50. திருஊரகம்
	


		
 
	
 
5:28:40 PM         Sunday, March 29, 2020

50. திருஊரகம்

50. திருஊரகம்
50. திருஊரகம் 50. திருஊரகம் 50. திருஊரகம்
Product Code: 50. திருஊரகம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    திருஊரகம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய காஞ்சிபுரம் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இருக்கிறது. இத்தலத்தை உலகளந்த பெருமாள் என்று கூறுவர். காமாட்சி அம்மன் கோயிலுக்கு எதிர்புறம் உலகளந்த பெருமாள் கோயில் என்று அறியப்படும் தலம்.

மூலவர்        :    திருவிக்ரமன், உலகளந்த பெருமாள் 

உத்ஸவர்        :    பேரகத்தான்

தாயார்        :    அமுதவல்லி நாச்சியார், அம்ருதவல்லி

தீர்த்தம்        :    நாகதீர்த்தம், (சேஷ தீர்த்தம்)

விமானம்        :    ஸாரஸ்ரீகர விமானம்.

மங்களாசாசனம்    :    திருமழிசையாழ்வார் - 2 பாசுரங்கள்
                திருமங்கையாழ்வார் - 4 பாசுரங்கள்
மொத்தம்        :    6 பாசுரங்கள்
 
திருத்தலச் சிறப்புகள்: மூலவர் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். பெருமாள் சந்நிதிக்கு பக்கத்தில் பகவான், ஆதிசேஷனாகத் திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார். நான்கு திவ்ய தேசங்களுக்கும் ஒரே உற்சவர் இங்கு எழுந்தருளியுள்ளார்.
    
இந்த திவ்ய தேசமான ஊரகத்துக்குள்ளேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய மூன்று திவ்ய தேசத்து எம்பெருமாள்களும் எழுந்தருளியிருக்கின்றனர். ஆக நான்கு திவ்ய தேசங்களும் ஒரே தலமாக உள்ளன. பலிசக்ரவர்த்தி பகவானைப் பணிந்து பகவான் த்ரிவிக்ரமவதாரம் செய்தபொழுது பகவான் திருவடியின்கீழ் அகப்பட்டுக் கொண்டபடியால் திரிவிக்ரமகோலத்தை சேவிக்க முடியவில்லை. ஆகையால் திரிவிக்ரம கோலத்தை சேவிக்க வேண்டும் என்கிற பிரார்த்தனைக்கிணங்க ஸத்யவ்ரத சேத்ரத்தில் (காஞ்சிபுரத்தில்) அந்த அவதாரத்தை எடுத்துக் காண்பித்ததாக உலகளந்த பெருமாள் கோயில் வரலாறு. உலகளந்த பெருமாள் ஊரகம் இரண்டும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. மிகப் பெரிய திருவுருவத்தை நிமிர்ந்து சேவிக்க முடியாமல் போன மஹாபலிக்காக உலகளந்த பெருமாள் சந்நிதிக்குப் பக்கத்தில் ஒரு சிறிய சந்நிதியில் எம்பெருமான் ஆதிசேஷனாய் திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார். இங்கு அனைத்து வசதிகளும் உள்ளது.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×