46. திருவேளுக்கை
	


		
 
	
 
4:56:39 PM         Sunday, March 29, 2020

46. திருவேளுக்கை

46. திருவேளுக்கை
46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை 46. திருவேளுக்கை
Product Code: 46. திருவேளுக்கை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                   திருவேளுக்கை

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அஷ்டபுயகரத்திலிருந்து தென் மேற்குத் திசையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர்    :    அழகியசிங்கர், நரசிம்மன், முகுந்த நாயகன்
        
தாயார்        :    வேளுக்கைவல்லி, அமிருதவல்லி

தீர்த்தம்    :    கனக ஸரஸ், ஹேம ஸரஸ், ப்ரகலாத தீர்த்தம்

விமானம்    :    கனக விமானம்

மங்களாசாசனம்    :    பேயாழ்வார் - 3 பாசுரங்கள்
        திருமங்கையாழ்வார் -1 பாசுரம்
மொத்தம்    :    4 பாசுரங்கள்

திருத்தலச் சிறப்புகள்: இங்கு மூலவர் பத்மாசன திருக்கோலம் கொண்டு மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட இரண்யன் அழிந்தான் பின்பு அங்கிருந்த அசுரர்களை விரட்டிக் கொண்டே சென்றார். இவ்விடத்திற்கு வந்ததும் அசுரக் கூட்டங்கள் காணாமல் ஓடி ஒளிந்து கொண்டன. இனி அசுரர்கள் மீண்டும் வந்தால் அவர்களை எதிர்ப்பதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று எண்ணி இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். அதனால் இவ்விடத்திலேயே யோக நரசிம்மராக எழுந்தருளியுள்ளார். நரசிம்ம மூர்த்தி இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் இது 'வேளுக்கை' என்றாயிற்று. யோக நரசிம்மராக எழுந்தருளியிருக்கும் இவர் சிறந்த வரங்களைக் கொடுப்பவராவார்.
எல்லாமே தனக்குரியது என்று எண்ணி ஆணவம் கொண்ட மன்னன் இரண்யனைப் பெருமாள் அழித்தார். எல்லாமே பெருமாளுக்கு உரியது என்று எண்ணிய பிரகலாதனை ஆட்கொண்டார். இந்த வேளுக்கையில் எழுந்தருளியிருக்கும் ஆளரியே உன் திருவடி எண்ணாதவர்க்கு வேறு யார் உதவி கிடைக்க முடியும் என்று நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பிள்ளைப் பெருமாளயங்கார் பாடியுள்ளார்.
12 ஆண்டுகட்கு முன் இந்த சந்நிதி ஜீர்ணோத்தாரணம்  செய்யப்பட்டுள்ளது.

விமானதளம்    :    சென்னை

ரயில் நிலையம்    :    காஞ்சிபுரம்

பஸ் வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×