்த்தம்    :    அக்ராய தீர்த்தம்

விமானம்    :    வாமன விமானம், ரம்ய விமானம்.

மங்களாசாசனம்:    திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்

திருத்தலச் சிறப்புகள் : இந்த திவ்ய தேசம் ஊரகத்தில் (பெரிய காஞ்சியில்) உட்சன்னிதியாக உள்ளது. கார்ஹமகரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத் தவமிருந்து ஞானம் பெற்றதால் அவர் பெயரைக் கொண்டே இந்த திவ்ய தேசம் 'காரகம்' என்று விளங்கிற்று.

        உலகளந்த பெருமாள் சந்நிதியில் மூன்றாவது பிரகாரத்தில் ரம்ய விமானத்தின் கீழ், வடக்கு நோக்கி ஆதிசேடன் கிழ் வீற்றிருந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இப்பெருமாள் கல்வி, அறிவு வளர அருள் கொடுப்பவர். பிள்ளைப் பெருமாளையங்கார் தமது 108 திருப்பதியந்தாதியில், இப்பெருமாளை கல்வி மற்றும் அறிவு வளர அருள் பொழிபவர் என்கிறார். நல்ல கல்வியும் நல்லகுலமும், நல்ல புகழும் உடையவர்கள் மேலும் அதனைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென எண்ணுபவர்கள் இக்காருலகத்துப் பெருமாளை வணங்க வேண்டும் என்று கூறுகிறார்.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×